வக்காளத்து

Posted: ஜூலை 4, 2010 in அங்கலாய்ப்பு
குறிச்சொற்கள்:, , , , , ,

நாளை பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நடத்தும் பாரத் பந்த்…

 உன்மையில் நம்முடைய எரிபொருள் விலை அதிகமாகவா இருக்கிறது? இப்படி ஒரு எஸ்.எம்.எஸ். சில நாட்களுக்கு முன்  எனக்கு ஒரு நன்பர் அனுப்பி இருந்தார். வெகுவாக என் கவனத்தை ஈர்த்த அந்த வாசகம் என்னை மேலே படிக்க தூண்டியது. பெட்ரோலுக்கு பதிலாக வேறு நீர்மப் பொருட்களை நம் வாகனங்களுக்குப் பயன்படுத்தினால் என்னவாகும் என்று நகைச்சுவையாக கேள்வி கேட்கப்பட்டு பதிலும் அதிலே இருந்தது. 

பெட்ரோல் 1 லிட்டர் விலை தோராயமாக 53 ரூபாய்

 கோகோ கோலா 330 ml கேன் விலை 25 ரூபாய் ( 76 ரூபாய் – 1 லிட்டர் )

இளநீரின் விலை 200 ml தோராயமாக 25 ரூபாய் ( 125  ரூபாய் – 1 லிட்டர் )

 பேன்டீன் கண்டிஷனர் 400 ml விலை 165 ரூபாய் ( 413  ரூபாய் – 1 லிட்டர் )

பாராஷூட் எண்ணெய் 100 ml விலை 21 ரூபாய் ( 210  ரூபாய் – 1 லிட்டர் )

 லெக்ஸ்மார்க் இங்க்ஜெட் காட்ரெட்ஜ் 21 ml விலை 950 ரூபாய் ( 45 ,238  ரூபாய் – 1 லிட்டர் )

 அதனால் பெட்ரோல் விலையுயர்வை பெரிது படுத்தாதீர்கள், உங்கள் வண்டி கோகோ கோலா, இளநீர், பேன்டீன் கண்டிஷனர், பாராஷூட் எண்ணெய், லெக்ஸ்மார்க் இங்க்ஜெட் காத்ரெட்ஜ் இதில் எல்லாம்  ஓடவில்லையே என சந்தோஷப்படுங்கள், சிந்தியுங்கள், அரசாங்கத்துக்கு ஒத்துழையுங்கள், ஜெய் ஹிந்த் என்று அந்த வாசகம் முடிவுற்று இருந்தது.

 SUBSIDY அதாவது அரசு உதவி என்னமோ இந்தியாதான் கண்டுபிடித்தது போல இங்கே சிலர் கூப்பாடு போட்டு கொண்டிருக்கிறார்கள் எல்லாவற்றுக்கும் அரசு உதவி கொடுத்தால் அரசு எந்திரம் எப்படி இயங்கும் என்ற கேள்வி வேறு. ஒரு அரசாங்கத்துக்கு என்று சில கடமைகள் இருக்கிறது அது மக்களை ஒரு சம நிலையில் கொண்டு செல்லவேண்டும் அதற்காக சமூகத்தில் சில ஏற்றத்தாழ்வுகளை சரிகட்ட அரசு உதவி கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம்.  எல்லோரும் ஒரு சமநிலையில் இருக்கும்போது, வாங்கும் திறனுக்கேற்ப விலைவாசியை கட்டுக்குள் வைத்திருத்தல் இது எல்லாம் ஒரு அரசின் தலையாய கடமையாகும்.

 அரசு உதவி பற்றி பேசுவோர் கூட இந்த விலை உயர்வை எதிர்க்கிறார்கள் காரணம் இதில் இவர்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிறு சிறு நாடுகளில் கூட நல்ல தரமான கல்வியும், நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான சுகாதார வசதியும் இலவசமாக கிடைக்கிறது,   இங்கு தரம் என்று பார்க்கும்போது தனியார் நிறுவனங்கள் தானே கண்ணுக்கு தென்படுகின்றன.  அரசல் புரசலாக வந்த ஒரு தகவல் ரிலையன்ஸ் நிறுவனம் 3500 பெட்ரோல் பங்க்குகள் திறக்கபோவதாக வந்திருகிறது. எதேச்சதிகர பணக்கார முதலைகளின் கையில் பொருளாதாரக் கொள்கை என்ன பாடுபடுகிறது பார்த்தீர்களா?, பெட்ரோல் விலையை முரளி தியோராவா நிர்ணயிக்கிறார்?…

நன்றி: http://cartoonataglance.blogspot.com/2008/06/petrol-price-hike-cartoons-in-dinamani.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s