‘உலக சினிமா’ பகுப்புக்கான தொகுப்பு

சத்யஜித் ரே அவர்களின் சாருலதா, பதேர் பாஞ்சாலி போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு கூபி கெயின் பாகா பெயின் திரைப்படம் ஆச்சர்யத்தை கொடுக்கும், உண்மையில் இது சத்யஜித் ரே படமா? என்று கேட்கும் அளவிற்கு இந்த படத்தின் கதையமைப்பு அமைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் fairytale  என்று சொல்வார்களே அந்த வகையின்  கீழ் வரும் இந்த படம் குழந்தைகள் திரைப்படமாக சினிமா ஆர்வலர்களால்  வரையறுக்கபடுகிறது. கூபி ஒரு குடியானவனின் மகன், அவனுக்கு பாடுவதில் வெகு ஆசை ஆனால் அதற்குரிய திறன் இல்லாதவன் ஒரு நாள் அரண்மனைக்கு அருகில் உள்ள கோவிலில் அவன் பாடும் போது அரசன் அவனை கழுதை மேல் ஏற்றி ஊருக்கு வெளியே கொண்டு விடுமாறு ஆணையிடுகிறான். இதற்கிடையில் டோல் இசைப்பதில் [...]

  உலகின் மிகவும் அறியப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான சைக்கோ திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் ரசிகர்களை உலுக்கும் ஒரு திரைப்படம். ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய இந்தப் படம் நியூயார்க் திரையரங்குகளில் முதல் முறையாக திரையிடப்பட்ட போது ரசிகர்களை பீதியடையச் செய்ததாக அறிகிறோம்.  அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் கதாநாயகி வசிக்கிறாள், தனது அலுவலகப் பணம் 40,000 டாலர்களை திருடிவிட்டு ஊரைவிட்டு காதலனை சந்திக்க ஓடிவிடுகிறார். போகும் வழியில் ஒரு விடுதியில் இரவு நேரத்தை கழிக்க வேண்டியதாகிறது. [...]

பேசன் ஆப் க்ரைஸ்ட்  (PASSION OF CHRIST ) மெல் கிப்சன் இதுவரை இயக்கிய 4 திரைப்படங்களில் என் மனம்கவர்ந்த இரண்டாவது படம், முதல் படம் எல்லோருக்கும் பிடித்த அபகாலிப்டோ. இந்த இடுகை பேசன் ஆப் க்ரைஸ்ட்  பற்றியது. முதலில் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பதற்கு கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. மதத்தை முன்னிறுத்தி எடுத்த படத்தில் என்ன பெரிதாக இருந்து விட போகிறது மேலும் இயேசுவின் கதை எத்தனையோ படங்களில் பார்த்தாகி விட்டது  இதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்றே நினைத்தேன், ஆனால் [...]

  டாய் ஸ்டோரி 1995 இல் வெளியான முதல் முப்பரிமான(3D) உயிரோவிய திரைப்படம். இதனை டிஸ்னி/ பிக்ஸார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. ஜான் லாச்சட்டர் (john lasseter) என்பவரால் இயக்கப்பட்டது. இந்தப்படத்தின் பெயரை வைத்தே புரிந்துகொண்டு இருப்பீர்கள் இது பொம்மைகளை  மையமாக வைத்து பின்னப்பட்ட ஒரு கதை. மனிதர்கள் இல்லாத சமயங்களில் பொம்மைகள் உயிர்பெற்று செய்யும் சாகசங்களை சொல்லும் கதை இது. பொம்மை கூட்டத்தின் தலைவரான  கௌ பாய் கதாபாத்திரம் woody க்கு Tom Hanks குரல் கொடுத்திருக்கிறார். ஆன்டி(andy) என்ற சிறுவனின் விளையாட்டு பொம்மைகளான [...]

பிபூதிபூசன் பண்டோபாத்யாய் என்பவர் எழுதிய நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது.  வங்காளத்தின் ஒரு கிராமிய சூழலில் இந்த படத்தின் களம் அமைந்திருக்கிறது. ஹரிஹர் என்பவர் ஒரு ஏழை பிராமணன், அவருக்கு வேதம் ஓதுதலை விட எழுத ரொம்ப பிடிக்கும், தனது எழுத்தாற்றல் அவருடைய வறுமையை போக்கும் என்ற நினைப்பில் நிறைய எழுதுகிறார் துருதிஷ்டவசமாக அவருடைய படைப்புகள் எதுவும் அவர் வறுமையை போக்கவில்லை. ஹரிஹரின் மனைவி சர்பஜெயா,  கிடைக்கும் வருமானத்தில்  தன் குடும்பத்தை ஒருவாறு நிர்வகித்து கொண்டிருக்கிறாள். ஹரிஹர் சர்பஜெயா தம்பதிக்கு [...]

ரபிந்திரநாத் தாகூர்  எழுதிய Nastanirh ( The broken Nest ) என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.  இது 1964 ம் ஆண்டு சத்யஜித்ரே அவர்களால் இயக்கப்பட்டது. 15 வது பெர்லின் திரைப்பட விழாவில்  இந்த படத்திற்கு  வெள்ளி கரடி  பரிசு 2 வது முறையாக சத்யஜித்ரே அவர்களுக்கு கிடைத்தது. 1965 ஆம் ஆண்டு சிறந்த படத்துக்கான   மத்திய அரசின் தங்கத் தாமரை விருது இந்த படத்திற்கு கிடைத்தது. ஆங்கிலேயர் ஆண்ட இந்தியாவில்(கொல்கத்தா) கதைக்களம், சாருலதா ஒரு படித்த அறிவுஜீவியான பூபதி என்பவரின் மனைவி. சாரு பெரும்பாலும் தனிமையிலேயே தன் வாழ்கையை கழித்துக் கொண்டிருந்தாள் [...]

  1967 ஆம் ஆண்டில் பிரெஞ்சில் வெளியான படம்.  இது 1928 ல் ஜோசப் கேசெல் (joseph kessel) அவர்கள் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம், நாவலின் பெயரும்  பெல்லே டே ஜோர் தான். இது 1967 வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் பரிசு வென்றது.   கதாநாயகி ஒரு இளம் இல்லத்தரசி, அவளுக்கு மனரீதியாக ஒரு பிரச்சனை இருந்தது. அது உடல் ரீதியாக துன்பத்தை அனுபவிக்கும் முறையில் கலவி கொள்வது, இது பற்றி அவளுக்கு அதீத கற்பனை கனவுகளோடு வாழ்ந்து [...]

தெர்சு உசலா, அகிரா குரோசோவாவின் படைப்புகளில் ஒன்று, இது சோவித்-ஜப்பான் கூட்டுத் தயாரிப்பு. சிறந்த வெளிநாட்டு படப்பிரிவில் 1975 வருடத்துக்கான ஆஸ்கார் வென்றது. விளாடிமிர் அர்செனிவ் என்ற ரஷ்யனின் தெர்சு உசலா என்ற சுய சரியதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். (சைபீரிய காட்டுப்பகுதியில் அர்செனிவ் பயணித்த பல பயணங்களை  மையமாக கொண்டது) அழகிய சைபீரியப் பகுதிகளில் இந்த  படம் படமாக்கபட்டுள்ளது.  அர்செனிவ் ஒரு கல்லறையை தேடி போவதை தொடக்கமாக கொண்டு படம் அரம்பிக்கப்படுகிறது, பின்பு அர்செனிவ் தனது நினைவுகளில் மூழ்கி போகிறார். அங்கு கிராமங்கள் உருவாவதற்கு  முன் பயணம் மேற்க்கொளும்போது  தெர்சு உசலா என்ற [...]

சூ சைன் (Shoe shine)

Posted: ஜூலை 5, 2010 in உலக சினிமா
குறிச்சொற்கள்:, , ,

VITTORIO DE SICA என்பவரால் இயக்கப்பட்டு 1946ல் வெளியான இத்தாலிய மொழி படம் இது.   குசுப்பி, பாஸ்கல் என்ற இரண்டு சிறுவர்கள் ரோம் நகரில் சூவிற்கு பாலிஷ் போடும் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  அவர்களின் கனவு ஒரு குதிரை வாங்க வேண்டும் என்பதே ஆனால் அவர்களின் வருமானத்தில் குதிரை வாங்குவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என்பது அவர்களுக்கு தெரியும்.  ஒரு நாள் சூ பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தபோது, குசுபியின் மூத்த சகோதரன் அவர்களை கான வந்திருந்தான்,  பான்சா என்பவனிடம் வேலை இருப்பதாகவும் அவனை போய் பார்க்க [...]

இந்த படத்தின் கதாநாயகன்  அந்தோனியோ ரிக்கி, போருக்கு பிந்தைய பொருளாதார விழ்ச்சியடைந்த இத்தாலியில் வேலை இல்லா திண்டாட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மனச்சோர்வு மிக்க குடும்ப தலைவன்.  2 குழந்தைகளுடன் தன் மனைவியையும் காப்பாற்ற வேலைக்காக போராடிக் கொண்டிருந்த வேளையில் அவனுக்கு போஸ்டர் ஒட்டுகிற வேலை கிடைக்கிறது. ஆனால் அதற்கு அவனுக்கு ஒரு மிதிவண்டி தேவைப்படுகிறது, மிதிவண்டி இருக்கும்பட்சத்தில் அவனுக்கு இந்த வேலை உறுதியாக கிடைக்கும். இந்நிலையில் அவனது மனைவி தனது வீட்டில் இருக்கும் பழைய போர்வைகளை தூய்மையாக்கி விற்று  அதற்கு பதிலாக ஒரு மிதிவண்டி வாங்கி கணவனுக்குத் தருகிறாள்.  வேலைக்கு சேர்ந்த [...]