ஆகஸ்ட் 30 அன்று கலைவாணரின் பிறந்த நாளை ஒட்டி அவரின் நினைவாக அவரின் சில புகைப்படங்களை இன்று கலைவாணரின் பிறந்தநாள் என்ற இடுகையின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த இடுகையை கண்ட கலைவாணரின் பேத்திகள் தனது மகிழ்ச்சியை தெரிவித்து பின்னூட்டம் செய்திருந்தார்கள், மேலும் அவர்கள் கலைவாணரை பற்றிய ஒரு வலைதளத்தை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர். என்னுடைய முந்தைய கலைவாணரின் இடுகையில், நேரமில்லாத காரணத்தினால் அவரை பற்றி எந்த செய்தியையும் பெரிதாக குறிப்பிடவில்லை. பின்பொரு நாளில் அவரைப் [...]
செப்டம்பர், 2010 க்கான தொகுப்பு
சமூக விஞ்ஞானி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
Posted: செப்டம்பர் 30, 2010 in தகவல்கள்குறிச்சொற்கள்:என்.எஸ். கிருஷ்ணன், கலைஞர் தொலைக்காட்சி, கலைவாணர், சமூக விஞ்ஞானி, திருவல்லிகேணி, நடராஜா கல்வி கழகம், நூலகம், புகைப்படம், வலைதளம், kalaivaanar, library, ns krishnan, nsk, photo, website
டைட்டானிக் கதாநாயகி(குலோரியா ஸ்டீவர்ட்) மரணம்
Posted: செப்டம்பர் 29, 2010 in தகவல்கள்குறிச்சொற்கள்:ஆஸ்கர், ஆஸ்கார், குலோரியா ஸ்டீவர்ட், கேட்வின்சலேட், டைட்டானிக், புற்றுநோய், மார்பக புற்றுநோய், ரோஸ், breast cancer, cancer, gloria stuart, kate winslet, oscar, oscar award, titanic
டைட்டானிக் கதாநாயகி என்றவுடன் கேட்வின்சலேட் என்று நினைத்துக்கொள்ளதீர்கள், கேட் வின்சலேட்டின் வயதான கதாபாத்திரத்தில் நடித்த குலோரியா ஸ்டீவர்ட் தான் உயிர் நீத்தவர். டைட்டானிக் நம் வாழ்நாளில் பார்த்த மிக சிறந்த படங்களில் ஒன்று, கதையை ஒரு பாட்டியின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்வார்கள். அந்த பழம் பெரும் நடிகை குலோரியா ஸ்டீவர்ட், தனது நூறாவது வயதில் கடந்த ஞாயிறு காலமானார். 20 வருடங்களுக்கு முன்பே அவருக்கு மார்பக புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்திருந்தார், மூப்பின் காரணமாக 5 வருடங்களுக்கு முன்பு நுரையீரலில் புற்றுநோய் உண்டானது மரணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த இவர் ஞாயிறன்று இறந்தார், ஹாலிவுட் வட்டாரங்கள் அவரின் மறைவுக்கு [...]
அங்காடித்தெருவுடன் போட்டியிட்ட பீப்ளி லைவ்
Posted: செப்டம்பர் 28, 2010 in அங்கலாய்ப்புகுறிச்சொற்கள்:angaditheru, அங்காடித்தெரு, ஆஸ்கார், உலக சினிமா, சிங்கம், தணிக்கை, தாரே ஜமீன் பர், திரைப்படம், தொலைகாட்சி, நியோரியலிசம், பா, பீப்ளி லைவ், மதராசப்பட்டினம், மை நேம் இஸ் கான், ராஜ்நீதி, ராவணன், லகான், விண்ணைத்தாண்டி வருவாயா, censor, lagan, madarasapatinam, my name is khan, neorealism, oscar, paa, peepli live, rajneethi, ravan, singam, tare zameen par, vinnaithaandi varuvaaya, WORLD CINEMA
அமீர் கானின் பீப்ளி லைவ் இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருகிறது. இது அமீர்கானின் மூன்றாவது முயற்சி, ஏற்கனவே அவரின் லகான், தாரே ஜமீன் பர் என்ற இரண்டு படங்கள் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் அமீர்கானால் தயாரிக்கப்பட்டு UTV சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முறை 5 தமிழ்த் திரைப்படங்கள் போட்டியில் இருந்தன, அவை சிங்கம், மதராசப் பட்டினம், ராவணன், விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு. இதில் அங்காடித்தெரு பீப்ளி லைவ்க்கு கடுமையான போட்டியை கொடுத்திருக்கிறது என்பதில் பெருமிதம் தான். இந்திய விவசாயிகளின் ஏழ்மையையும், அதன் கொடூரத்தினால் ஏற்படும் இன்னல்களையும் விளக்குவதாகவும், இந்திய கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாகவும் உள்ளதால் அங்காடித்தெருவை தாண்டி ஒரு [...]
தெரியுமா? பாய்காட் என்ற வார்த்தை உருவான விதம்
Posted: செப்டம்பர் 27, 2010 in தெரியுமா ?குறிச்சொற்கள்:அறுவடை, ஐயர்லாந்து, ஒத்துழையாமை, காண்ட்ராக்ட், காப்டன் சார்லஸ் பாய்காட், கூலி, டைம்ஸ், தபால், தெரியுமா?, தொழிலாளர், பத்திரிகை, பாய்காட், புறக்கணிப்பு, வணிகம், வார்த்தை, வியாபாரி, விவசாயக்கூலி, boycott, harvest, ireland, merchant, newspaper, protest, the times, trade, trader, word
ஆங்கிலத்தில் பாய்காட் என்று ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஒத்துழைக்காமல் தவிர்ப்பது, ஒன்றாய் இனைந்து புறக்கணிப்பது என்பது இதன் பொருள். இந்த சொல் எப்படி வந்தது ? தெரியுமா? ஐயர்லாந்தில் காடுகளிலும், தோட்டங்களிலும் வேலை செய்ய காப்டன் சார்லஸ் பாய்காட் என்ற ஐரிஸ் கான்ட்ராக்டர் கூலியாட்களை நியமித்து வேலை வாங்கி வந்தார். கூலியாட்களும் ஐரிஸ்காரர்கள். இவர்களிடம் மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் நடந்து கொண்டார் பாய்காட். பல நாட்கள் பொறுத்திருந்தும் விடிவு எதுவும் ஏற்படாததால் அந்த கூலியாட்கள் அனைவரும் ஒன்றாய் இனைந்து பாய்காட்டின் காண்ட்ராக்ட் வேலையை செய்ய மறுத்து அவரை புறக்கணித்தனர். அந்தப் பகுதியில் அவர் தனித்து விடப்பட்டார். அவரின் வேலையாட்கள் அவரின் நிலத்தில், வீட்டில் வேலை செய்ய மறுத்து விட்டனர், அவ்வூரில் உள்ள வியாபாரிகளும் இவருடன் வணிகம் செய்ய [...]
பெயர்க்காரணம்
Posted: செப்டம்பர் 25, 2010 in அங்கலாய்ப்புகுறிச்சொற்கள்:ஆதிவாசி, ஆத்திகர், இனம், கரிகாலன், கலாச்சாரம், சமூகம், சி.பா.ஆதித்தனார், ஜாதி, திருவள்ளூர், தோழி, நன்பா, புஹாரி, பெயர்க்காரணம், மச்சான், மாமா, வடஇந்திய, வடமொழி, buhari, cast, friend, name, northindia, religion, sanskrit, society, thiruvallur, tribe
இவ்வுலகில் எல்லா விசயங்களும் காரணங்களுடன் தான் நடைபெறுகிறது. எல்லா பொருட்களும் காரணங்களுடன் தான் படைக்கப்பட்டிருக்கிறது, இது ஆத்திகர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு தத்துவம். சரி பெயர்களில் கூட காரணம் இருக்கவேண்டுமா? ஒரு அடையாளத்தை குறிக்கப் பயன்படும் ஒரு சாதாரண விஷயம் தானே, இவனே, அவனே, நன்பா, தோழி, மச்சான், மாமா…. இப்படி ஏதாவது பொதுவான அடையாளக் குறியீடாக வைத்து கூப்பிட்டிருக்கலாம், கூப்பிட்டும் இருப்பர், சமுதாயம் சிறு சிறு குழுக்களாக இருக்கும்போது ஆனால் நிலைமை இப்போது வேறு. 20 அல்லது 30 பேர் கொண்ட குழுவாக இருந்தால் இது சாத்தியம். இப்போது குழுக்கள் என்பதே [...]
தெரியுமா? அலர்ஜி என்றால் என்ன?
Posted: செப்டம்பர் 24, 2010 in தெரியுமா ?குறிச்சொற்கள்:allergy, asthma, அலர்ஜி, ஆண்டிஜென், ஆண்டிபாடி, ஆஸ்துமா, உணர்வு நரம்பு, கொசுக்கடி, நமைச்சல், புடைப்புகள், மாத்திரை, ரத்தநாளங்கள், ரத்தம், blood, vain
சென்ற வாரம் எனக்கு உடலில் அங்கங்கே சிறு சிறு புடைப்புகள் தோன்றியது கூடவே கொஞ்சம் நமைச்சல், நானும் அது சாதாரண கொசுக்கடி என்றே இருந்துவிட்டேன், ஏனெனில் பகல் பொழுதில் என்னால் புடைப்புகளையோ நமைச்சலையோ உணரமுடிய வில்லை, மாலை வீடு சென்ற பிறகே இப்படி ஆகிக்கொண்டிருந்தது. ஆனால் என் வீட்டிலோ அந்த அளவிற்கு கொசுத்தொல்லையும் இல்லை. 2 நாட்கள் கழித்த பின் தான் உணர்ந்தேன் இது ஏதோ அலர்ஜி போல இருக்குமோ என்று. நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்கும் [...]
தெரியுமா? – அமெரிக்காவின் ஒரு நாள் ஜனாதிபதி
Posted: செப்டம்பர் 22, 2010 in தெரியுமா ?குறிச்சொற்கள்:america, amierican president, arjun, அடிமை, அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்கா, அர்ஜுன், செனட்டர், ஜகேரி டைலர், ஜனாதிபதி, ஜேம்ஸ் கே.போக், டேவிட் ரைஸ் அட்சிசன், தெரியுமா, முதல்வன், David Rice Atchison, James Polk, Missouri, Plattsburg, president, slave, slavery, Zachary Taylor
முதல்வன் படத்தில் பார்த்திருப்பீர்கள் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக பொறுப்பேற்று பணியாற்றுகிற மாதிரி, உண்மையில் அது போல ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது தெரியுமா? ஆனால் இங்கு எந்த சவாலின் அடிப்படையிலும் பொறுப்பு கொடுக்கப்படவில்லை. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ் கே.போக் என்பவரின் பதவிக்காலம் 3.3.1849 அன்று முடிவடைந்து மறுநாள் 4.3.1849 புதிய ஜனாதிபதியாக ஜகேரி டைலர் என்பவர் பொறுப்பேற்கவேண்டும் ஆனால் அது ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அன்று பொறுப்பேற்க அவர் மறுத்துவிட்டார். அமெரிக்காவை பொருத்தமட்டில் ஒரு நாள் [...]
பல வருடம் கடந்தும் மிரட்டும் சைக்கோ
Posted: செப்டம்பர் 21, 2010 in உலக சினிமாகுறிச்சொற்கள்:alfred hitchcock, america, arizona, அமெரிக்கா, அரிசோனா, ஆல்ஃபிரட் ஹிட்ச்காக், உலக சினிமா, காணொளி, சைக்கோ, ஜேனட் லே, டாலர், திகில், திகில் திரைப்படம், திரைப்படம், துப்பறியும் நிபுணர், நகைச்சுவை, பீனிக்ஸ், ரீமேக், விடுதி, விடுதி காப்பாளன், ஹாலிவுட், ஹிட்ச்காக், dollar, hollywood, horror, Janet Leigh, motel, movie, phoenix, psycho, remake, video, WORLD CINEMA
உலகின் மிகவும் அறியப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான சைக்கோ திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் ரசிகர்களை உலுக்கும் ஒரு திரைப்படம். ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய இந்தப் படம் நியூயார்க் திரையரங்குகளில் முதல் முறையாக திரையிடப்பட்ட போது ரசிகர்களை பீதியடையச் செய்ததாக அறிகிறோம். அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் கதாநாயகி வசிக்கிறாள், தனது அலுவலகப் பணம் 40,000 டாலர்களை திருடிவிட்டு ஊரைவிட்டு காதலனை சந்திக்க ஓடிவிடுகிறார். போகும் வழியில் ஒரு விடுதியில் இரவு நேரத்தை கழிக்க வேண்டியதாகிறது. [...]
தெரியுமா? – சீழ் என்பது என்ன தெரியுமா?
Posted: செப்டம்பர் 20, 2010 in தெரியுமா ?குறிச்சொற்கள்:எலும்பு மஜ்ஜை, காயம், கிருமி, சீழ், சோடியம் சிட்ரேட், தெரியுமா, தொடர்பதிவு, ரத்தவங்கி, ரத்தவெள்ளை அணுக்கள், வில்லியம் ஹார்வி, bacteria, blood bank, bone, pus, sodium citrate, white blood cel, william harvey
தெரியுமா என்ற இந்த வகையின் கீழ் நமக்கு தெரிந்த விசயங்களில் உள்ள தெரியாத விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இதை ஒரு தொடர்பதிவாக தொடர இருக்கிறேன். உடலில் எங்காவது காயம் ஏற்படும் போது சரியாக கவனிக்கவில்லை என்றால் சில நாட்களிலேயே சீழ் பிடிக்க ஆரம்பித்து விடும். சரி இந்த சீழ் என்பது என்ன… தெரியுமா? அநேகமாக உங்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் தசை நார்கள் கிழிந்து வடிந்தோடிய ரத்தம் கெட்டுப்போய் இருக்கும் என நினைப்பீர்கள். ஒரளவுக்கு நீங்கள் நினைப்பது சரி… அதாவது கெட்டுபோன [...]