உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும், எதிர்க்கட்சிகள் சொல்லும் முதன்மையான குற்றச்சாட்டு மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியை பற்றியதாக இருக்கும். இதில் கள்ளஒட்டு போடமுடியாது என்று இதை வடிவமைத்தவர்களும், ஆளும் கட்சியும், தேர்தல் கமிசனும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தே சொல்லிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இந்தக் கருவியில் கள்ள ஒட்டுப் பதிவு செய்ய முடியுமா? இந்த கேள்வி எல்லோர்க்கும் இருக்கும் ஒன்றே. இதை பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளார் ஹைதராபாத்தை சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் J. Alex Halderman, Rop Gonggrijp. இக்குழு கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஆய்வு பற்றிய கட்டுரையை வெளியிட்டுள்ளது, மேலும் [...]
ஆகஸ்ட், 2010 க்கான தொகுப்பு
மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியில் எப்படி கள்ளஒட்டு போடலாம்?
Posted: ஆகஸ்ட் 31, 2010 in பார்த்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:அலைபேசி, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, எலெக்ட்ரானிக் வோட்டிங் கருவி, ஒட்டுப்பதிவு, கள்ளஒட்டு, தேர்தல் கமிசன், யூ ட்யூப், ஹரிபிரசாத், ஹைதராபாத், cellphone, election commision, electronic volting machine, evm, government, hariprasad, hyderabad, india, J. Alex Halderman, Rop Gonggrijp, youtube
இன்று கலைவாணரின் நினைவு நாள்
Posted: ஆகஸ்ட் 30, 2010 in தகவல்கள்குறிச்சொற்கள்:என்.எஸ். கிருஷ்ணன், கலைவாணர், தமிழ் திரைப்படம், திரைப்படம், நகைச்சுவை, நகைச்சுவை நடிகர், நாடகம், comedian, comedy, kalaivaanar, movie, ns krishnan, play, tamil movie
இன்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள். ஏறத்தாழ 150 படங்களில் நடித்த கலைவாணர் தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தவர் . யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக தன் கருத்துகளை பரப்பியவர். சமீபத்தில் அவருடைய வாழ்க்கை தொகுப்பை கலைஞர் தொலைக்காட்சியில் மறக்க முடியுமா என்ற நிகழ்ச்சியில் பார்த்திருப்பீர்கள் அதிலிருந்து சில அறிய புகைப்படங்களை உங்களோடு அவரின் நினைவாக பகிர்ந்து கொள்கிறேன். [...]
தொடர் பதிவு: என் நினைவுகளின் நிர்வாணம்.
Posted: ஆகஸ்ட் 28, 2010 in அங்கலாய்ப்புகுறிச்சொற்கள்:கும்மிடிபூண்டி, சகோதரன், சென்னை, திருகழுக்குன்றம், திருவல்லிகேணி, திரை அரங்கு, துபாய், தொடர் பதிவு, நிர்வாணம், படைப்பாளி, ஸ்டெபிகிராப், blog, chennai, dubai, Gummidipoondi, padaipali, stefigraf, thetre, Thirukazhukundram, triplicane
இது ஓர் தொடர் பதிவு… நமக்கு சிறுவயதில் நேர்ந்த அனுபவங்களின் பகிர்வு… சிறு வயதில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் இந்த தொடர்பதிவில் நண்பர் படைப்பாளி என்னை இணைத்து கொண்டதற்கு முதலில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். நண்பர் தனது இடுகையின் முடிவில் என் களர்நிலத்தில் பயிர் செய்ய வேண்டும் என கூறி இருந்தார். அவரின் விருப்பத்திற்கிணங்க இதோ என் சிறு வயதின் சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் பிறந்தது திருகழுக்குன்றம் என்ற சென்னையை ஒட்டிய பகுதி, வாழ்ந்தது, வளர்ந்தது எல்லாம் சிங்கார [...]
உலகின் அதிக வசூலான ஆங்கிலமல்லாத திரைப்படம்
Posted: ஆகஸ்ட் 27, 2010 in உலக சினிமாகுறிச்சொற்கள்:apacalypto, அபகாலிப்டோ, இயேசு, ஏசு, சிலுவை, திரைப்படம், பேசன் ஆப் க்ரைஸ்ட், மிரமாக்ஸ், மெல்கிப்சன், மொழி, லத்தின், வசூல், வன்முறை, ஹிப்ரூ, boxoffice, hebrew, jesus, jesuschrist, latin, mel gibson, miramax, movie, the passion of the christ
பேசன் ஆப் க்ரைஸ்ட் (PASSION OF CHRIST ) மெல் கிப்சன் இதுவரை இயக்கிய 4 திரைப்படங்களில் என் மனம்கவர்ந்த இரண்டாவது படம், முதல் படம் எல்லோருக்கும் பிடித்த அபகாலிப்டோ. இந்த இடுகை பேசன் ஆப் க்ரைஸ்ட் பற்றியது. முதலில் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பதற்கு கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. மதத்தை முன்னிறுத்தி எடுத்த படத்தில் என்ன பெரிதாக இருந்து விட போகிறது மேலும் இயேசுவின் கதை எத்தனையோ படங்களில் பார்த்தாகி விட்டது இதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்றே நினைத்தேன், ஆனால் [...]
புரட்சி – சிங்கத்தை விரட்டிய காட்டெருமைகள்
Posted: ஆகஸ்ட் 26, 2010 in பார்த்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:ஓரங்க நாடகம், காட்டெருமை, சிங்கம், நாடகம், புரட்சி, முதலை, யூ ட்யூப், buffalo, crocodile, lion, play, revolution, youtube
சில வருடங்களுக்கு முன் நான் பார்த்த இந்தக் காட்சி கோப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது சபாரி(safari ) எனப்படும், காடுகளின் ஊடே செல்லும் ஒரு சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட படம். இதில் ஒரு சிங்கக் கூட்டத்தில் ஒரு காட்டெருமை மாட்டிக்கொள்கிறது, ஒரு முதலையும் இந்த வேட்டையில் அழையா விருந்தாளியாக வருகிறது. ஒரு கட்டத்தில் காட்டெருமை கூட்டம் திரளாக வந்து சிங்கக் கூட்டத்தை வீழ்த்தி காட்டெருமையை மீட்கிறது. இது ஒரு சின்ன ஓரங்க நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். இது 8 நிமிடம் 24 செகண்டுகள் ஓடக்கூடிய ஒரு காட்சி. இதை பார்த்து [...]
குல்சாரி – உலகப் புகழ்பெற்ற ரஷ்ய குறுநாவல்
Posted: ஆகஸ்ட் 25, 2010 in படித்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:அதிகாரி, இரண்டாம் உலகப்போர், கம்யூனிசம், கிர்கீசியா, குதிரை, குறுநாவல், குல்சாரி, கூட்டுப்பண்ணை, சிங்கிஸ் ஐத்மாத்தவ், தொழிலாளி, நாவல், பட்டறை, பரப்புரை, புரட்சியாளர், ஸ்டாலின், blacksmith, Chinghiz Aitmatov, co-operative society, communism, communist, gulsary, horse, Kyrgyz, novel, rebel, stalin
கிர்கீசியாவில் பிறந்த சிங்கிஸ் ஐத்மாத்தவ் படைப்புகள் அனைத்தும் உலகப் புகழ் பெற்றவை குல்சாரி என்ற நாவல் அதில் ஒன்று. இரண்டாம் உலகப் போரில் சோவியத் சமுதாயத்தில் நடைபெற்ற எல்லாவற்றிற்கும் ஸ்டாலின் தான் காரணம் என்ற பரப்புரையை இந்த குறு நாவல் தகர்க்கிறது. சமூகப் போராட்டத்தை மிக நேர்த்தியாக குதிரையை(குல்சாரி) மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்த கதை படிப்போர் நெஞ்சை கவர்கிறது. இந்த குறுநாவலில் இடம் பெற்றுள்ள குதிரையும் மக்களும் நம்மோடு வாழ்ந்து பிரிகின்றனர். தானாபாய் என்ற வயது [...]
தோழர் ஞானியின் மறுமொழிக்கு என் பதில்
Posted: ஆகஸ்ட் 24, 2010 in அங்கலாய்ப்புகுறிச்சொற்கள்:assembly, ஊதிய உயர்வு, கம்யூனிசம், காவல் துறை, கோழி, சலுகைகள், செயலாளர், ஞானி, தனியார் நிறுவனம், தோழர், நாடாளுமன்ற உறுப்பினர், முட்டை, communism, gnani, india, MP, parliament, police, private sector, salaty hike, secretary
போதுமா இந்த ஊதிய உயர்வு? என்ற தலைப்பின் கீழ் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வை பற்றிய ஒரு இடுகையை உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கு மறுமொழியாக தோழர் ஞானி தனது கருத்தை வெளியிட்டு இருந்தார். பிற நாட்டு மக்கள் பிரதிநிதிகளின் ஊதியங்களுடன் ஒப்பிடுவது தவறு. அதுவும் டாலரை 47 ரூபாய் என்று கணக்கிட்டு மாற்றிப் பார்ப்பது தவறு. ஒரு காபி விலை இங்கே 10 ரூபாய் என்றால் அங்கே ஒரு டாலர். எனவே டாலரின் அந்த ஊர் மதிப்பு 10 ரூபாய்தான். பிற நாடுகளில் [...]
போதுமா இந்த ஊதிய உயர்வு?
Posted: ஆகஸ்ட் 23, 2010 in அங்கலாய்ப்புகுறிச்சொற்கள்:australia, ஆகஸ்ட், ஊதிய உயர்வு, சம்பளம், டாலர், நாடாளுமன்றம், canada, dollar, euro, france, germany, italy, parliament, salary, salary hike, singapore, spain
ஏப்ரல் மாதம் வந்தாலே சம்பள உயர்வை பற்றி பேசாத ஊழியர்களே இருக்கமுடியாது… எனக்கு 30 சதவிகிதம் எனக்கு 20 என ஒவ்வொருத்தரும் மற்றவரின் வயிற்றெரிச்சலை கொட்டி கொள்வது இயல்பான விஷயம். ஆனால் இங்கே ஆகஸ்ட் மாதம் ஊதிய உயர்வு கொடுக்கிறார்கள். யாருக்கு? நமது மேன்மை தங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு. சென்ற வாரம் இந்த செய்தியை எல்லா இதழ்களும் வெளியிட்டிருக்கும் நீங்களும் படித்திருப்பீர்கள். 300 சதவிகித சம்பள உயர்வு, இப்போது ஏறக்குறைய 16,000 வாங்கி கொண்டிருந்த உருப்பினர்களுக்கு தற்போது 50,000 வழங்க தீர்மானித்து இருக்கிறார்கள், ஆனால் 80,000 வரை உயர்வை எதிர்பார்த்து இருந்தார்களாம். [...]
ஓஷோவின் F * * * போதனை…
Posted: ஆகஸ்ட் 21, 2010 in பார்த்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:ஓஷோ, நகைச்சுவை, laugh, osho, youtube
இந்த காட்சிக்கு எந்த முன்னுரையும் தேவை இல்லை என்றே நினைக்கிறன். நம்மில் பலரும் உபயோகிக்கும் வார்த்தை F *** இந்த வார்த்தையை மையப்படுத்தி ஓஷோ ஒரு சொற்பொழிவின் போது நகைச்சுவையாக சொல்லும் காட்சிக் கோப்பை உங்களோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்கிறேன். இதை பலர் பார்த்திருக்க கூடும், இருந்தாலும் ஒரு முறை பாருங்கள்… உங்களை மறந்து சிரிப்பீர்கள்.
ஐஸ் ஹவுஸ் என்கிற விவேகானந்தர் இல்லம்
Posted: ஆகஸ்ட் 20, 2010 in தகவல்கள்குறிச்சொற்கள்:ஐஸ் ஹவுஸ், கடற்கரை, கண்காட்சி, கேமன் கோட்டை, சுற்றுலாத்தளம், சொற்பொழிவு, திருவல்லிகேணி, பிரெடெரிக் டுடோர், மெரினா, மெரினா கடற்கரை, விக்டோரிய கட்டடக்கலை, விவேகானந்தர் இல்லம், beach, exhibition, frederic tudor, ice house, keman castle, merina, merina beach, tourist place, triplicane, vivekanandar house
சென்னையில் ஐஸ் ஹவுஸ் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இல்லையா அப்போ விவேகானந்தர் இல்லம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்… மெரினா கடற்கரையில், திருவல்லிகேணியில் உள்ளதே இந்த கட்டிடம். சரி அது என்ன ஐஸ் ஹவுஸ், நான் சிறுவயதில் நினைத்து இருந்தேன் அந்த பகுதியில் நிறைய ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தது என்று. ஐஸ் ஹவுஸ் என்பது இப்போதிருக்கும் விவேகானந்தர் இல்லம் தான், உண்மையில் அங்கு ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை எதுவும் இல்லை ஆனால் ஐஸ் சேமித்து வைக்கும் இடமாக இருந்தது. இந்த கட்டிடம் 1842 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. விக்டோரிய கட்டடக் [...]