உலக திரைப்படங்களில் கொரிய மொழித் திரைப்படங்களுக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது, அந்த வரிசையில் ஓல்ட் பாய் தவிர்க்க முடியாத ஒரு கொரிய மொழித் திரைப்படம். மேலுழுந்தவாரியாக பார்த்தால் இது பழிவாங்குவதை கருவாக கொண்ட சாதாரண திரைப்படம் போல தோன்றும். ஆனால் அதையும் மீறி கதையை முழுவதுமாக பார்த்து முடிக்கும் போது, நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குரூரமான பழிவாங்கல் கதை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
2003ல் வெளியான இந்த திரைப்படத்தை பார்க் சான் வூக் என்பவர் இயக்கி இருக்கிறார், இந்த திரைப்படத்தின் மூலம் ஜப்பானிய மங்கா வடிவமானது, புகழ் பெற்ற மங்கா ஓவியர் நோபௌகி மிநேகிஷி அவரால் எழுதப்பட்டது.
15 வருட தனிமைச் சிறை, அதுவும் ஒரு விடுதியின் அறை ஒன்றில் எதற்காகாக? யாரால்? சிறை வைக்கப்பட்டிருக்கின்றோம் என்று தெரியாமல் ஏறக்குறைய பைத்தியம் பிடிக்கும் நிலையில் விடுவிக்கப் படுகின்றான் கதாநாயகன். தன்னை சிறைப் படுத்தியவன் யார் என்பதை அறிந்து அவனை பழி தீர்க்க முற்படுவதே கதை.
கதையின் இறுதியில் வில்லனாக உருவகப்படுத்தியவன் கதாநாயகனால் பாதிக்கப்பட்டு அதற்கு பழி தீர்த்துக் கொள்ளவே கதாநாயகனின் 15 வருட சிறை என்பது எதிர்பார்க்காத திருப்பம். அதை விட பெரிய திருப்பம், கதாநாயகனால் காதலிக்கப்படும் பெண் அவனின் சொந்த மகள் என்பதும் அதுவும் வில்லனின் பழி வாங்கும் செயலில் ஒன்று என்பதும்.
கொரிய மொழிப்படங்களை பார்த்தவர்கள் மத்தியில் கேட்டரிந்தால் நூற்றில் தொண்ணூறு பேர் இப்படத்தை பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள், கொரியவின் சிறந்த 10 படங்கள் என்று வரிசைப் படுத்தப்பட்டால் இப்படம் கண்டிப்பாக அதில் இடம் பெரும் என்பதில் ஐயமில்லை.
முழுப் படத்தையும் ஆங்கிலத்தில கண்டுகளிக்க…

அருமையான திரைப்படத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்.