சோகத்தில் எல்லாம் பெரிய சோகம் புத்திரசோகம் என்று நமக்கு ராமாயணம் முதற்கொண்டு பல நூல்கள் எடுத்து இயம்பி இருக்கின்றன, அதை மூலக்கருவாக வைத்து எடுத்த படமே தெய்வத் திருமகள். படம் வருவதற்கு முன்னமே படத்தின் தலைப்பினால் சர்ச்சை, படத்தின் கதைதிருடப்பட்டது என்று மற்றொரு சாரார், படத்தை பார்த்து வீடு திரும்புபவர்கள் அழுது வடிந்து திரும்புகின்றனர் என்ற அளவிற்கு உணர்சிகளை தூண்டும் படியாக உள்ளது படம் என்று நண்பர்களின் விமர்சனம், சரி அப்படி என்னதான் இருக்கிறது இந்த படத்தில்….
படத்தின் கதை ஒரு தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தையை சட்ட பூர்வமாக அவர் மீட்டு எடுப்பதே. திரைக்கதையில் பெரிய திருப்பங்களோ, வீர தீர செயல்களோ, புது தொழில் நுட்ப யுத்திகளோ துளியும் இல்லை. அப்புறம் எதற்கு இந்த திரைப்படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு. ஆங்கிலத்தில் HUMAN VALUES என்று சொல்வார்கள் அந்த விஷயம் மட்டுமே இந்த படத்தின் மூலக்கருவாக வைத்து இயக்குனர் களம் இறங்கி இருக்கிறார். ஒரு தந்தை, அவர் குழந்தை, அவர்களின் பாசம், பிரிவின் துயரம், அந்த இருவரை இந்த சமூகமும் அவரது சுற்றாரும் பார்க்கும் பார்வைகளின் கோர்வை மட்டுமே இந்த படம்.
வழக்கமாக தமிழ் திரைப்படங்களில் செண்டிமெண்ட் காட்சிகள் நீளமான வசனங்களையும், அழுகை காட்சிகளையும், கொண்டதாக இருக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் அழுதோ, இல்லை நீளமான வசங்களை பேசியோ நமது பொறுமையை சோதிக்கவே இல்லை, நமக்கு சிவாஜிகளையும், மனோரமாக்களையும் இந்த படம் ஞாபகப்படுத்தவே இல்லை இருந்தும் நல்லதொரு செண்டிமெண்ட் படம் என்றே கூற வேண்டும்.
விக்ரமின் நடிப்பை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், இருப்பினும் இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகளையும் விளம்பர காட்சிகளையும் பார்த்தபோது விக்ரம் கொடுத்த காசுக்கு மேல நடிச்சு நம்மை கொல்லப்போகிறார் என்று நினைத்து போனால் நம்மை ரொம்பவே வியக்க வைத்து விட்டார், அநியாயத்திற்கு அடக்கி வாசித்திருக்கிறார், அளவான நடிப்பு. வழக்கமாக இது வரை தமிழ் திரைபடத்தில் மன வளர்ச்சி குன்றியவர்களாக நடித்தவர்கள் யாரையும் ஞாபகப்படுத்தவில்லை, பிரமாதம். அவரை விட அவரின் குழந்தையாக வரும் சிறுமி அசத்தி இருக்கிறார். அனுஷ்காவும், சந்தானமும் வியாபாரத்திற்காக இணைத்தவர்கள் என்று நன்றாகவே தெரிகிறது இருப்பினும் நன்றாகவே நடித்து இருக்கிறார்கள். இடைச் சொருகலான அனுஷ்காவிற்கு கொடுக்கப் பட்ட பாடலை தவிர்த்து பார்த்தால் பாடல்களும் பின்னணி இசையும் அருமை. படத்திற்கு தேவை இல்லை என்பதை தவிர்த்து பார்த்தால், இந்தப் பாடலும் அருமையாகவே படமாக்கப்பட்டுள்ளது,
தெய்வத் திருமகளை பார்ப்பதற்கு முன் 2 ஆஸ்கார் விருதை வென்றிருக்கும் SEAN PENNன் நடிப்பில் ஆங்கிலத்தில் வந்த I AM SAM படத்தையும் பார்க்க சொனார்கள் சில நண்பர்கள். I AM SAM படத்தின் சில காட்சிகளை இணையத்தில் பார்த்தேன், அப்பட்டமான திருட்டு என்று குற்றம் சாட்டுபவர்களின் கூற்று உண்மை போல தான் தெரிகிறது. ஆனால் நல்ல இலக்கியங்களை மற்ற மொழிகளில் இருந்து மொழி மாற்றம் செய்வதை தொன்று தொட்டே செய்து இருகின்றார்கள் ஏன் திரை படங்களில் மட்டும் மற்ற மொழிப் படங்களை தமிழில் எடுக்கும் போது திருட்டு என்ற குற்றச்சாட்டுகிறார்கள். வெளிப்படையாக இயக்குனர்களோ நடிகர்களோ தழுவி எடுக்கப் பட்ட கதை என்பதை ஒத்துக்கொள்ளாததற்கு இது ஒரு காரணமாக இருக்குமோ? சில வருடங்களுக்கு முன்பு ராம்கோபால்வர்மாவின் சர்கார் படம் பார்த்தபோது படத்தின் ஆரம்பத்திலேயே அவர் காட்பாதர் கதை தான் இந்த படம் எடுக்க தூண்டியதாக முன்னுரை செய்து இருப்பார் இதுபோன்ற துணிச்சல் தமிழ் இயக்குனர்களுக்கு இல்லாதது தான் இதற்க்கு காரணம் என்று நினைக்க தோன்றுகிறது.

ஈ அடிச்சாங்காபி செய்தாலும். நான் மூனு வருசம் கஸ்டப்பட்டு கதை தயாரித்தேன். நான் அறிவாளி. என்று கூறும் இயக்குனர்களும், அவர்களை மேதாவிகளாக நினைக்கும் ஊடகங்களுமே,..
உலக சினிமாக்களை பார்ப்பவர்களை கோபத்தில் தள்ளுகிறது நண்பரே!…
நல்ல பதிவு.
நல்ல விமர்சனம்.
நன்றி
ரொம்ப நல்ல பதிவு நண்பரே…நான் பதிவுலகத்திற்கு புதிது.நேரம் கிடைக்கும்பொழுது திரைப்படங்களை பார்ப்பவன்.
சில நேரங்களில் நாம் முன்னமே பார்த்த திரைப்படங்களின் அச்சு அசலாக தழுவலிலோ தாக்கத்திலோ வெளிவந்த வேறு திரைப்படங்களை பார்க்க நேரிடும்பொழுது,மனதுக்கு கோபமாகவும் கவலையாகவும் இருக்கும்.சுவீடன் சினிமாவுக்கு ஒரு பெர்சொனா (1966) பிரான்ஸுக்கு அமெலி (2001) என்ற வரிசையில் ஏன் இந்தியாவினில் இவர்களாலும் சொந்த கற்பனையில் சுயமாக எடுக்க முடியாதா என்று தோன்றும்.
எதிர்காலத்திலாவது இது நனவாகட்டும்.நன்றி
தங்களது கருத்துகளுக்கு நன்றி நண்பரே…
when the director and vickram doing an interview in JAya tv one viewer asked him whether he inspired by i am sam to take this movie, the reply director given was there is no relation between i am sam and this movie. this is totally different and i have been working for tis moive for long time….
what is this???
that is what lieing…
பொதுவாக திரைப்பட விமர்சனங்களை வாசிக்கும் போது அழுப்புத்தட்டும்…ஆனால் உங்க உத்திகள்…சிறப்பதக இருக்கிறது….
நன்றி நண்பரே…