கணக்கு என்றாலே நம்மில் பலருக்கு ஆமணக்கு, அதிலும் இவர்கள் சொல்லித்தருவது போல கணக்கு போட்டால் விடை சரியாக வராது…சிரிப்பு தான் வரும்… வார இறுதி, சிரிச்சுக்கிட்டே சந்தோசமாக உங்கள் விடுமுறையை ஆரம்பிக்க இந்த காணொளிகளை உங்களோடு இன்று பகிர்ந்துகொள்கிறேன்.
‘பார்த்ததில் பிடித்தது’ பகுப்புக்கான தொகுப்பு
13×7=28 எப்படி வரும் வந்த கணக்கு?
Posted: அக்டோபர் 9, 2010 in பார்த்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:Abbott, Abbott & Costello, ஆமணக்கு, கணக்கு, காணொளி, சிரிப்பு, யூ ட்யூப், விடுமுறை, Costello, fun, laugh, mathematics, maths, youtube
உயிரோவியங்கள்
Posted: செப்டம்பர் 10, 2010 in பார்த்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:animation, உயிரோவியம், வரைகலை, graphics, motion graphics
இந்த இடுகையில் சமீபத்தில் நான் பார்த்து ரசித்த உயிரோவியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்…
மழலை சொல்லும் கதை…
Posted: செப்டம்பர் 3, 2010 in பார்த்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:adhi, adhitha karikalan, ஆதி, ஆதித்தகரிகாலன், காணொளி, குழந்தை, பெண் குழந்தை, மழலை, யூ ட்யூப், children, girl kid, kids, video, youtube
மழலைகள் என்றாலே எல்லோர்க்கும் பிடிக்கும். எனக்கு கொஞ்சம் கூடவே பிடிக்கும், பெண் குழந்தைகள் என்றால் மேலும் கூடுதல் பிரியம், எனக்கு குழந்தை பிறக்கும் முன்பே அது பெண் குழந்தையாகத் தான் இருக்கும் என்று ஆதிரை என்று பெயரே வைத்துவிட்டேன். ஆதி என்று செல்லமாக அழைக்கவும் ஆரம்பித்துவிட்டேன், ஆனால் பையனாக பிறந்துவிட்டான். ஆதி என்ற பெயரை விட மனமில்லாமல் ஆதித்த கரிகாலன் என்று பெயர் மாற்றம் செய்ய, அதையும் என் மனைவி சுருக்கி ஆதித்தன் என்று வைத்து விட்டாள். இன்னும் மூன்று மாதத்தில் எனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் எனக்கு இன்னும் பெண் [...]
மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியில் எப்படி கள்ளஒட்டு போடலாம்?
Posted: ஆகஸ்ட் 31, 2010 in பார்த்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:அலைபேசி, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, எலெக்ட்ரானிக் வோட்டிங் கருவி, ஒட்டுப்பதிவு, கள்ளஒட்டு, தேர்தல் கமிசன், யூ ட்யூப், ஹரிபிரசாத், ஹைதராபாத், cellphone, election commision, electronic volting machine, evm, government, hariprasad, hyderabad, india, J. Alex Halderman, Rop Gonggrijp, youtube
உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும், எதிர்க்கட்சிகள் சொல்லும் முதன்மையான குற்றச்சாட்டு மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியை பற்றியதாக இருக்கும். இதில் கள்ளஒட்டு போடமுடியாது என்று இதை வடிவமைத்தவர்களும், ஆளும் கட்சியும், தேர்தல் கமிசனும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தே சொல்லிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இந்தக் கருவியில் கள்ள ஒட்டுப் பதிவு செய்ய முடியுமா? இந்த கேள்வி எல்லோர்க்கும் இருக்கும் ஒன்றே. இதை பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளார் ஹைதராபாத்தை சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் J. Alex Halderman, Rop Gonggrijp. இக்குழு கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஆய்வு பற்றிய கட்டுரையை வெளியிட்டுள்ளது, மேலும் [...]
புரட்சி – சிங்கத்தை விரட்டிய காட்டெருமைகள்
Posted: ஆகஸ்ட் 26, 2010 in பார்த்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:ஓரங்க நாடகம், காட்டெருமை, சிங்கம், நாடகம், புரட்சி, முதலை, யூ ட்யூப், buffalo, crocodile, lion, play, revolution, youtube
சில வருடங்களுக்கு முன் நான் பார்த்த இந்தக் காட்சி கோப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது சபாரி(safari ) எனப்படும், காடுகளின் ஊடே செல்லும் ஒரு சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட படம். இதில் ஒரு சிங்கக் கூட்டத்தில் ஒரு காட்டெருமை மாட்டிக்கொள்கிறது, ஒரு முதலையும் இந்த வேட்டையில் அழையா விருந்தாளியாக வருகிறது. ஒரு கட்டத்தில் காட்டெருமை கூட்டம் திரளாக வந்து சிங்கக் கூட்டத்தை வீழ்த்தி காட்டெருமையை மீட்கிறது. இது ஒரு சின்ன ஓரங்க நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். இது 8 நிமிடம் 24 செகண்டுகள் ஓடக்கூடிய ஒரு காட்சி. இதை பார்த்து [...]
ஓஷோவின் F * * * போதனை…
Posted: ஆகஸ்ட் 21, 2010 in பார்த்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:ஓஷோ, நகைச்சுவை, laugh, osho, youtube
இந்த காட்சிக்கு எந்த முன்னுரையும் தேவை இல்லை என்றே நினைக்கிறன். நம்மில் பலரும் உபயோகிக்கும் வார்த்தை F *** இந்த வார்த்தையை மையப்படுத்தி ஓஷோ ஒரு சொற்பொழிவின் போது நகைச்சுவையாக சொல்லும் காட்சிக் கோப்பை உங்களோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்கிறேன். இதை பலர் பார்த்திருக்க கூடும், இருந்தாலும் ஒரு முறை பாருங்கள்… உங்களை மறந்து சிரிப்பீர்கள்.
ஆத்திகன் Vs நாத்திகன்
Posted: அக்டோபர் 23, 2010 in பார்த்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:atheist, ஆத்திகன், கருத்து, காணொளி, நாத்திகன், பின்னூட்டம், beleiver, comments, god, non beleiver, video
சமீபத்தில் நான் பார்த்த இந்த காணொளி ஒரு நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும் உள்ள வேறுபாடுகளையும், வாழ்கையை அணுகும் முறையையும் விளக்கமாகவே கூறுகிறது. இன்று இந்த காணொளியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், பார்த்து உங்களது கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டம் செய்யுங்கள்.