தூதரகத்துக்கு கொடுக்கிற பாதுகாப்பை கொஞ்சம் மீனவர்களுக்கும் கொடுக்க கூடாதா?

Posted: ஜூலை 11, 2010 in அங்கலாய்ப்பு
குறிச்சொற்கள்:, , , , ,

கொலை செய்தவனுக்கு இந்த நாட்டில் என்ன தண்டனை? என்ன குற்றப்பிரிவில் குற்றம் சுமத்தலாம்? குற்றவாளிக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா? இப்படி கேள்விக்கு மேல்  கேள்வி…. ஏன் இத்தனை கேள்விகள்? 

 எனது அலுவலகத்துக்கு செல்ல கதீட்ரல் சாலை வழியாக கஸ்தூரி  ரங்கன் சாலையை கடந்து தினமும் செல்வேன். கஸ்தூரி ரங்கன் சாலை நடுவே ஒரு குறுக்கு சாலை இருக்கிறது, சாலை ஆரம்பிக்கும் இடத்தில் தடுப்புகள்  போடப்பட்டு எப்போதும் குறைந்தது 5  காவலர்கள் இருப்பார்கள். அங்கே தான் இலங்கை தூதரகம் இருக்கிறது. எப்பொழுதெல்லாம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அங்கே காவல் பலப்படுத்தப்பட்டு இருக்கும். காவலர்கள் எண்ணிக்கை குறைந்தது ஐய்ம்பதை தாண்டும். வேடிக்கை என்னவென்றால் தவறு செய்தவனுக்கு காவல் பாதுகாப்பு. பாதிக்கபட்டவன் ஆர்பாட்டம் செய்தால் சிறை. நல்ல ஜனநாயகம்.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் லட்சத்தில் கூடுகிறது கூட்டத்தை, மாநாட்டுக்கும் மற்ற விழாவுக்கும். ஏன் இந்த ஆர்ப்பாட்டங்களில்  மட்டும் நூற்றுக்கும் குறைவாக பங்கு பெறுகிறார்கள். ஒரு முறை தூதரகத்தை சூறையாடி உங்கள் எதிர்ப்பை கொஞ்சம் ஆக்ரோஷமாகத்தான் காண்பியுங்களேன். அப்படியாச்சும் இந்த இந்திய அரசுக்கு சூடு சுரணை வருதான்னு பார்போம். விசாரித்து பார்த்ததில் நேற்று தூதரகம் முன்பு அரசியல் கட்சி ஒன்றின் ஆர்ப்பாட்டமாம். இலங்கை கடற்ப்படையினரால் நாகப்பட்டினம்   மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்பாட்டம்.  இந்த இந்திய அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கை தான் என்ன? இந்த மீனவர்கள் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு. பந்த் முதலானா அசாதாரண நிகழ்வுகளின் போது ரயில்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஒவ்வொரு பெட்டியிலும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்புக்கு போவது போல இங்கே ஏன் மீனவர்களுக்கு பாதுகாப்பு தரக் கூடாது? இங்க இருக்கிற தூதரகத்துக்கு கொடுக்கிற பாதுகாப்பை கொஞ்சம் கடலோர மாவட்ட மீனவர்களுக்கு கொடுக்கலாமே…

பின்னூட்டங்கள்
  1. படைப்பாளி சொல்கிறார்:

    நல்ல செய்தி ..யோசிக்கவேண்டிய விடையம்..

  2. gmurugan சொல்கிறார்:

    indian congress party with their allience pertentented to the people , why should we support to the government they do not support to tamil peoples, but some stupid poltician and government officer,to srilankan government,tamil people get injured they r laughing , better stop it,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s