அப்துல்கலாமுக்கு தமிழினம் அழிவது தெரியாதா?

Posted: ஜூலை 14, 2010 in அங்கலாய்ப்பு
குறிச்சொற்கள்:, , , , , , ,

சென்ற வாரத்தில் நடந்த விழா ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் பார்சி இன மக்கள் அழிந்து கொண்டு வருவதை பற்றி பேசியதாக ஒரு தொலைக்கட்சியில் செய்தி பார்த்தேன். அதில் கலாம் அவர்கள் பார்சி இனம் ஈரான் தேசத்தில் இருந்து வந்ததையும் அவர்கள் இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் எவ்வளவு பங்கு வகித்தார்கள் என்பதையும், அவ்வினத்தின் முக்கியமான சிலர்(அணு மின் ஆராய்ச்சி கழக நிறுவனர் பாபா முதலானோர்) சமூகத்திற்கு செய்த சேவைகள் பற்றியும் பேசியுள்ளார். மேலும் இன்று புலிகள் அழிந்து வருவதை கருத்தில் கொண்டு save tiger என இயக்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம் ஆனால் இவ்வளவு பாரம்பரியமான ஒரு இனம் அழிந்து வருவதை யாரும் கருத்தில் கொள்ளவில்லை என தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியதாக அந்த செய்திக்கோவையில் கூறப்பட்டது.

பார்சி இனம் அழிந்து கொண்டிருப்பது நமக்கு வேதனை தருவதான தகவல் தான். ஆனால் இங்கே தமிழினமே ஒரு நாட்டில் அழிந்து கொண்டிருப்பது ஐயா அப்துல் கலாமிற்கு தெரியவில்லையா? இது வரை அவர் இலங்கை தமிழர் நிலை குறித்து எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பேசியதாக தெரியவில்லையே, அரசியல் பிரச்சனயில் தலையிடவேண்டாம் என சும்மா இருக்கிறாரா? அல்லது முன்னாள் ஜனாதிபதி என்பதால் அரசின் கொள்கைகளை விமர்சிக்கவேண்டாம் என நினைக்கிறாரா? அவரின் தமிழ் பற்று பற்றியும் தமிழர்கள் பால் அவருக்குள்ள அக்கறையையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை ஆனால் மற்ற மாநிலத்தவரிடமும், மற்ற நாடுகளிலும் நன் மதிப்பை பெற்றவர் தமிழினத்தின் அவல நிலையை எடுத்துக்கூறினால் அது கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்துமே…

பின்னூட்டங்கள்
 1. Surendran சொல்கிறார்:

  //அவரின் தமிழ் பற்று பற்றியும் தமிழர்கள் பால் அவருக்குள்ள அக்கறையையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை ஆனால் மற்ற மாநிலத்தவரிடமும், மற்ற நாடுகளிலும் நன் மதிப்பை பெற்றவர் தமிழினத்தின் அவல நிலையை எடுத்துக்கூறினால் அது கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்துமே…//

  உண்மைதான். இத்தனைக்கும் அவருடைய சொந்த ஊரான இராமேஸ்வரத்தில்தான் ஈழத்திடுடைய தாக்கங்கள மிகுதி. நல்ல பதிவு.

  • adhithakarikalan சொல்கிறார்:

   நன்றி நண்பரே…

  • பரிதி நிலவன் சொல்கிறார்:

   //இத்தனைக்கும் அவருடைய சொந்த ஊரான இராமேஸ்வரத்தில்தான் ஈழத்திடுடைய தாக்கங்கள மிகுதி//

   ஈழத் தமிழர்களின் அழிவை விடுங்கள், அவருடைய ஊரில் தமிழக மீனவர்களை சிங்களர்கள் வேட்டை ஆடுகிறார்களே அதைப்பற்றி ஏதாவது சொன்னதுண்டா. இத்தனைக்கும் இவருடைய குடும்பமும் மீன் பிடி தொழிலை செய்தவர்கள்தானே. எல்லோருக்கும் நல்லவனாய் இருப்பவர்கள் நடிக்கிறார்கள் என்பதுதானே உண்மை.

 2. padmahari சொல்கிறார்:

  நியாயமான கேள்வி! எனக்குகூட இந்தக் கேள்வி இருந்தது. ஆனால் பதிலை திரு அப்துல் கலாம் அவர்கள்தான் சொல்ல வேண்டும்! நல்ல பதிவு.

 3. செந்தழல் ரவி சொல்கிறார்:

  வட போச்சே !!! அப்துல் கலாமை விமர்சித்து எழுதிய பதிவு ட்ராப்டில் இருக்கிறது.

  சம்பளம் வாங்கிக்கொண்டு எஞ்சினீயர் வேலை செய்து ரிட்டையர் ஆன பல்லாயிரக்கணக்கான கவர்மெண்டு எம்ளாயிக்கும் அப்துல்கலாமுக்கும் என்ன வேற்றுமை ?
  9:43 AM Jul 25th via web

  என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளேன்…இங்கே பெங்களூரில் ஒரு சாலைக்கு அப்துல்கலாம் பெயர். வீண் !!

 4. Venkatesh சொல்கிறார்:

  absolutely right question

 5. பாலா சொல்கிறார்:

  அவரின் நிலைப்பாடு இப்படி இருக்கலாம். சாதித்ததை மட்டும் பேசுவோம், மற்றவற்றை பிறர் பார்த்துக்கொள்ளட்டும் என்று. என் இலங்கை நண்பன் சொன்னான் அவர் முஸ்லிமாக இருப்பதால் ஈழ விசயத்தில் ஒன்றும் சொல்வதில்லை என்று. இலங்கையில் முஸ்லிம் தமிழர்கள் தங்களை சிங்களவர்களாகவே காட்டுவார்களாம்.. இந்து மற்றும் கிறிஸ்து தமிழர்களை போட்டு குடுப்பதுதான் அவர்கள் வேலையாம்.

  • அசிமோவ் சொல்கிறார்:

   யோவ்! எடுத்து விட்ரதுக்கும் அளவு இருக்கு..

   அவரு சமாதனமா போவனும்னு நினைகிறவர். ‘நமக்கு எதுக்கு வம்பு’ கேஸ்.
   பார்சி இனம் அழிந்து வர காரணம், அதன் மக்கள் அதை கைவிடல். இதை சொல்வதில் பிரசனை இல்லை.
   தமிழ் இனம் கதையே வேற. உள்ள போனார்ணா ஒரு வாரம் அவர் தான் headlines. நானும் போக விரும்பல. ஒன்னு மட்டும் உறுதி. ரெண்டு பக்கமும் எடுத்த தவறான முடிவுகள் தான் இந்த நிலைமைக்கு காரணம். rajapakse democratically elected. hitler-ரும் தான். இது முக்கியம்.
   அப்படினா தமிழ் இனம் அதன் நிலையை உறுதியா சொல்ல முடியல. equality தான் முக்கியம்னு ஸ்ரீ லங்க மனித மந்தைகளுக்கு உணர்த்த முடியல.
   தமிழை நாம் பேசி, நம் வாழ்க்கை முறையை கடைபிடித்து, கலாச்சார superiorityஐ பாதுகாத்தால் போதும். நாமாக கைவிடும் வரை எந்த கொம்பனாலும் கிழிக்க முடியாது. Jews பிழைத்த பொது, நம்மால் முடியாதா, என்ன?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s