மெலினா

Posted: ஜூலை 2, 2010 in உலக சினிமா
குறிச்சொற்கள்:, , , , , , , , ,

 மெலினா திரைபடம், சினிமா பாரடைசோவை தயாரித்து இயக்கிய GIUSEPPE TORNATORE அவர்களால் இயக்கப்பட்டது.  

கதை சிசிலியில் 1940 ல் தொடங்குகிறது, அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் காலம். கதாநாயகி மெலினாவின் கனவன் இராணுவப் பணியில் ஈடுபட்டிருந்தார்.  போரில் மெலினாவின் கனவர் இறந்து விட்டதாக கருதப்பட்டது. இதனால் மெலினா மனமுடைந்து காணப்பட்டாள் ஆனால் தன் சோகத்தை உள்ளுக்குள் மறைத்து வைத்து சமாளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடை அனியும் விதமும், பார்வையும், அழகும் பார்ப்பவர்களை கிறங்கடித்தது. அதனால் உள்ளூர்ப் பெண்கள் மெலினாவை பொறாமையோடு பார்த்தார்கள் மேலும் அவளின்  நடத்தையை சந்தேகக் கண்ணோடு பார்த்தார்கள். உள்ளூர் வாலிபர்கள் அவள் மேல் மோகவலை வீசிக்கொண்டிருந்தர்கள் அதில் கதையின் நாயகனான ரெனாடோ என்ற 12 வயது சிறுவனும் அடக்கம்.  ரெனாடோ, மெலினாவை நினைத்து வெகுவாக ஏங்கினான், மேலும் அவளை நினைத்து சுயஇன்பம் அடையும் அளவிற்கு மெலினாவின் மேல் பைத்தியமாய் இருந்தான்.

ரெனாடோ, மெலினா தனியாக இருந்து வாடுவதையும் அவளின் சோகத்தையும், அவளை உள்ளூர் வாசிகள் மோகத்தோடு பார்ப்பதையும், பெண்கள் பொறாமையோடு பேசுவதையும் நன்கு அறிவான். அவளின் அழகு தான் அவளுக்கு இந்த அவப்பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது என ரெனாடோ நம்பினான். அவளின் நன்னடத்தை ரெனாடோவிற்கு தெரியும். மெலினாவின் தந்தை ஒரு காது கேட்காத லத்தின் பேராசிரியர், மெலினா அடிக்கடி தன் தந்தையை சென்று அவரை கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் அவளது அப்பாவிற்கு ஒரு மொட்டை கடிதம் வந்து இருந்தது அதில் மெலினாவின் நடத்தையை குறை கூறி இருந்தது, இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படலாயிற்று. இதற்கிடையில் போர் தீவிரமடைந்தது மெலினா வசிக்கும் ஊரின் மேல் குண்டு மழை பொழிந்தது அதில் மெலினாவின் தந்தை கொல்லப்படுகிறார்.

மெலினாவின் பொரளாதார நிலைமை மோசமடைகிறது. அவள் மேல் ஒரு கடன் வழக்கும்  தொடுக்கப்படுகிறது,  மெலினாவின் வறுமை அவளை விபசாரத்திற்கே  தள்ளிவிடுகிறது, ஊர் மக்கள் முன்பு பழி போட்டது போலவே இப்போது மெலினாவின் நன்னடத்தை பாழாகியது. ஜெர்மன் துருப்புகள் அவளுடைய ஊருக்கு வந்த போது மெலினா அவர்களுடனும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறாள், ரெனாடோ மெலினா 2 ஜெர்மன் வீரர்களுடன் உறவு கொள்வதை காண்கிறான், அதன் பிறகு ரெனாடோவிற்கு உடல்நிலை சரி  இல்லாமல் போகிறது, அவனது அம்மாவும் மற்ற சில ஊர் பெண்களும் ரெனாடோவுக்கு பேய் பிடித்திருப்பதாக   நினைக்கிறார்கள். ஆனால் ரெனாடோவின் தந்தை அவனுக்கு காமப்பசி உள்ளது என்றும் அதை நினைத்தே உருகுகிறான், அதனால் அவனை ஒரு விபசாரியிடம் அழைத்து செல்கிறார். ரெனாடோ, மெலினாவை  நினைத்து கொன்டே அந்த விபசாரியிடம் உறவு கொள்கிறான்.

போர் முடிவுக்கு வந்தபிறகு மெலினாவை அந்த ஊர் மக்கள் ஒரு பொது இடத்தில் வைத்து அவளை அசிங்கப்படுதுகிரர்கள், அவளது சுயமரியாதையை இழக்க செய்கிறார்கள், மேலும் அவளை அடித்து உதைக்கிறார்கள். இதனால் மெலினா அந்த ஊரை விட்டுப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு மெலினாவின் கனவன் ராணுவத்தில் இருந்து திரும்பி வந்து பார்க்கும்போது அவனது வீடு அகதிகள் தாங்கும் இடமாக காட்சி அளிக்கிறது, அவனது மனைவியை தேடிக்கொண்டிருக்கும்போது ரெனாடோ ஒரு மொட்டை கடிதத்தின் மூலம் மெலினா இருக்குமிடத்தை அவளது கனவனுக்கு தெரிவிக்கிறான்.

ஒரு வருடத்துக்கு பிறகு மெலினா அவளது கனவனுடன் ஊருக்கு திரும்புகிறாள், ஊரிலுள்ள பெண்கள் ஆச்சர்யத்துடன் அவளை பார்க்கிறார்கள். அவள் உடல் சற்று பருமனாகிப்போய் இருந்தது, கண்களுக்கு கீழே கருப்பு வளையங்களும், உடலில் கொஞ்சம் தளர்ச்சியும், தோலில் லேசான சுருக்கங்களும் கானப்பட்டன. ரெனாடோ, கடைசி காட்சியில், கடற்க்கரை சாலையில்  மெலினா தவற விட்ட ஆரஞ்சு பழங்களை எடுத்து கொடுத்துவிட்டு “குட் லக் மிஸ்ஸஸ் மெலினா” என்று சொல்லிவிட்டு தனது சைக்கிளில் போவது போலவும்,  சிறிது தூரம் போன பிறகு, சைக்கிளை நிறுத்தி மெலினா நடந்து போவதை கடைசியாக பார்ப்பது போல முடியும்.

நான் பார்த்த பெண்கள் யாவரும் என்னை நினைவில் வைத்துகொள் என்று கேட்டிருக்கிறார்கள், ஆனால் நான் விரும்பிய பெண் என்னிடம் அப்படி கேட்கவில்லையே என்ற ரெனாடோவின் குரலோடு படம் முடிகிறது.

சினிமா பரடைசோ, இல் போஸ்டினோ போன்ற உலகத்தரம் வாய்ந்த பட வரிசையில் வந்ததே  இந்த படம், இது  இத்தாலிய மொழியில் வெளியான படம்.  மோனிக்கா பெலூச்சியின் சிறப்பான நடிப்பு இந்த திரைப்படத்தின் ஒரு சிறப்பு அம்சம். இந்த படம் GIUSEPPE TORNATORE என்பவரால் இயக்கப்பட்டது. படத்தில் சிறுவர்கள் செய்யும் சில்மிஷங்கள் மற்றும் ரெனாடோ மெலினவை நினைத்து ஏங்கும் காட்சிகள் ரசிக்கும் படியாக அமைந்திருக்கும். ஒரு பெண் தனது அழகின் கவர்ச்சி காரணமாக எவ்வளவு  தூரம் மனதாலும் உடலாலும் பாதிக்கப்படுகிறாள் என்பதையும், பெண்கள் தனியாக சமுகத்தில் இருப்பது இத்தாலியாக  இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் நடைமுறையில் அவர்களுக்கு எவ்வளவு  அநீதிகளை இந்த சமூகம் செய்கிறது என்பதை கதை நமக்கு சொல்கிறது.

பின்னூட்டங்கள்
  1. soundr சொல்கிறார்:

    நல்ல முய‌ற்ச்சி.
    இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு படம் என்பது கடினமான முய‌ற்ச்சி.
    வாரம் ஒன்று என்பது, பலர் தவறாது படிக்க (அதன் பின் அப்படத்தினை பார்க்க) ஏதுவாக இருக்கும். உங்களுக்கும் சிறப்பாக எழுத போதிய நேரம் கிட்டும்.

    http://vaarththai.wordpress.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s