செப்டம்பர் 18, 2010 க்கான தொகுப்பு

நாவல் இலக்கியத்தில் மிகவும் சிறந்த நாவல் எதுவென்று கேட்டால் டால்ஸ்டாயின்  போரும் சமாதானமும் என்பர். அதுபோல நாவல் இலக்கியத்தில்  மிகச்சிறந்த நாவலாசிரியர் என்றால் சந்தேகத்திற்கிடமின்றி டாஸ்டாவ்ஸ்கி என்று தான் சொல்வார்கள். ரஸ்ய இலக்கிய மேதையான டாஸ்டாவ்ஸ்கி இளமையில் ஒரு புரட்சிவாதி இதன் காரணமாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தூக்குமேடை வரை சென்றவர், கடைசி நிமிடத்தில் மரண தண்டனை சிறை தண்டனையாக மாற்றப்பெற்று உயிர் தப்பினார். மனோதத்துவ துறை சரியான உருவம் எடுப்பதற்கு முன்னரே தன் நாவல்களை மனோதத்துவ அடிப்படையில் படைத்தவர். வேறு எங்கும் படித்து அறிந்து கொள்ள முடியாத பல விசயங்களை டாஸ்டாவ்ஸ்கியை படித்து நான் அறிந்து கொண்டேன் என்கிறார் உலகின் மிகப் [...]