கேரளா கபே சென்ற வருடம் மலையாளத்தில் வெளியான ஒரு தொகுப்பு படம், சிறுகதை தொகுப்பை புத்தகமாக படித்திருப்போம் அதை திரையில் பார்ப்பது புது வித அனுபவமாக இருக்கும். இந்த படத்தை ரஞ்சித் தயாரித்து 10 இயக்குனர்கள் தங்களது படைப்புக்களை வழங்கி இருக்கிறார்கள் அவர்கள் முறையே லால் ஜோஸ், சாஜி கைலாஷ், அன்வர் ரஷீத், ஷ்யாமா பிரசாத், உன்னி கிருஷ்ணன், ரேவதி, அஞ்சலி மேனன், பத்ம குமார், சங்கர் ராமகிருஷ்னன், உதய் ஆனந்தன். இந்த தனித்தன்மை வாய்ந்த திரைப்படத்தில் ஏறக்குறைய மலையாள திரையுலகே நடித்து இருக்கிறது (மோகன்லால், ஜெயராமை தவிர).

கேரளா கபே ஒரு ரயில்வே உனவு விடுதி, இந்த படத்தில் வரும் 10 கதைகளின் களங்களும் வெவ்வேறானவை ஆனால் அவைகளை தொடர்புபடுத்தும் களமாக இந்த கேரளா கபே இருக்கிறது, படத்தின் இறுதி காட்சி அதாவது 11 வது கதை போல,  தொகுக்கும் இடமாக அனைத்து கதாபாத்திரங்களையும் கேரளா கபேயில் ஒருங்கிணைத்து முடித்திருக்கிறார்கள். 

NOSTALGIA 

இயக்குனர் பத்ம குமாரால் இயக்கப்பட்ட படம், இதில் திலிப், நவ்யா நாயர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். திலிப் NRI இந்தியராக தாய் நாட்டை ஏங்கி தவிப்பராக  நடித்து இருக்கிறார். இந்த குறும்படம் பதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. சுமார் ரகம் தான். கதா பாத்திரங்கள் இயல்பாக நடித்திருகின்றனர்.

ISLAND EXPRESS

இயக்குனர் ஷங்கர் ராம கிருஷ்ணன் இயக்கி பிரித்திவிராஜ் முக்கிய வேடம் ஏற்று நடித்திருக்கிறார். இந்த படம் ஒரு ரயில் விபத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருகிறது, விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களையும் அவர்களின் நினைவுகளையும் சுற்றி வருகிறது இந்த குறும்படம்.

 LALITHAM HIRANMAYAM  

ஷாஜி கைலாஷ் இயக்கிய இதில் சுரேஷ் கோபி, ஜோதிர் மயி மற்றும் தான்யா முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். இது ஒரு மனிதனின் திருமனத்திற்கு பின்னால் தொடரும் ஒரு காதலையும் அவனது இறப்பிற்கு பின் இருவருக்கும் ஏற்படும் ஒரு பந்தத்தையும் பற்றி சொல்கிறது இந்த குறும்படம். 

 MRITUNJAYAM

இந்த குறும்படம் உதய் ஆனந்தினால் இயக்கப்பட்டு பாஹத், திலகன், ரீமா முக்கிய முக்கிய கதாபாத்திரங்களை  எடுத்து நடித்துள்ளனர். இது திகில் வகையை சார்ந்த படம், ஒரு பழைய வீட்டையும் அதில் ஏற்படும் சில சம்பவங்களையும் வைத்து படம் எடுக்கப்படிருக்கிறது, படம் எடுக்கப்பட்ட விதம் நன்றாக அமைந்திருகிறது.

HAPPY JOURNEY

இந்த குறும்படம் அஞ்சலி மேனன் இயக்கியது, ஜகதி ஸ்ரீகுமார், நித்யா மேனன் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்து இருக்கின்றனர். இது ஒரு பயணத்தின் போது ஒரு நபரின் எரிச்சல் ஊட்டக்கூடிய பேச்சினை கட்டுபடுத்த தான் ஒரு தீவிரவாதி என்றும் இந்த பேருந்தை வெடிக்க செய்யப்போவதாகவும் கூறி அந்த நபரை பயமுறுத்துவதாக அமைந்திருக்கும் ஒரு நகைச்சுவை கலந்த படம். உண்மையில் நன்றாகவே இருக்கிறது.

 AVIRAMAM

உன்னி கிரிஷ்ணனால் இயக்கப்பட்டு சித்திக், ஷ்வேதாவால் நடிக்கப்பட்டது. இது ஒரு மனிதன் பொருளாதார நிலைமை காரணமாக தற்கொலை பண்ணிக்கொள்ள எண்ணுவதும் முடிவில் அன்பு, பாசம் அவனை எப்படி தன்னம்பிக்கை பெறச்செய்து தற்கொலை எண்ணம் கைவிட செய்கிறது என்பதே கதை. இதில் சிறப்பம்சம் நடிப்பு.

OFF SEASON

இது ஒரு நகைச்சுவை கதை. இது ஒரு போர்சுகீஸ் தம்பதியும், பயன வழிகாட்டியை பற்றியது. ஷ்யாமா பிரசாதால் இயக்கப்பட்டு சுராஜ் நடித்தது. கோவளம் கடற்கரை கதை களமாக இருக்கிறது. 

BRIDGE 

ஒரு அனாதையாக்கப்பட்ட ஒரு பூனை குட்டியையும், ஒரு மூதாட்டியையும் இணைத்து பின்னப்பட்ட கதை, அன்வர் ரஷீதால் இயக்கப்பட்டு கல்பனா, சலீம் குமார் மற்றும் சிலரால் நடிக்கப்பட்டது. பூனை குட்டியை இழந்த சிறுவனின் நடிப்பு அருமை.

 MAKAL  

நடிகை ரேவதியால் இயக்கப்பட்டது, ஒரு ஏழை தமிழ் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுமி தத்தெடுக்கும் ஒரு தம்பதி மூலம் தத்தெடுக்கப்பட்டு சிகப்பு விளக்கு பகுதிக்கு விற்கப்படுவதே கதை கரு. கதை பழையதாக இருந்தாலும் நடிப்பும், களமும்,  காட்சி அமைப்பும் நன்றாகவே உள்ளது.

 PURAM KAAZHCHAKAL

லால் ஜோசால் இயக்கப்பட்ட இந்த படத்தில் மம்மூடியும், ஸ்ரீனிவாசனும் நடிதிருக்கின்றனர் , வெகு இயல்பான நடிப்பு, ஒரு துக்க நிகழ்ச்சிக்கு பயனப்படும் ஒரு பயணியும் அவன் துரிதமாக செல்லவேண்டிய அவசரத்தில் எரிச்சலில் அவனின் செயல்கள் சக பயணிகள் அவன் பால் வெறுப்பை காட்டுவதுமாக கதை செல்கிறது இறுதியில் அவன் நிலை கண்டு பயணிகள் இறக்கப்படுவதுமாக கதை முடிகிறது. மனிதாபிமானத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். 

கேரளா கபே உண்மையில் நல்லதொரு முயற்சி, சிறுகதை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் படம்.

பின்னூட்டங்கள்
  1. படைப்பாளி சொல்கிறார்:

    மலையாள சினிமா மேற்க்கொண்ட வரவேற்கத்தக்க முயற்சி..கொடுக்கும் பணத்திக்கு,பார்வையாளனை ,ஒரு படம் திருப்தி பண்ணாவிடினும் ,இன்னோர் படம் திருப்தி படுத்தும்.மற்ற திரைத்துறையினரும் இதைக் கடைப் பிடித்தால் நன்றாக இருக்கும்….பல கலைஞர்கள்,இயக்குனர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவும்இது வழிவகையாக அமையும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s