லெட்ஸ் டாக் ஆங்கிலத்தில் 2002 ல்  வெளியான ஒரு இந்தியத் திரைப்படம். மும்பையில் வசிக்கும் ஒரு மேல்தட்டு  தம்பதியை பற்றிய கதை.

ராதிகா, நிக்கில் தம்பதி 10 வருடங்களாக திருமண பந்தத்தில் இருப்பவர்கள். ராதிகாவுக்கும் அவருடைய புது அடுக்குமாடி குடியிருப்பின் INTERIOR DESIGNER கிருஷ் க்கும்  6 மாத காலமாக ரகசியத் தொடர்பு இருந்து வந்து அதன் காரணமாக ராதிகா கருவுருகிறாள். இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறாள் ராதிகா. கருவை கலைக்க நினைக்கிறாள் ஆனால்  நிக்கிலுக்கு இந்த குழந்தையை கலைக்க விருப்பமில்லை.  ராதிகா இந்த விஷயத்தை தன் கணவனிடம் சொல்லிவிட வேண்டும் என நினைக்கிறாள் அதற்கு முன் அவளுடைய தோழி ஒருவளிடம் இது பற்றி விவாதிக்கிறாள். அவள் முதலில் நிக்கில் எப்படி இதை எடுத்துகொல்வான் என யோசி அதற்கு பிறகு நீ என்ன செய்ய நினைக்கிறாயோ அதை செய் என அறிவுரை கூறுகிறாள். பின்னர் ராதிகா இந்த விசயத்தை கூறினால் நிக்கில் எப்படி எடுத்துக்கொள்வான் மேலும் அவன் செயல்ப்பாடு எப்படி இருக்கும் எனவும் நினைத்து பார்ப்பதே கதை.

திரைக்கதையில் இயக்குனர் ராதிகா உண்மையை கூறும் போது அதற்கு நிக்கில் எப்படி செயல்படுவான் என்று ராதிகா கற்பனை பன்னுவது போல அமைத்து இருக்கிறார், நிக்கில் தற்கொலை செய்து கொள்வது போலவும், அடிப்பது போலவும், இயலாமையில் புலம்புவது போலவும், அழுது புலம்புவது போலவும், வார்த்தைகளால் குரூரமாக கடிந்து கொள்வது போலவும், பல கோணங்களில் இந்த விஷயத்தை கேள்விப்பட்டால் ஒரு ஆண் எப்படி நடந்து கொள்வான் என ஆராய்ச்சி முறையில் காட்சிகளை பகுத்திருக்கிறார். உண்மையில் ஒரு பாரட்டப்பட வேண்டிய முயற்சி. காட்சிகள் 99 சதவிகிதம் 2 பேர்கள் மட்டுமே பங்குபெறும் கலந்துரையாடலாக அமைந்திருக்கிறது. 

படத்தின் கதாநாயகர் என்று பார்த்தால் திரைக்கதையும், அதை எழுதியவரும் தான். இதில் பொம்மன் ஈரானி நிக்கில் கதாபாத்திரத்தில் வெகு அசத்தலாக நடித்திருக்கிறார். ராதிகா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாயாவும் அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.  பொம்மன் நாடக நடிகராய் இருந்து திரைக்கு வந்து கதா நாயகனாய்  நடித்த முதல் படம் இது தான். இதற்க்கு முன் இவர் விளம்பரப் படங்களிலும், நாடங்களில் மட்டுமே பெரிதும் நடித்துக் கொண்டிருந்தார், இந்தப் படத்திற்கு பின் தான் இவர் முழு நேர சினிமா நடிகரானார். இந்தப் படத்தின்  இயக்குனர் ராம் மதவானிக்கு  முதல் படம் இவர் ஒரு விளம்பரப்படம் எடுப்பவர்.

 இந்தப் படத்தின் அடிப்படை கட்டமைப்பு துமிரி எனும் பாடல் வடிவத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருப்பதாக ஒரு தகவல். துமிரி பாடல்களின் தனித்தன்மை, ஒரு பாடலுக்குள் பல உணர்வுகளை கையால்வதாம். கண்ணன், ராதையை மையமாக கொண்டு துமிரி பாடல்கள் இருக்குமாம், இது உத்திரப்  பிரதேசத்தில் அவர்கள் வட்டாரவழக்கில் பாடப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

பின்னூட்டங்கள்
  1. படைப்பாளி சொல்கிறார்:

    இரண்டு கதாபாத்திரங்களையே மையப்படுத்திய நல்ல,வித்தியாசமான திரைக்கதை..நினைவூட்டலுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s