சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்,  ஆனால் செந்தமிழை சித்திரம் தான் முதலில் கற்றுக்கொடுக்கிறது. குழந்தை ஒலியை அடிப்படையாக வைத்தே மொழியை புரிந்து கொள்கிறது. ஒலி வடிவமானதே மொழி. ஆனால் எழுத்து சித்திர வடிவமானது. பல நாகரீகங்கள் சித்திர எழுத்து முறையை கொண்டே மொழியின் வடிவத்தை உருவாக்கியது என்பதை நாமறிவோம்.  

அகரத்தை கற்றுக் கொடுக்கும் போது, வார்த்தையை சொல்லித்தான் கற்று தருகிறோம். அ-அம்மா ஆ-ஆடு எனும் வார்த்தைகள் மட்டுமல்ல, அம்மாவின் படமும் ஆட்டின் படமும் இல்லையென்றால் குழந்தைக்கு எழுத்து வடிவத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஆக சித்திரங்கள் மொழியை நமக்கு கற்றுத்தரும் முதன்மையான கருவி என்றால் அது மிகையில்லை.

எனக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டியதே சித்திரங்கள் தான், முதல் முதலில் வாசிக்க ஆரம்பித்ததே காமிக்ஸ் புத்தகங்களை தான், என்னை போல பலர் இப்படி தான் படிக்கும் ஆர்வத்திற்கு வந்திருப்பார்கள் என நான் நினைக்கிறன். காமிக்ஸ் கதைகள் தான் முதலில் நமக்கு கதை சொல்லிகள் (நமது பாட்டிகளை தவிர்த்து பார்த்தால்) 20௦ வருடங்களுக்கு முன் தமிழில் நிறைய காமிக்ஸ் புத்தகங்கள்  வந்தன. அதை தரம் மிக்க நூல்கள் என்ற வரையறைக்குள் கொண்டு வரவில்லை, ஆனால் படிக்கும் ஆர்வத்தை சிறுவயதில் உண்டாக்கியது என்பதில் ஐயமில்லை. 

இன்றைய காலகட்டத்தில் கேமரா கோணங்களுக்காகவும், பாத்திரங்களின் பார்வை கோணங்களுக்கான குறிப்புகளுக்காக (reference) காமிக்ஸ் சித்திரங்கள் பயன்படுகின்றன என்றால் ஆச்சர்யமாக இல்லை? அனால் உண்மை. இன்றைய இளைய தலைமுறை இயக்குனர்கள் பலர் stroyboard தயாரித்து கொண்டே படம் எடுக்க களத்திற்கு செல்கிறார்கள். Storyboard என்பது ஒன்றுமில்லை ஒரு காட்சியின் உத்தேச சித்திரம், அது காமிக்ஸ்களில் இருக்கும் சித்திரங்களை போலவே அமைந்திருக்கும். ஹாலிவுட்டில் இது கட்டாயம் என சொல்லப்படுகிறது. தயாரிப்புக்கு முந்தைய Pre-Productionல் Storyboard மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு அடுத்த கட்டமாக தற்போது அதை வீடியோவில் படமாக்கி ஒத்திகை பார்க்குமளவுக்கு முன்னேறி உள்ளது. ஆக சித்திரம் என்பது கதையின் அடிப்படையாக இன்றும் உள்ளது.

 மிக பிரபலமான காமிக்சுகள் திரைப்படங்களாக வந்திருக்கின்றன, Spiderman, Superman, Batman, Hulk, Iron man இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவை நிறைய வருமானம் ஈட்டி தந்தும் இருக்கின்றன. இவை பெரும்பாலும் Marvel காமிக்சுகள், ஆக குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் காமிக்ஸ் கதாநாயகர்களை பிடிக்கத்தான் செய்கின்றன. தமிழில் எடுத்துகொண்டால் மாயாவி, சிந்துபாத் போன்ற கதாநாயகர்கள் குறிபிடத்தக்கவர்கள்

இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட காமிக்ஸ் தற்போது அநேகமாக தமிழில் அழிந்தே விட்டது. என் மகனின் பிறந்த நாள் பரிசாக காமிக்ஸ் புத்தகங்களை பரிசாக கொடுக்க நினைத்து கடை கடையாக ஏறி இறங்கி தேடிய போது தமிழில் எந்த காமிக்சும் என் கண்ணில் படவில்லை. ஆங்கிலத்தில் இருக்கும் காமிக்சுகளோ ஆங்கில குழந்தை இலக்கியம் சார்ந்தவையாக இருக்கிறது. சில வடநாட்டு பதிப்பகங்கள் இதிகாசங்களையும், அவர்களின் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட காமிக்சுகளை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் தேடி அலைந்து முடிவில் ஒரு ஆங்கில காமிக்ஸ் புத்தகத்தை தான் பிறந்த நாள் பரிசாக கொடுத்தேன், மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டான் என் மகன். தமிழில் புத்தகத்தை கொடுக்க முடியவில்லையே என சிறிது வேதனையாகத்தான் இருந்தது. எனது இளம் பிராயத்து நினைவுகளில் மூழ்கியபடியே மனசுக்குள் சொல்லிக்கொண்டேன் நாம் நமது கதை சொல்லிகளை இழந்துவிட்டோம்.

பின்னூட்டங்கள்
 1. premcs23 சொல்கிறார்:

  கண்டிப்பாக யோசிக்க வேண்டிய ஒன்று..அடுத்த தலைமுறையிக்கு இந்த
  கதை சொல்லிகள் பற்றி தெரியாமையெ போய்விடும் போல இருக்கு

 2. படைப்பாளி சொல்கிறார்:

  உங்கள் ஏக்கத்தில் ,என்னையும் சேர்த்துக்கொண்டு கதைசொல்லிகளை தேடுகிறேன்..
  அப்பப்பா..அந்தப் பள்ளி காலத்தில்,ஆசிரியருக்கு தெரியாமல்,ஒளித்து வைத்து , ராணி காமிக்ஸ் படித்த அனுபவம் இன்னும் நெஞ்சில் நிழலாடுகிறது..

 3. soundr சொல்கிறார்:

  தமிழில் இப்போதும் காமிக்ஸ் வெளியிட்டு போராடிக்கொண்டிருக்கும் ஒரே பதிப்பகம், Prakash publishers, sivakasi. லயன் காமிக்ஸ்ன்னு நியாபகம் இருக்குமே.
  போன் செய்தும் ஆர்டர் செய்யலாம். Lion Comics Office Ph: 04562 272649.
  பல பழைய ஸ்டாக் இன்னும் இருக்கு, அவங்க கிட்ட.
  இன்னும் அதே பழைய ரேட் தான்.
  நெட்டில் பழைய காமிக்ஸ் தருகிறேன் என்று நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் யாராவது பணம் கேட்டால், அவர்களிடம் ஏமாற வேண்டாம். என்னிடம் வாருங்கள்…
  🙂

 4. nalavirumbi சொல்கிறார்:

  நல்ல நினைவை மலர வைத்திருகிறீர்கள். ஆனால் மலரை காணவில்லை இப்போது. நானும் என் மலரை தேடிக்கொண்டிருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s