மே தினம் தொழிலாளர்களுக்கான நாள் என்பது எல்லோர்க்கும் தெரியும், இதன் ரிஷிமூலம், நதி மூலம் தெரியுமா உங்களுக்கு. தெரிந்தால் சந்தோஷம், தெரியவில்லை என்றால் யாரிடாமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்; இல்லையெனில் இந்த இடுகையின் முடிவில் அது பற்றி சொல்கிறேன்… இந்த இடுகை தொழிலாளர் தினத்தை பற்றியது அல்ல, உழைப்பாளர் சிலை பற்றியது. நம்மில் பலர் சென்னை கடற்கரையில் உள்ள தொழிலாளர் சிலையை பார்த்திருப்பீர்கள், சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்து இருப்பீர்கள். இந்த காலத்தால் அழியாத சிலையை செய்தது [...]
‘தெரியுமா ?’ பகுப்புக்கான தொகுப்பு
தெரியுமா? பாகிஸ்தானியால் எழுதப்பட்டது “சாரே ஜகான் சே அச்சா”
Posted: December 22, 2010 in தெரியுமா ?குறிச்சொற்கள்:allahabad, arab, அரசியல், அரபு, அலஹாபாத், ஆங்கிலேயர், இக்பால், இங்கிலாந்து, இந்தியா, இந்திராகாந்தி, இலக்கியம், இஸ்லாமியர், உருது, எழுத்துப்பணி, கவிதை, சட்டத்துறை, சட்டம், சமயம், சர் அலாமா முகமது இக்பால், சாரே ஜகான் சே அச்சா, ஜவஹர்லால் நேரு, தேசியகீதம், நாடாளுமன்றம், பத்திரிகையாளர், பாகிஸ்தான், பாரசீகம், பிரதமர், பொருளாதாரம், மன்மோகன்சிங், முகமது அலி ஜின்னா, முகமது இக்பால், மெய்யியல், வரலாறு, economics, england, history, india, indira gandhi, Iqbal, jawaharlal nehru, law, literature, manmohan singh, mohammad ali jinnah, Muhammad Iqbal, national anthem, pakistan, parliament, poem, politics, prime minister, religion, sare jahan se acha, Sir Muhammad Iqbal, urdu
சர் அலாமா முகமது இக்பால், உருது, அரபு, மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெருமைமிக்க இலக்கியப் படைப்புகள் என்று சொன்னால் மிகையாகாது. ஆங்கிலேயர் ஆண்ட பிரிவினைக்கு உட்படாத இந்தியாவில், தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தவர் இவர். மாணவப் பருவத்திலேயே மிகவும் திறமையாகத் திகழ்ந்த இக்பால் இங்கிலாந்தில் சட்டம் பயிலும் மாணவராக இருந்தபோதும் கூட தனது எழுத்துப்பணியினைத் தொடர்ந்தார். இக்பால் சட்டத்துறையில் தொழிலை ஆரம்பித்தார். ஆனாலும் அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், மற்றும் சமயம் ஆகிய துறைகளிலேயே அவர் [...]
எம்ஜியாரை அறிமுகப்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா?
Posted: அக்டோபர் 19, 2010 in தெரியுமா ?குறிச்சொற்கள்:AN Marudhachalam chetiyar, அமெரிக்கா, அம்பிகாபதி, இந்தியா, என்.எஸ். கிருஷ்ணன், எம். எஸ்.சுப்புலட்சுமி, எம்.ஜி.ஆர், எல்லிஸ் ஆர். டங்கன், ஏ. என். மருதாசலம் செட்டியார், ஓஹாயோ, கல்கத்தா, கல்லூரி, கே. பி. சுந்தராம்பாள், சகுந்தலா, சதிலீலாவதி, சீமந்தினி, டங்கன், டி. எஸ். பாலையா, தயாரிப்பாளர், தாசிப்பெண், நந்தனார், பொன்முடி, மந்திரிகுமாரி, மாணிக்லால் டாண்டன், மீரா, வால்மீகி, KB Sundarambal, mandhiri kumari, meera, MGR, MS Subbulakshmi, ns krishnan, sagundala, sathi leelavathi, seemandhini, Tandon, TS Balaiya
எம்.ஜி.ஆர், சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது எல்லோர்க்கும் தெரியும், அறிமுகப்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவில் ஓஹாயோ மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில் பிறந்த எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan) என்பவர் தான் அவர். எம்.ஜி.ஆர் தவிர டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் போன்ற காலத்தை வென்ற கலைஞர்களை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே… ( படத்தில் கே. பி. சுந்தராம்பாள், டங்கனின் அம்மா, டங்கனின் நண்பர் மாணிக்லால் டாண்டன், டங்கன். இந்த புகைப்படம் நந்தனார் திரைப்பட படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது. மாணிக்லால் [...]
தெரியுமா? சென்னையை உங்களுக்கு…
Posted: அக்டோபர் 14, 2010 in தெரியுமா ?குறிச்சொற்கள்:anna salai, அண்ணா சாலை, இடுகை, எழும்பூர், சென்னை, சேத்பட், பாரிமுனை, பிராட்வே, புகைப்படம், மவுன்ட்ரோடு, வார் மெமோரியல், broadway, chennai, egmore, mount road, mountroad, parrys corner, photo, war memorial
இங்கு காணப்படும் படங்கள் யாவும் சென்னையின் பழைய படங்கள், இவை யாவும் திரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்டது, ஏற்கனவே வரும் ஞாயிறு வந்தால் சென்னைக்கு வயது 371 என்ற இடுகையில் சென்னையின் பழைய புகைப்படங்களுடன் சென்னையின் வரலாற்றையும் எழுதி இருந்தேன். இப்போது இந்த இடுகையில் உள்ள படங்கள் சென்னையின் எந்த பகுதிகள் என உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். சென்னையை எவ்வளவு உங்களுக்கு தெரிந்திருக்கிறது என்று பார்போம்…
ஓசோன் படிவத்தைப் பற்றி நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம் சமீப ஆண்டுகளாக, சரி இந்த ஓசோன் என்பது என்ன தெரியுமா? உண்மையில் ஓசோன் என்பது ஆக்சிஜன் தான், அப்புறம் எதற்கு இதை ஓசோன் என்று கூறுகிறார்கள். ஏன் என்றால் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் போல் இது இல்லை, நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனுக்கு 2 மூலக்கூறுகள் கொண்ட இணைப்பு. அதாவது o2 , ஒசோனுக்கு 3 மூலக்கூறுகள் கொண்ட இணைப்பு அதாவது o3 உண்மையில் இது நம் உடலுக்கு ஒரு மாசு, இது நமக்கும், விலங்குகளுக்கும் மூச்சுக் [...]
தெரியுமா? எந்திரனில் பாடப்பட்ட கிளிமஞ்சாரோவைப் பற்றி?
Posted: அக்டோபர் 5, 2010 in தெரியுமா ?குறிச்சொற்கள்:இமயமலை, உகுரு, உவமை, எந்திரன், ஐஸ்வர்யா ராய், கிளிமஞ்சாரோ, சிகரம், தான்சானியா, தெரியுமா?, பாடல், endhiran, everest, himalaya, ishwarya rai, kilmanjaro, robot, song, tanzania, uguru
இப்போது சமீபத்தில் வெளியான எந்திரன் படத்தில் வரும் கிளிமஞ்சாரோ பாடல் இந்த வருடத்தின் ஹிட்டான பாடல் என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்டது. இதில் வரும் கிளிமஞ்சாரோ என்பது என்ன தெரியுமா? நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் இது ஒரு அழகான மலை என்பது. தெரியாதவர்களுக்கு இந்த மலையை பற்றி சில தகவல்கள். தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை கிளிமஞ்சாரோ. இதுவே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மலைகளிலேயே மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். நம் [...]
தெரியுமா? CAN FOOD யாரால் கண்டறியப்பட்டது?
Posted: அக்டோபர் 1, 2010 in தெரியுமா ?குறிச்சொற்கள்:உணவு, கண்டுபிடிப்பு, கேன், தெரியுமா?இந்திய உணவு, நிகோலஸ் அபர்ட், நெப்போலியன், பதப்படுத்தல், பொருட்செலவு, போர்க்காலம், can food, food, inventor, napoleon, nicholas appert
மேற்கத்திய உணவு வகை சாப்பிடும் எல்லோரும் அறிந்திருப்பர் CAN FOOD என்றால் என்னவென்று, இப்போது இந்திய உணவு வகைகளும் நிறைய இதுபோல கேன்களில் அடைத்து சீலிடப்பட்டு வருகிறது. சரி இதுபோல கேன்களில் அடைத்து உணவுகளை விற்கும் முறை எப்போது வந்தது என்று தெரியுமா? போர்க்காலங்களில் வீரர்களுக்கு உணவுகளை எடுத்து செல்லும் போது, அது பல வகைகளில் பாழாகியது, கெட்டுப்போனது. இதனால் அதிகப்படியான பொருட்செலவும், தேவையான சமயத்தில் உணவு இல்லாமல் வீரர்கள் சோர்வடையும் நிலையும் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் பிரெஞ்சு மாமன்னர் நெப்போலியன் இந்த பிரச்சனைக்கு [...]
தெரியுமா? பாய்காட் என்ற வார்த்தை உருவான விதம்
Posted: செப்டம்பர் 27, 2010 in தெரியுமா ?குறிச்சொற்கள்:அறுவடை, ஐயர்லாந்து, ஒத்துழையாமை, காண்ட்ராக்ட், காப்டன் சார்லஸ் பாய்காட், கூலி, டைம்ஸ், தபால், தெரியுமா?, தொழிலாளர், பத்திரிகை, பாய்காட், புறக்கணிப்பு, வணிகம், வார்த்தை, வியாபாரி, விவசாயக்கூலி, boycott, harvest, ireland, merchant, newspaper, protest, the times, trade, trader, word
ஆங்கிலத்தில் பாய்காட் என்று ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஒத்துழைக்காமல் தவிர்ப்பது, ஒன்றாய் இனைந்து புறக்கணிப்பது என்பது இதன் பொருள். இந்த சொல் எப்படி வந்தது ? தெரியுமா? ஐயர்லாந்தில் காடுகளிலும், தோட்டங்களிலும் வேலை செய்ய காப்டன் சார்லஸ் பாய்காட் என்ற ஐரிஸ் கான்ட்ராக்டர் கூலியாட்களை நியமித்து வேலை வாங்கி வந்தார். கூலியாட்களும் ஐரிஸ்காரர்கள். இவர்களிடம் மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் நடந்து கொண்டார் பாய்காட். பல நாட்கள் பொறுத்திருந்தும் விடிவு எதுவும் ஏற்படாததால் அந்த கூலியாட்கள் அனைவரும் ஒன்றாய் இனைந்து பாய்காட்டின் காண்ட்ராக்ட் வேலையை செய்ய மறுத்து அவரை புறக்கணித்தனர். அந்தப் பகுதியில் அவர் தனித்து விடப்பட்டார். அவரின் வேலையாட்கள் அவரின் நிலத்தில், வீட்டில் வேலை செய்ய மறுத்து விட்டனர், அவ்வூரில் உள்ள வியாபாரிகளும் இவருடன் வணிகம் செய்ய [...]
தெரியுமா? அலர்ஜி என்றால் என்ன?
Posted: செப்டம்பர் 24, 2010 in தெரியுமா ?குறிச்சொற்கள்:allergy, asthma, அலர்ஜி, ஆண்டிஜென், ஆண்டிபாடி, ஆஸ்துமா, உணர்வு நரம்பு, கொசுக்கடி, நமைச்சல், புடைப்புகள், மாத்திரை, ரத்தநாளங்கள், ரத்தம், blood, vain
சென்ற வாரம் எனக்கு உடலில் அங்கங்கே சிறு சிறு புடைப்புகள் தோன்றியது கூடவே கொஞ்சம் நமைச்சல், நானும் அது சாதாரண கொசுக்கடி என்றே இருந்துவிட்டேன், ஏனெனில் பகல் பொழுதில் என்னால் புடைப்புகளையோ நமைச்சலையோ உணரமுடிய வில்லை, மாலை வீடு சென்ற பிறகே இப்படி ஆகிக்கொண்டிருந்தது. ஆனால் என் வீட்டிலோ அந்த அளவிற்கு கொசுத்தொல்லையும் இல்லை. 2 நாட்கள் கழித்த பின் தான் உணர்ந்தேன் இது ஏதோ அலர்ஜி போல இருக்குமோ என்று. நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்கும் [...]
தெரியுமா? – அமெரிக்காவின் ஒரு நாள் ஜனாதிபதி
Posted: செப்டம்பர் 22, 2010 in தெரியுமா ?குறிச்சொற்கள்:america, amierican president, arjun, அடிமை, அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்கா, அர்ஜுன், செனட்டர், ஜகேரி டைலர், ஜனாதிபதி, ஜேம்ஸ் கே.போக், டேவிட் ரைஸ் அட்சிசன், தெரியுமா, முதல்வன், David Rice Atchison, James Polk, Missouri, Plattsburg, president, slave, slavery, Zachary Taylor
முதல்வன் படத்தில் பார்த்திருப்பீர்கள் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக பொறுப்பேற்று பணியாற்றுகிற மாதிரி, உண்மையில் அது போல ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது தெரியுமா? ஆனால் இங்கு எந்த சவாலின் அடிப்படையிலும் பொறுப்பு கொடுக்கப்படவில்லை. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ் கே.போக் என்பவரின் பதவிக்காலம் 3.3.1849 அன்று முடிவடைந்து மறுநாள் 4.3.1849 புதிய ஜனாதிபதியாக ஜகேரி டைலர் என்பவர் பொறுப்பேற்கவேண்டும் ஆனால் அது ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அன்று பொறுப்பேற்க அவர் மறுத்துவிட்டார். அமெரிக்காவை பொருத்தமட்டில் ஒரு நாள் [...]