தெர்சு உசலா, அகிரா குரோசோவாவின் படைப்புகளில் ஒன்று, இது சோவித்-ஜப்பான் கூட்டுத் தயாரிப்பு. சிறந்த வெளிநாட்டு படப்பிரிவில் 1975 வருடத்துக்கான ஆஸ்கார் வென்றது. விளாடிமிர் அர்செனிவ் என்ற ரஷ்யனின் தெர்சு உசலா என்ற சுய சரியதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். (சைபீரிய காட்டுப்பகுதியில் அர்செனிவ் பயணித்த பல பயணங்களை  மையமாக கொண்டது) அழகிய சைபீரியப் பகுதிகளில் இந்த  படம் படமாக்கபட்டுள்ளது. 

அர்செனிவ் ஒரு கல்லறையை தேடி போவதை தொடக்கமாக கொண்டு படம் அரம்பிக்கப்படுகிறது, பின்பு அர்செனிவ் தனது நினைவுகளில் மூழ்கி போகிறார். அங்கு கிராமங்கள் உருவாவதற்கு  முன் பயணம் மேற்க்கொளும்போது  தெர்சு உசலா என்ற ஒரு மலைவாழ் வேட்டைக்காரனை சந்திக்கிறார் அர்செனிவ், அவன் அவர்களின் பயணத்துக்கு உதவ முன்வருகிறார். தெர்சு உசலா அந்தப் பகுதியை பற்றிய அதீத அறிவு பெற்று இருந்தான். முதலில் அவனை பார்க்கும் போது ஒரு படிக்காத சாதாரண, வயது முதிர்ந்த மனிதனாகவே அர்செனிவ்க்கு தென்பட்டான், ஆனால் அவனுடைய சாதுர்யமும், கூர்மையான உள்ளுணர்வும், புத்தி கூர்மையும் அர்செனிவ் குழுவினரால் அவர் மீது பெரிய மரியாதையே ஏற்படுத்தியது.

அர்செனிவ் மற்றும் அவருடன் பயணித்த இன்னொரு பயணியின் உயிரையும் இரண்டு தடவை காப்பாற்றுகிறார் தெர்சு உசலா. சில வருடங்களுக்கு பிறகு மறுபடியும் அர்செனிவ் அவரை  சந்திக்கிறார். ஆனால் இப்போது அவரின் முதுமை காரணமாக  உடல் நலம் குன்றி காணப்பட்டார். சைபீரிய புலி ஒன்றை வேட்டையாடும் போது அவருடைய கண் பார்வை எவ்வளவு மங்கியுள்ளது என்பதை அர்செனிவ் புரிந்து கொள்கிறார். அர்செனிவ் அவரை  தன்னுடன் நகரத்துக்கு வந்து விடுமாறு கூறி தன்னுடன் அழைத்து செல்கிறார். ஆனால் நகரத்துக்குள் அவருக்கு மரம் வெட்டவோ வேட்டையாடவோ முடியவில்லை, அது குற்றம் எனவும் எடுத்துரைக்கபட்டது முடிவில் அவர் மறுபடியும்  காட்டிற்கே திரும்பி செல்லும் நிலை வருகிறது. அர்செனிவிடம் சொல்லிவிட்டு கிளம்பும்போது அர்செனிவ் ஒரு புதுரக துப்பாக்கியை பரிசாகத் தருகிறார்.

சில காலங்களுக்கு பிறகு ஒரு தந்தி  அர்செனிவிற்கு வருகிறது அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இருக்கிறது என்றும் அவரிடம் அர்செனிவின் காலிங் கார்ட் இருப்பதாகவும் அவரை அடையாளம் காட்ட உடனே வருமாறும் செய்தி வந்திருந்தது. அர்செனிவ் சென்று பார்த்த போது அது தெர்சு உசலாவின் சடலம் என புரிந்து கொள்கிறார். தெர்சுவிடம் இருந்த தூப்பாக்கியை பறிப்பதற்காகவே யாரோ அவரை கொலை செய்திருக்கிறார்கள் என தெரிய வருகிறது.

அழகான சைபீரிய காட்டுப்பகுதியில் படம் வெகு நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது. நாகரீகத்தின் வளர்ச்சியால் இயற்கையோடு இயைந்து வாழும் முறை எப்படி மாறிபோய் இருக்கிறது என்பதையும், முதுமையுடன் போராடும் ஒரு வயோதிகனின் நிலையும் , இரு வேறு பின் புலத்தில் இருந்து வரும் மனிதர்களின் நட்பும் நன்றாக படமாக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  தெளிவான விமர்சனம்.

  • kanagaraju சொல்கிறார்:

   நானும் dersu uzala பார்த்திருக்கிறேன். மிக அருமையான படம். கேபித்தான் கேபித்தான் என தெர்சு உசாலா அழைப்பதும்…. ஒரு மாலை நேரத்தில் உயிருக்கு ஆப்த்தான சூழலில் சுற்றியிருக்கும் கோரைப்புற்கள் போன்ற தாவரத்தை அறுத்து குவித்து அதில் புதைந்து குளிரிலிருந்து உயிர் தப்புவதும், கானகத்தில் தெர்சு உசாலாவின் அற்புத நுண்ணறிவும் படம் பார்த்து ஆறேழு வருடங்களுக்குப் பிறகும் மனதில் நிழலாடுகின்றன.
   இறுதிக் காட்சியில் அந்தப்பெரியவர் வழக்கமாக பயன்படுத்தும் கவட்டைக் குச்சியை அவரைப் புதைத்த இடத்தில் நட்டு விட்டு அர்சனேவ் திரும்பும்போது மனதை இனம்புரியாத சோகம் கவ்வியது. இந்தப்படமும் அகிரா குரசேவாவின் மனித உணர்வுகள், அன்பு, தூய்மையான ஆத்மா என அவரது வழக்கமான சினிமா பாணியைக் கொண்டிருந்தது. பொதுவாக அகிரா குரசேவா என்றால் roshaman, seven samurai போன்றசில படங்களை பற்றி மட்டுமே மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள். ஆனால் அவற்றையும் தாண்டி அவர் திரைப்படங்கள் ஏராளம் உள்ளன. red beard என்றொரு அற்புதமான படம்கூட நமது தமிழில் எழுதப்படவில்லை என நினைக்கிறேன். அதைப்பற்றி விரிவாக எழுத திட்டமிட்டுருக்கிறேன். dersu uzala பற்றி யாரும் எழுதவில்லையே என்று நினைத்திருந்தேன். எழுதியதற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s