ஒரு மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகம், என்ன விந்தையாக இருக்கிறதா, இது கண்டிப்பாக இரு சக்கர வண்டிக்கோ, மகிழுந்துக்கோ, விமானத்துக்கோ இல்லை. விண்வெளிக்கு போகும் ராக்கெட் திரும்பி பூமிக்கே வராமலிருக்க தேவையான வேகம் தான் இது. நண்பர் மேலிருப்பான் சமிபத்தில் அவர் எழுதிய மறுமொழியில் இயற்பியல் சம்பந்தப்பட்ட இடுகைகளை அளிக்குமாறு கேட்டு கொண்டிருந்தார் அவரின் விருப்பத்திற்கேற்ப சில இயற்பியல் சம்பந்தப்பட்ட விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன். இந்த இடுகை ராக்கெட் புவியின் ஈர்ப்பு விசையை தாண்டி மேலே போவதை பற்றிய தகவல். இந்த அண்டத்தில் எல்லா பொருள்களுக்கும் ஒரு ஈர்ப்பு விசை இருக்கிறது, பூமியில் இருக்கும் [...]
ஜூலை, 2010 க்கான தொகுப்பு
ஒரு மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகம்
Posted: ஜூலை 31, 2010 in இயற்பியல் தகவல்குறிச்சொற்கள்:நியூட்டன், புவியீர்ப்பு விசை, ராக்கெட், விடுபடு திசைவேகம், earth, escape velocity, gravity, newton, rocket
உலகின் அதிவேக இணையம்…
Posted: ஜூலை 30, 2010 in தகவல்கள்குறிச்சொற்கள்:இணையம், சுவிட்சர்லாந்து, சுவீடன், செக் ரிபப்ளிக், ஜப்பான், டென்மார்க், தென்கொரியா, நெதெர்லாந்து, மாசன், ரோமானியா, லத்வியா, ஹாங்காங், czech republic, demark, hongkong, internet, japan, latvia, masan, nedherland, romania, southkorea, sweeden, switzerland
உலகின் இணையம் வேகமாக இயங்கும் நாடு எது தெரியுமா? தென்கொரியா. சராசரியாக உலகின் இனைய வேகம் 1 .7 Mbps . சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றில் தென் கொரியாவில் உள்ள மாசன் என்ற நகரம் 12 Mbps வேகத்திற்கு இணையம் இயங்கும் நகரம் என்று தெரிய வந்துள்ளது. அதற்கடுத்து ஹாங்காங் 9 Mbps ஜப்பான் 7 .8 Mbps வேகத்துடன் முறையே இரண்டாவது மூன்றாவது இடத்தில உள்ளது. முதல் 10 இடங்களை பிடித்த நாடுகளின் வரிசை பட்டியலை கிழே காணலாம். 01 தென் கொரியா 12 Mbps 02 ஹாங்காங் 9 Mbps 03 ஜப்பான் 7 .8 Mbps 04 [...]
பதேர் பாஞ்சாலி
Posted: ஜூலை 29, 2010 in உலக சினிமாகுறிச்சொற்கள்:appu, அப்பு, கேன்ஸ், சத்யஜித்ரே, துர்கா, பதேர் பாஞ்சாலி, பிபூதிபூசன் பண்டோபாத்யாய், ஹரிஹர், cannes film festival, durga, pather panchali, satyajitray
பிபூதிபூசன் பண்டோபாத்யாய் என்பவர் எழுதிய நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. வங்காளத்தின் ஒரு கிராமிய சூழலில் இந்த படத்தின் களம் அமைந்திருக்கிறது. ஹரிஹர் என்பவர் ஒரு ஏழை பிராமணன், அவருக்கு வேதம் ஓதுதலை விட எழுத ரொம்ப பிடிக்கும், தனது எழுத்தாற்றல் அவருடைய வறுமையை போக்கும் என்ற நினைப்பில் நிறைய எழுதுகிறார் துருதிஷ்டவசமாக அவருடைய படைப்புகள் எதுவும் அவர் வறுமையை போக்கவில்லை. ஹரிஹரின் மனைவி சர்பஜெயா, கிடைக்கும் வருமானத்தில் தன் குடும்பத்தை ஒருவாறு நிர்வகித்து கொண்டிருக்கிறாள். ஹரிஹர் சர்பஜெயா தம்பதிக்கு [...]
சத்யஜித்ரேவின் துப்பறியும் கதைகள்
Posted: ஜூலை 28, 2010 in படித்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:இயக்குனர், காமிக்ஸ், சத்யஜித்ரே, சந்தேஷ், சோனார் கேளா, ஜெய் பாபா பெலுநாத், துர்கா பூஜை, பெலுடா கதைகள், யக்க்ஷி, comics, durga pooja, feluda, joy baba felunath, satyajitray, sonar kella, yakshi
சத்யஜித்ரேவை நமக்கு பலரில் உலகப்புகழ் பெற்ற இயக்குனராக தெரியும். அதுவும் கலைப்பட இயக்குனர், யதார்த்த சினிமா என்கிற பேரில் மெதுவாக போகும் படங்கள் என்று வெகுஜன மக்களால் கூறப்படும் படங்களை தான் நாமறிவோம். ஆனால் அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வகையில், திருப்பங்களுடன் கூடிய துப்பறியும் கதைகளை எழுதுவார் என்பது சமிபத்தில் கைலாஷில் ஒரு கொலையாளி என்ற அவரது கதையை படித்தபின் தான் தெரிந்தது. கதையின் முன்னுரையில் சத்யஜித்ரே சிறு வயதில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் அதுவே அவருக்கு இந்த [...]
பிளாஸ்டிக் கழிவினால் ஒரு படகு
Posted: ஜூலை 27, 2010 in தகவல்கள்குறிச்சொற்கள்:australia, awareness, ஆஸ்திரேலியா, கட்டுமரம், சிட்னி, நாடிக் மைல, பசிபிக் பெருங்கடல், படகு, பிளாஸ்டிக், விழிப்புணர்ச்சி, nautic mile, plastic, plastiki, sydney, world water day
12500 காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து ஒரு படகு(கட்டுமரம்) தயாரித்து, பசிபிக் பெருங்கடலில் 8000 நாடிக் மைல்களை கடந்து ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியை world water dayவான நேற்று வந்து அடைந்தது. இந்த முயற்சி மக்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்க மேற்கொள்ளப்பட்டதாக பயணம் மேற்கொண்ட குழுவினர் தெரிவுத்துள்ளனர். வேடிக்கையாக சொல்வார்கள் பிளாஸ்டிக்கும் கடவுளும் ஒன்று அவர்களை அழிக்கவே முடியாது என்று, இன்றைக்கு உள்ள துரித உலகில் பிளாஸ்டிக் நமது அன்றாட வாழ்கையில் மிகவும் இன்றியமையாத ஒரு பங்கு வகிக்கிறது, பிளாஸ்டிக்கின் அழிக்க முடியாத தன்மையினால் அதன் உபயோகத்தை குறைக்க சர்வதேச அளவில் பெருமுயற்சிகள் எடுக்கபடுகின்றன, இப்போது மறு உபயோகப்படுத்தபடும் பிளாஸ்டிக் தான் பெரும்பாலும் உபயோகத்தில் இருக்கிறது, உபயோகிக்கவேண்டும் என்றும் அரசாங்ககள் கட்டயப்படுத்துகின்றன. இதனை முன்னிருத்தியே இந்த [...]
“வணக்கம் துயரமே”
Posted: ஜூலை 26, 2010 in படித்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:காலச்சுவடு, நாகரத்தினம் கிருஷ்ணா, பிரான்சுவாஸ் சகன், பிரெஞ்சு நாவல், பெண்ணியவாதி, வணக்கம் துயரமே, Bonjour Tristesse, charming little monster, Françoise Sagan, hello sadness
பிரெஞ்சு இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் “வணக்கம் துயரமே”( Bonjour Tristesse). நாவலாசிரியர் பிரான்சுவாஸ் சகன் பிரெஞ்சு இலக்கியவாதிகளில் மிக முக்கியமான படைப்பாளி, தீவிரமான பெண்ணியவாதி. இந்நாவலில் 17 வயது இளம் பெண் ஒருத்தியின் உடல், மன, பாலுணர்வு உளைச்சல்கள், நாவல் வெளிவந்த காலத்து சமூக நெறிகளை அலட்சியபடுத்தி சொல்லப்பட்டதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் வாசகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. 1954 ல் முதல்பதிப்பு வெளிவந்த ஓரிரு நாட்களிலேயே 3000 புத்தகங்கள் விற்று தீர்ந்தன, ஓராண்டுக்கு பிறகு எட்டரை லட்சத்தை [...]
ஒரே DVD ல் 2000 திரைப்படங்கள்
Posted: ஜூலை 24, 2010 in தகவல்கள்குறிச்சொற்கள்:australia, ஆஸ்திரேலியா, சாம்சங், தொழில்நுட்பம், படங்கள், DIVX, DVD, movies, songs, sumsung, SWIRNBURNE, technology
ஒரே DVD ல் 2 அல்லது 3 திரைப்படங்களை பதிந்து விற்பனைக்கு வருவதை நாம் அறிவோம். DIVX fomrat ஆக இருந்தால் அதிகபட்சமாக 6 திரைப்படங்களை கூட பதிக்கலாம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஒரே DVD ல் 2000 படங்களை அல்லது 2 லட்சம் பாடல்களை பதிக்க கூடிய ஒரு தொழில்நுட்பம் தயாராகி கொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது இப்போதிருக்கும் DVD யை போன்று 10,000 மடங்கு திறன் கொண்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள SWIRNBURNE என்ற தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் இதற்கான ஆராய்ச்சிகள் வெகு ஜரூராய் நடந்து கொண்டிருகின்றன. குறுந்தகட்டின் அளவை அதிகரிக்காமலும் கோப்புகளின் bytes அளவை [...]
ஒரு போராளியின் கதை
Posted: ஜூலை 23, 2010 in படித்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:america, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தோ சீனா, கம்யூநிசம், கொரில்லா போர், சீனா, ஜப்பான், நிகுயன், பிரெஞ்சு, போராளி, வியட்நாம், ஹோ சி மின், communism, england, france, gorilla war, ho chi minh, indo china, japan, vietnam
சமிபத்தில் நான் படித்த இந்த நூல் ஒரு கம்யூநிச காம்ரேடின் வரலாறு. 1890 ல் பிரெஞ்சு ஆக்கிரமிப்பில் இருந்த வியட்நாமில் பிறந்த இவரின் இயற்ப்பெயர் நிகுயன். இளமையில் அவர் எவ்வளவு சிறந்த பண்புகளோடும் தேசபக்தி கொண்டவராகவும் இருந்தார் என்பதை நூல் நன்கு விளக்குகிறது, ஒரு சமையல் காரனாக அமெரிக்காவுக்கு செல்லும் கப்பலில் வேலையாளாக சேர்கிறார். பின் இங்கிலாந்து செல்கிறார் அங்கு சிலகாலம் பனிபுரிகிறார் அங்கிருந்து தங்கள் நாட்டை அடிமையாக்கி வைத்துள்ள பிரெஞ்சு தேசத்திற்கே வருகிறார். கம்யூநிசத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் ரஷ்யாவிற்கு பயணமாகிறார், ரஷ்ய கம்யூநிச அரசில் பணியமர்கிறார், பின்பு தாய்நாடு வருகிறார், அதற்குள் [...]
தரங்கெட்ட இந்தியா
Posted: ஜூலை 22, 2010 in அங்கலாய்ப்புகுறிச்சொற்கள்:இந்தியா, ஜனநாயக தரவரிசை, ஜப்பான், டென்மார்க், நியூஷிலாந்து, பின்லாந்த், democracy, denmark, india, japan, newzealand, WORLDAUDIT
உலகின் முதல் தர ஜனநாயக நாடு டென்மார்க், சமிபத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு துணுக்கு செய்தி இது. இது உண்மையா? பொய்யா? உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தரம் என்ன? இப்படி கேள்வி மேல் கேள்வி எழவே வலைத்தளத்தில் தேடி WORLDAUDIT.ORG என்ற வலைதளத்தின் இந்த புள்ளிவிவரங்களை கண்டறிந்தேன். உண்மையில் வியப்பாக தான் இருந்தது. ஜனநாயக தரத்தில் டென்மார்க் முதலிடத்தில் இருந்தது பத்திரிகை சுதந்தரத்தில் பின்லாந்த் முதலிடம். லஞ்சமில்லா நாடுகளில் நியூஷிலாந்து முதலிடம். ஜனநாயக [...]