ரோமன் ஹாலிடே

Posted: ஜூன் 30, 2010 in உலக சினிமா
குறிச்சொற்கள்:, , , , , , ,

ரோமன் ஹாலிடே 1953ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவை காதல் சித்திரம். இது வில்லியம் வயளீர் (William Wyler )தயாரித்து இயக்கினார். Gregory  peck, Audrey Hepburn முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று  நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை  john Dighton மற்றும்  Dalton Trumbo என்பவர்களால் எழுதப்பட்டது, சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் இவர்கள்  கம்யுனிச எழுத்தாளர்கள்  என்று  முத்திரை  இடப்பட்டவர்கள் அதனால்  ஹாலிட்டால் ப்ளாக் லிஸ்ட் செய்யப்பட்டவர்கள் அதாவது புறக்கணிக்கப்பட்டவர்கள். Wyler இந்த  கதை சிறப்பாக  இருக்கவே  இதை  பயன்படுத்திக் கொண்டார்  ஆனால் படத்தில்  அவர்கள்  பெயர்களுக்கு  பதிலாக  Ian Mclellan என்பவர்  பெயர்  இடம்  பெற்றிருந்தது.

Ann(Hepburn) ஒரு  இளவரசி, அவர்  ஐரோப்பாவுக்கு(ரோம்) பயணம்  மேற்கொள்கிறார். இவர் அரச குடும்பத்தின் வாரிசு என்பதால் இப்பயணம் ஐரோப்பா முழுவதும் பெருத்த முக்கித்துவத்தை உண்டாக்குகிறது.  ஒரு நள்ளிரவு அவருடைய அரசாங்க கடமைகள், இடையறாத பணிகள் காரணமாக   மிகுந்த மன  உளைச்சலுக்கு  ஆளாகியிருந்த அவருக்கு மருத்துவர் மயக்க ஊசி போட்டு தூங்க வைக்கிறார்.

ஊசி போட்ட பிறகு  மயக்கத்தில்  ரோம் மாளிகையை விட்டு வெளியேறுகிறார் இளவரசி, சிறிது நேரத்தில்    மயக்கத்தின் காரணமாக ஒர் இடத்தில் படுத்து  விடுகிறார்  அங்கே  Joe Bradley (peck)என்ற  டெய்லி  அமெரிக்கன்  பத்திரிகையின்  ரிப்போட்டர் எதேச்சையாக இளவரசியை சந்திக்கிறார். இளவரசியின் நிலை  கண்டு  அவருக்கு  உதவும்  முகமாக  ஒரு டாக்சியில் ஏற்றி, தானும்  ஏறிக்கொள்கிறார். இளவரசி தனது  இருப்பிடம்  பற்றிய  தகவல்  சொல்லும்  நிலையில்  இல்லாததால் அவருடைய வீட்டுக்கே அழைத்து  போக  வேண்டிய  சூழ்நிலை  உருவாகிறது, அன்றிரவு இரவை அங்கேயே கழிக்கிறார்இளவரசி.  காலை  இளவரசி  தூக்கத்திலேயே இருக்கும் நிலையில் joe அவரை அங்கேயே விட்டு விட்டு  வேலைக்கு  சென்று  விடுகிறார்.

பத்திரிகை  ஆசிரியர் தாமதமாக வந்ததற்காக ஜோவை திட்டி தீர்க்கிறார், ரோமிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும்  இளவரசியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு  சென்றதாக  பொய்த் தகவல் தெரிவிக்கிறார். ஆனால் இளவரசி உடல் நிலை சரி  இல்லாததால்  பத்திரிகையாளர் சந்திப்பு நிகழவில்லை என ஆசிரியர் தெரிவித்து  பொய் சொன்ன  ஜோவை  கண்டிக்கிறார், அச்சமயத்தில்  இளவரசியின்  புகைப்படத்தை  பார்த்து  ஆச்சர்யமடைந்த ஜோ,  இரவில் சந்தித்து அவருடைய வீட்டில் தங்கியிருக்கும் பெண் தான் இளவரசி என்பதையுணர்ந்து உடனே  ஆசிரியரிடம்  இளவரசியின் பிரேத்தியக  பேட்டியை  வாங்கி  வருவதாக  பந்தயம்  கட்டி  விட்டு செல்கிறார்.

ஜோ  தனது வீட்டில் தங்கியிருப்பது இளவரசி என உணர்ந்த பிறகு அவசரமாக வீடு  நோக்கி விரைகிறார், இதற்கிடையில்  தனது புகைப்படம்  எடுக்கும்  நண்பரிடம்  விசயத்தை  கூறி  இளவரசிக்கு  தெரியாமல்  அவரை  புகைப்படம் எடுக்க  வேண்டும்  என கேட்டுக்கொண்டு  இளவரசியை  வீட்டில் சந்தித்து ரோமை சுற்றி  காட்டுகிறேன் என அழைக்க,  அதை  இளவரசி மறுத்து  விட்டு இரவு ஜோ வீட்டில் தங்கியதற்கும் மயக்க நிலையில் உதவியதற்க்கும் நன்றி கூறி விடைபெறுகிறார்.

உல்லாசமாக ரோம் நகரை தன்னந்தனியாக சுற்றி வரும் இளவரசி தனது சுதந்திரத்தை முதன் முறையாக  முழுமையாக அனுபவிக்கிறார்.  ஜோ இளவரசிக்கு தெரியாமல்  அவரை பின்  தொடர்ந்து மறுபடியும்   எதேச்சையாக  சந்திப்பது  போல  இளவரசியை சந்தித்து அந்நாள்  முழுவதும் அவரோடு  செலவிடுகிறார்.  இரவு  ஒரு படகில்  நாட்டியமாட  செல்கிறார்கள் இளவரசியும் ஜோவும், ரோம் உளவுத்துறை  இளவரசி அங்கிருப்பதை  அறிந்து  அவரை மீட்டு  வர  அங்கே வருகிறார்கள்  ஆனால் அங்கிருந்து  இளவரசியும்  ஜோவும் உளவாளிகளின்  கண்களில்  மண்ணை தூவி விட்டுத் தப்பிக்கிறார்கள். இந்த ஒரு நாள் நட்பு  இளவரசிக்கு ஜோ   மீது  ஒரு ஈர்ப்பை  உண்டாக்குகிறது அது  காதலாகவும்  மலர்கிறது  ஆனால் இளவரசி இந்த உறவு  தொடரமுடியாத  ஒரு நட்பு என உணர்ந்து   ஜோவை விட்டு ரோமின்  பயண  மாளிகைக்கு  செல்கிறார்.

இதற்கிடையில்  ஜோவின்  பத்திரிகையாசிரியர் இளவரசி காணாமல்  போயிருப்பதையும் ஜோவிற்கு  இளவரசி இருக்குமிடம்  தெரியுமென்பதையும் புரிந்து கொள்கிறார். ஆனால்  ஜோ  இதை மறுத்துவிட இளவரசியோடு  அவருக்குத் தெரியாமல் எடுத்த  புகைப்படங்களையும்  வெளியிடாமல்  தவிர்த்து  விடுகிறார்.

மறுநாள், இளவரசி  பத்திரிகையாளர்  கூட்டத்தில்  ஜோவை சந்திக்கிறார், ஜோவின் புகைப்படமெடுக்கும் நன்பர்  அவர்  எடுத்த புகைப்படங்களை  இளவரசியிடம்  கொடுத்து , அவருடைய ரகசியங்கள்  காப்பற்றப்பட்டதை  சொல்லாமல்  சொல்கிறார்.  இளவரசியும்  ஜோவும் பிரிய  மனமில்லாமல்  பிரிகிறார்கள். அவர்களுடைய  சொல்லமுடியாத, விவரிக்க  முடியாத  காதலை   கண்களால்  பரிமாறி  கொள்கின்றனர்.

பின்னூட்டங்கள்
  1. kkarthikeyan சொல்கிறார்:

    Nice writing keep to show ur world cinema reviews.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s