‘படித்ததில் பிடித்தது’ பகுப்புக்கான தொகுப்பு

  ஜப்பானிய சமுதாயம், வீரர்கள் எனப்படும் சாமுராய், விவசாயிகள், கைத்தொழில் செய்பவர்கள், வணிகர்கள், சுத்தமே இல்லாதவர்கள் என சொல்லப்படும் எதா(ETA ) அல்லது புராகுமின், மனிதரே இல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டிருந்தது. இதில் எதா என்பவர்களை புராகுமின், கெதோ மக்கள், சோரி, புதுமகன், தள்ளிவைக்கப்படவர்கள் என்றும் கூறுகின்றனர். இவர்கள் செய்யும் தொழில் மாமிசம் விற்பது, விலங்குகளின் தோல்களை பிரித்து விற்பனை செய்வது, வைக்கோலைக்  கொண்டு காலணிகள் செய்வது. இவர்கள் தங்கள் பிறப்பை மறைப்பதோ, இடம் விட்டு இடம் போய் மறைந்து இருப்பது குற்றமாக கருதப்பட்டது.  இந்த நாவல் ஒரு எதா வகுப்பை சார்ந்தவன், தன்னுடைய பிறப்பால் தான் படும் துன்பத்தையும், சமூகம் எதா வகுப்பு மக்களை எப்படி நடத்தினார்கள் என்பதையும் [...]

நாவல் இலக்கியத்தில் மிகவும் சிறந்த நாவல் எதுவென்று கேட்டால் டால்ஸ்டாயின்  போரும் சமாதானமும் என்பர். அதுபோல நாவல் இலக்கியத்தில்  மிகச்சிறந்த நாவலாசிரியர் என்றால் சந்தேகத்திற்கிடமின்றி டாஸ்டாவ்ஸ்கி என்று தான் சொல்வார்கள். ரஸ்ய இலக்கிய மேதையான டாஸ்டாவ்ஸ்கி இளமையில் ஒரு புரட்சிவாதி இதன் காரணமாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தூக்குமேடை வரை சென்றவர், கடைசி நிமிடத்தில் மரண தண்டனை சிறை தண்டனையாக மாற்றப்பெற்று உயிர் தப்பினார். மனோதத்துவ துறை சரியான உருவம் எடுப்பதற்கு முன்னரே தன் நாவல்களை மனோதத்துவ அடிப்படையில் படைத்தவர். வேறு எங்கும் படித்து அறிந்து கொள்ள முடியாத பல விசயங்களை டாஸ்டாவ்ஸ்கியை படித்து நான் அறிந்து கொண்டேன் என்கிறார் உலகின் மிகப் [...]

கிர்கீசியாவில் பிறந்த சிங்கிஸ் ஐத்மாத்தவ் படைப்புகள் அனைத்தும் உலகப் புகழ் பெற்றவை குல்சாரி என்ற நாவல் அதில் ஒன்று. இரண்டாம் உலகப் போரில் சோவியத் சமுதாயத்தில் நடைபெற்ற எல்லாவற்றிற்கும் ஸ்டாலின் தான் காரணம் என்ற பரப்புரையை இந்த குறு நாவல் தகர்க்கிறது. சமூகப் போராட்டத்தை மிக நேர்த்தியாக குதிரையை(குல்சாரி) மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்த கதை படிப்போர் நெஞ்சை கவர்கிறது. இந்த குறுநாவலில் இடம் பெற்றுள்ள குதிரையும் மக்களும் நம்மோடு வாழ்ந்து பிரிகின்றனர். தானாபாய் என்ற வயது [...]

1998 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஆங்கில நாவல் மலை மேல் நெருப்பு. கரிக்னானோவில் தன்னந்தனியாக வாழ்ந்த நந்தாகவுல் என்ற மூதாட்டியை சுற்றி வருகிறது இந்த புதினம். இந்த கதாபாத்திரத்தை வெகு லாவகமாக கையாண்டுள்ளார் அனிதா தேசாய். நந்தாகவுலின் கொள்ளு பேத்தி ராக்காவின் வருகை அதனால் கவுலுக்கு ஏற்ப்பட்ட இடைஞ்சல்களை நன்கு சித்தரித்துள்ளார். கவுலின் தோழி இலா தாஸ்சின்  தோற்றம் எளிமையான, சோகமான நகைச்சுவையை உணர்த்துகிறது. அனிதா தேசாய் 1937 இல்  பிறந்தவர் அவருடைய தந்தை வங்காளத்தை சேர்ந்தவர் தாயார் ஜெர்மன், அனிதா தேசாய் டெல்லிக்கு சென்று கல்வி [...]

சத்யஜித்ரேவை நமக்கு பலரில் உலகப்புகழ் பெற்ற இயக்குனராக தெரியும். அதுவும் கலைப்பட இயக்குனர், யதார்த்த சினிமா என்கிற பேரில்  மெதுவாக போகும் படங்கள் என்று வெகுஜன மக்களால் கூறப்படும் படங்களை தான் நாமறிவோம். ஆனால் அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வகையில், திருப்பங்களுடன் கூடிய  துப்பறியும் கதைகளை எழுதுவார் என்பது சமிபத்தில் கைலாஷில் ஒரு கொலையாளி என்ற அவரது கதையை படித்தபின் தான் தெரிந்தது. கதையின் முன்னுரையில் சத்யஜித்ரே சிறு வயதில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் எவ்வளவு  ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் அதுவே அவருக்கு இந்த [...]

பிரெஞ்சு இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் “வணக்கம் துயரமே”( Bonjour Tristesse). நாவலாசிரியர் பிரான்சுவாஸ் சகன் பிரெஞ்சு இலக்கியவாதிகளில் மிக முக்கியமான படைப்பாளி, தீவிரமான பெண்ணியவாதி. இந்நாவலில் 17 வயது இளம் பெண் ஒருத்தியின் உடல், மன, பாலுணர்வு உளைச்சல்கள், நாவல் வெளிவந்த காலத்து  சமூக நெறிகளை அலட்சியபடுத்தி சொல்லப்பட்டதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் வாசகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. 1954 ல் முதல்பதிப்பு வெளிவந்த ஓரிரு நாட்களிலேயே 3000 புத்தகங்கள் விற்று தீர்ந்தன, ஓராண்டுக்கு பிறகு எட்டரை லட்சத்தை [...]

சமிபத்தில் நான் படித்த இந்த நூல் ஒரு கம்யூநிச  காம்ரேடின் வரலாறு. 1890 ல் பிரெஞ்சு ஆக்கிரமிப்பில் இருந்த வியட்நாமில்  பிறந்த இவரின் இயற்ப்பெயர் நிகுயன். இளமையில் அவர் எவ்வளவு சிறந்த பண்புகளோடும் தேசபக்தி கொண்டவராகவும் இருந்தார் என்பதை நூல் நன்கு விளக்குகிறது, ஒரு சமையல் காரனாக அமெரிக்காவுக்கு செல்லும் கப்பலில் வேலையாளாக சேர்கிறார். பின் இங்கிலாந்து செல்கிறார் அங்கு சிலகாலம் பனிபுரிகிறார் அங்கிருந்து தங்கள் நாட்டை அடிமையாக்கி வைத்துள்ள பிரெஞ்சு தேசத்திற்கே வருகிறார். கம்யூநிசத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் ரஷ்யாவிற்கு பயணமாகிறார், ரஷ்ய கம்யூநிச அரசில் பணியமர்கிறார், பின்பு தாய்நாடு வருகிறார், அதற்குள் [...]

கேரள மாநிலத்தை சேர்ந்த நவீன எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எம். முகுந்தன், இவர் 1942ல் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த மைய்யழியில் பிறந்தவர். இவரது முதல் கதை 1961 ல் வெளியானது. ஈலோகம் அதிலொரு மனுஷ்யன் எனும் நாவலுக்கு கேரள சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தைவத்தின்ற விக்ருதிகள் எனும் இவரது நாவல் தேசிய அகாடமி பரிசை வென்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. முகுந்தன் எழுதிய மைய்யழி புழையோடே தீரங்களில்  நாவல் ஆன் தி பேங்க் ஆப் மைய்யழி  எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு 1996 ம் ஆண்டுக்கான கிராஸ் வோர்ட் பரிசு வென்றது. இவரது பல வருட இலக்கியப் பணியை சிறப்பிக்கும் பொருட்டு பிரெஞ்சு அரசாங்கம் இவருக்கு செவாலியே விருது கொடுத்து கௌரவித்தது      மோகத்தீ,  இவர் எழுதிய நாவலின் தமிழாக்கம், இதை தமிழில் மொழிபெயர்த்தவர் சுரா. கதை கேரளாவில் இருக்கும் ஒரு கிராமப்புறத்தில் வசிக்கும் 50 [...]

அதிதி ஒரு சமஸ்கிருத வார்த்தை, அக்கால முனிவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வருவார்களாம், அப்படிப்பட்ட முனிவர்களை அதிதி என்று அழைப்பார்கள். இதற்கு நேர்மறையாக இருப்பதே திதி என்பார்கள், அதாவது சொல்லிக்கொண்டு வருபவர்கள் திதிகள்.  இதிலுருந்து சொல்லபடுவதே தேதி என்றும் சொல்வார்கள். ஆல்பர்ட் காம்யு என்ற நோபெல் பரிசு வென்ற அல்ஜீரிய-பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய ஒரு சிறுகதையின் தமிழாக்கத்தின் தொகுப்பே இந்த கட்டுரை. இதை தமிழில் இரா. இளங்கோ என்பவர் மொழி பெயர்த்திருக்கிறார். இந்த கதை 3 கதாபாத்திரங்களை உள்ளடக்கி உள்ளது, ஒரு [...]

ஸ்டெபான் ஜ்வேயக் என்ற ஜெர்மனிய எழுத்தாளர் எழுதிய ஓடி போனவன் என்ற  சிறுகதையின் மொழிபெயர்ப்பு  பிரதியை நேற்று படித்தேன் அது பற்றிய சிறிய தொகுப்பு இது , அதை தமிழில் மொழி பெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை.   1918 ல் சுவிசர்லாந்தில் ஒரு இரவு நேரத்தில் கதை தொடங்குகிறது,  ஒரு மீனவன் ஜெனோவா ஏரியில் மீன் பிடிக்க செல்லும்போது ஒரு நிர்வான மனிதனை ஏரியில் கண்டு அவனை காப்பற்றி கரைக்கு கொண்டு வருகிறான். அவன் மொழி அங்கு இருப்பவர்களுக்கு  புரியவில்லை, அனால் அவனின் நிலை கண்டு இறங்கி [...]