தேர்வு முடிவுகளில் குளறுபடி

Posted: ஜூலை 14, 2010 in தகவல்கள்
குறிச்சொற்கள்:, , , , , , ,
தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பவருக்கு தேர்வு எழுதவில்லை என்று முடிவு அறிவிக்கும் இணையதளங்களில் வெளிவந்தால் எப்படி இருக்கும் மனநிலை. எனது நண்பர் ஒருவருக்கு நிகழ்ந்தது; அதிர்ந்தே போனார், 150 வருடங்களுக்கு மேலான பாரம்பரியம் மிக்க  சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவில் தான் இத்தனை குளறுபடிகள். பல்கலை கழகத்திற்கு சென்று விசாரித்த நன்பர் ஏறக்குறைய௦ 20 ,000 பேருக்கும் மேலாக இந்த பிரச்சனை உள்ளதென தெரிந்து அதிர்ந்தே போனார். சென்ற மாத இறுதியிலேயே வரவேண்டிய முடிவுகள் செம்மொழி மாநாடு காரணமாக தள்ளி போடப்பட்டது. 3ஆம் தேதி வெளியிடப்படும் என்று சொன்னார்கள் பின்பு 9ஆம் தேதி வெளியிடப்போவதாக ஒரு தகவலும் இனைய தளங்களில் வெளியிடப்பட்டது. மொத்தத்தில் இத்தனை நாட்கள் கழித்து வந்த முடிவுகளும்  இந்த கதி. பலகலைக்கழக தேர்வு ஆணையர் இரண்டு நாட்களில் இந்த கோளாறுகள் சரி செய்யப்பட்டு தேர்வு எழுதிய கல்லூரிகளில் முடிவுகள் அறிவிப்பு பலகைகளில் அறிவிக்கப்படும் என்பது தகவல்.
தவறுகள் சரி செய்யப்பட்டு சரியான முடிவு வெளியாகும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்.  அப்படியும் முடிவுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவர்களின் வருகை பதிவேட்டினை கல்லூரியில் இருந்து வாங்கி நகல் எடுத்து அதனுடன் தங்களது முறையீட்டு கடிதத்தை இணைத்து சென்னை பல்கலை  கழகத்தில் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 
Advertisements
பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  ////20 ,000 பேருக்கும் மேலாக இந்த பிரச்சனை உள்ளதென தெரிந்து அதிர்ந்தே போனார்///

  பாரம்பரியமிக்க பல்கலைகழகத்தின், பாரம்பரியமிக்க செயலாக்கும்!!

 2. premcs23 சொல்கிறார்:

  கண்டிகதக்க செயல்

 3. nalavirumbi சொல்கிறார்:

  இந்த கொடுமையை என்ன சொல்ல. அரசு ஒன்று செய்யலாம் பல்கலைகழக அதிகாரிகள் ஒரு தேர்வை வைத்து தேர்ச்சி பெறும் அனைவருக்கும் ரொக்கப்பணம் தருவதாக அறிவித்துவிட்டு , பின்னர் தேர்வுத்தாள் காணவில்லை என்று சொல்லட்டும் பாப்போம் , அதிகாரிகள் நிலையை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s