‘இயற்பியல் தகவல்’ பகுப்புக்கான தொகுப்பு

இயற்பியலில், மின் பொறியியல் இன்று தவிர்க்க முடியாத, அன்றாடம் உபயோகபடுகின்ற ஒரு துறையாகும், இன்று கணினி சம்பந்தப்பட்ட ஒரு தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட மவுஸ் (சுட்டி) எப்படி இருந்தது தெரியுமா? இதை கண்டறிந்தவர்  யார் தெரியுமா?  மேற்கண்ட  படத்தில் இருப்பது தான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட மவுஸ் (சுட்டி), இதை கண்டறிந்தவர் டக்லஸ் எங்கல்பர்ட். 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அமெரிக்காவில் ஒரிகன் என்ற இடத்தில பிறந்தவர் எங்கல்பர்ட். கணினியில் உள்ளீட்டுச் சாதனமான [...]

   கடல் நீர் ஏன் நீல நிறமாய் இருக்கிறது… இந்த கேள்விக்கு கிடைத்தது தான் ஒரு நோபெல் பரிசு, கேள்வியை கேட்டது யார்? பதில் கிடைத்தது யாரிடத்தில்? யார் அந்த விஞ்ஞானி? நமது தமிழகத்திலே, திருச்சியிலே பிறந்து சென்னையில் படித்து உலகபுகழ் பெற்ற சர் CV ராமன் தான் அந்த விஞ்ஞானி.  உண்மையில்  கடல் நீர் வானத்தின் பிரதிபலிப்பு  என்பது பலருக்கு தெரியும். அதாவது ஒளிச்சிதறல். ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது;  சரி இது [...]

ஒரு மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகம், என்ன விந்தையாக இருக்கிறதா, இது கண்டிப்பாக இரு சக்கர  வண்டிக்கோ, மகிழுந்துக்கோ, விமானத்துக்கோ இல்லை. விண்வெளிக்கு போகும் ராக்கெட்  திரும்பி பூமிக்கே வராமலிருக்க தேவையான வேகம் தான் இது. நண்பர் மேலிருப்பான்  சமிபத்தில் அவர் எழுதிய மறுமொழியில் இயற்பியல் சம்பந்தப்பட்ட இடுகைகளை அளிக்குமாறு கேட்டு கொண்டிருந்தார் அவரின் விருப்பத்திற்கேற்ப  சில இயற்பியல் சம்பந்தப்பட்ட விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன். இந்த இடுகை ராக்கெட் புவியின் ஈர்ப்பு விசையை தாண்டி மேலே போவதை பற்றிய தகவல்.   இந்த அண்டத்தில் எல்லா பொருள்களுக்கும் ஒரு ஈர்ப்பு விசை இருக்கிறது, பூமியில் இருக்கும் [...]