சூ சைன் (Shoe shine)

Posted: ஜூலை 5, 2010 in உலக சினிமா
குறிச்சொற்கள்:, , ,

VITTORIO DE SICA என்பவரால் இயக்கப்பட்டு 1946ல் வெளியான இத்தாலிய மொழி படம் இது. 

 குசுப்பி, பாஸ்கல் என்ற இரண்டு சிறுவர்கள் ரோம் நகரில் சூவிற்கு பாலிஷ் போடும் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  அவர்களின் கனவு ஒரு குதிரை வாங்க வேண்டும் என்பதே ஆனால் அவர்களின் வருமானத்தில் குதிரை வாங்குவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என்பது அவர்களுக்கு தெரியும்.

 ஒரு நாள் சூ பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தபோது, குசுபியின் மூத்த சகோதரன் அவர்களை கான வந்திருந்தான்,  பான்சா என்பவனிடம் வேலை இருப்பதாகவும் அவனை போய் பார்க்க சொன்னான்.  பான்சா அவர்களிடம் 2 அமெரிக்கப் படுக்கை விருப்புகளை கொடுத்து ஒரு ஜோசியம் சொல்லும் பெண்மணியிடம் விற்று வர சொல்லி அனுப்புகிறார், கொஞ்ச நேர பேரத்திற்கு பிறகு அந்த பெண்மணி படுக்கை விருப்புகளை சிறுவர்களிடமிருந்து வாங்கி கொள்கிறார். சற்றுநேரத்துக்கெல்லாம் பான்சா, குசுப்பியின் சகோதரன் மற்றும் சிலரோடு அங்கு வந்து, நீங்கள் கடத்தல் பொருட்களை வாங்குகிறீர்களா என்று போலியாக காவலர்கள் போல நுழைகிறார்கள். அங்கே அந்த பெண்மணியிடம் வாங்கிய 2800 லீராவுடன் மேலும் மூவாயிரம் லீராவுடன் குசுபியின் சகோதரன் இவர்களை இங்கு நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லி அனுப்பி விடுகிறான். சிறுவர்களுக்கு  குதிரை வாங்க தேவையான பணம் கிடைத்தது குறித்து பெருத்த மகிழ்ச்சி.

 குதிரையை வாங்கி அதிலேறி ஆனந்தமாக ஊர் சுத்திவிட்டு நகருக்குள் வரும்போது உண்மையான காவல் அதிகாரிகள் 2 சிறுவர்களையும் கைது செய்தனர். அவர்களுடன் ஜோசியக்காரப் பெண்மணியும் இருந்தார் அவர் வீட்டில் இருந்து 700,000  லிராக்களை இந்த சிறுவர்கள் பொய்யான காவல் அதிகாரிகளுடன் வந்து திருடிக் கொண்டு போனதாக பிராது கொடுத்து இருந்தது பின்பே அவர்களுக்கு  தெரியவந்தது. சிறுவர்களுக்கு இதை பான்சாவும் குசுபியின் சகோதரனும் தான் செய்திருப்பார்கள் என தெரிந்தும் அவர்களை காட்டிக் கொடுக்கவில்லை மேலும் தாங்கள் நிரபராதிகள் என போராடினர் ஆனால் அவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். 

குசுபியும் பாஸ்களும் ஐந்து பேர் கொண்ட தனித்  தனி அறைகளில் அடைக்கப்பட்டனர். 2 பேரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முயற்சி செய்தனர், ஆனால் சிறை  அதிகாரிகளின் கெடுபிடியால் அவர்கள் பிரிந்தே இருந்தனர். அதனால் அவர்கள் அறையில் இருக்கும் மற்ற  நன்பர்களோடு அவர்கள் சிநேகித்து கொள்ளவேண்டியதாயிற்று.

 இதற்கிடையில் குசுப்பிக்கு அவனது அம்மாவிடம் இருந்து ஒரு பார்சல் வந்தது, அதில் நிறைய தின்பண்டகள் இருந்தன, அதை பாஸ்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டான், அனால் சிறை நிர்வாகம் அதற்கு தடை சொல்லவே தனது அறை நன்பர்களோடு பகிர்ந்து உண்டான் உண்ணும் பொது ரொட்டி ஒன்றில் ஒரு சிறு சீட்டு வைக்கபட்ட்டு  இருந்தததை சிறை  நன்பர்கள் கூறினார்கள் அதில் குசுப்பி அவனது சகோதரனை பற்றியோ பான்சாவை பற்றியோ காவலர்களிடம் எதையும்  கூறவேண்டாம் என அறிவுருத்தபட்டிருருந்தது , இதை பாஸ்கலிடம் தெரிவித்து அதன் படியே நடக்க இருவரும் தீர்மானித்தார்கள்.

சில நாட்களுக்கு பிறகு விசாரணை தொடங்கியது, இருவரும் தாங்கள் குற்றம் செய்யவில்லை, இதற்க்கு யார் காரணம் என்று தெரியாது எனவும் கூற, சிறை அதிகாரி உண்மையை சொல்லாவிடில் உங்களை துவம்சம் செய்துவிடுவேன் என மிரட்டினார். அது போலவே குசுப்பியை அவனது அறைக்கு அனுப்பிவிட்டு, இன்னொரு சிறுவனை அடிப்பது போல நாடகம் ஆட பாஸ்கல், குசுப்பி அடி வாங்குவதாக என்னி அவன் மேல் உள்ள அன்பின் காரணமாக உண்மையை சொல்லிவிடுகிறேன் அவனை அடிகாதீர்கள் எனக் கதறி இந்த திருட்டுக்கு பின்னால் குசுப்பியின் சகோதரனும் பான்சாவும் இருப்பதை கூறி விடுகிறான்.

 விசாரனைக்குப் பின் ஒரு நாள்  குசுப்பியின் அம்மா சிறைக்கு அவனை கானவரும்போது பாஸ்கல் அவனது சகோதரனை காட்டிக்கொடுத்துவிட்டான் என்பதை அறிந்து  கொள்கிறான், இதனால் கொதிப்படைந்து பாஸ்கலை அவனது சிறை நன்பர்கள் முன்னிலையில் அடித்து காயப்படுத்துகிறான் ஆனால் இறுதியில் பாஸ்கல் வெற்றி பெறுகிறான். இதற்கிடையில் நீதிமன்றத்தில்   இவர்களின் வழக்குவிசாரனைக்கு வந்து அதில் இருவரும் குற்றவாளிகள் எனவும் தலா 1 , 2  வருடங்கள் என தன்டனை விதிக்கப்படுகிறார்கள். ஒரு நாள் சிறையில் சிறுவர்களுக்காக திரைப்படம் திரையிடப்பட்டிருகும் சூழ்நிலையில் குசுப்பியின் நன்பன் ஒருவனின் துணை கொண்டு சிறையை விட்டு தப்பிக்கிறான் அதில் ஏற்பட்ட கலவரத்தில் பாஸ்கலின் சிறை நன்பன் ஒருவன் இறக்கவும் நேரிடுகிறது.

பாஸ்கல் சிறை அதிகாரியிடம் தனக்கு குசுப்பி இருக்கும் இடம் தெரியும் எனவும் அவனை பிடிக்க தான் உதவுவதாகவும் கூறி  ஒரு குதிரை லாயத்திற்க்கு அழைத்து சென்றான் ஆனால் அவன் அங்கு செல்வதுற்கு முன்பே குதிரையை எடுத்து கொன்டு குசுப்பியும் அவனது சிறை நன்பனும் தப்பித்து சென்றுவிட்டனர், தேடுதல் வேட்டையின் போது பக்கத்திலிருந்த ஒரு பாலத்தை கடக்க முயற்சிக்கும் போது குசுப்பி பாஸ்கலிடம் பிடிபடுகிறான். அவனது சிறை நன்பன் தப்பித்து ஓடி விடுகிறான், பாஸ்கல் அவனை தன்னுடைய இடுபிலணியும் வார் கொண்டு அடிக்க  அங்கு நடந்த கை கலப்பில் குசுப்பி பாலதிலிருந்து விழுந்து ஒரு பாறையின் மீது அவன் தலை மோதுகிறது. இறந்த தன் நண்பனின் உடலை பிடித்துக்கொன்டு பாஸ்கல் அழுகிறான். படம் முடிவடைகிறது.

பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  சூ சைன்-மிளிர்கிறது.

 2. soundr சொல்கிறார்:

  conclusion is very important, when you present the story of the movie. if not, you loose your importance in making this article.
  add a line or more about what this movie tries to convey, its effect on you or the people who watch it; at the end of the article.
  this is just a suggestion.

  http://vaarththai.wordpress.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s