1967 ஆம் ஆண்டில் பிரெஞ்சில் வெளியான படம்.  இது 1928 ல் ஜோசப் கேசெல் (joseph kessel) அவர்கள் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம், நாவலின் பெயரும்  பெல்லே டே ஜோர் தான். இது 1967 வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் பரிசு வென்றது.
 
கதாநாயகி ஒரு இளம் இல்லத்தரசி, அவளுக்கு மனரீதியாக ஒரு பிரச்சனை இருந்தது. அது உடல் ரீதியாக துன்பத்தை அனுபவிக்கும் முறையில் கலவி கொள்வது, இது பற்றி அவளுக்கு அதீத கற்பனை கனவுகளோடு வாழ்ந்து வந்தாள், அவளின் கணவன் ஒரு மருத்துவர்,  அவளின் ஒரு ஆண் நண்பர் மூலமாக  பெரிய பணக்காரர்கள் வந்துபோகும் விபசார விடுதி பற்றி அறிகிறாள் கதாநாயகி. அங்கே சென்று தனது ஆசைகளை தீர்த்துக்கொள்ள விழைகிறாள், தான் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் வர முடியும் எனவும், இது எனக்கு தொழில் இல்லை பொழுதுபோக்குக்காகவும் தீராத தனது ஆசைகளை  தீர்த்து கொள்ளவே இதில் ஈடுபடுகிறேன் எனவும் விடுதியை நடத்தும் பெண்மணியிடம் கூறுகிறாள் மேலும் தன் பெயரை பெல்லே டே ஜோர்  என்று மாற்றி பெயர் சூட்டி கொள்கிறாள்.  
 
சிறிது நாட்களில் கதாநாயகி ஒரு இளம் தாதாவிடம் மாட்டிக் கொள்கிறாள், அவன் இவளை தன்னுடனே இருக்குமாறு கட்டயப்படுத்துகிறான் மேலும் அவளின் கணவனை கண்டு பொறாமை படுகிறான். இந்நிலையில் இந்த தொழிலை விட்டு விலகிவிட எத்தனிக்கிறாள். தாதா அவளின் வீட்டு முகவரியை அறிந்து கொண்டு வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்கிறான் மேலும் அவளது கணவனிடம் உண்மைகளை சொல்லிவிட போவதாக சொல்லி மிரட்டுகிறான். அவனை வீட்டை விட்டு துரத்துகிறாள் கதாநாயகி. வீட்டிற்க்கு வெளியே வந்து காத்திருந்து அவளது கணவனை சுட்டுவிடுகிறான் பின் காவலர்களால் அவனும் சுட்டுக்கொல்லப்படுகிறான். கதாநாயகியின் கணவன் கோமா நிலைக்கு செல்ல நேரிடுகிறது. காவலர்களுக்கு  குற்றத்தின் பின்னணி தெரியாமலே போகிறது. சில நாட்களுக்கு பின் கதாநாயகியின் கணவன் நலமடைந்து வருகிறார் அப்போது  அவளின் நண்பர்  மூலமாக நடந்த எல்லா விசயங்களை அறிகிறான் அவளது கணவன்.  அவளின் மன ரீதியான பிரச்னை காரணமாக இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் விட்டு விடுகிறார். மீண்டும் கதாநாயகிக்கு அதீத கற்பனைகள் வருவது போலவும் ஆனால் இந்த முறை கதாநாயகி தவறான எந்த முடிவையும் எடுக்கவில்லை என படம் முடிகிறது. 
 
அயல் நாடுகளில் பாலியல் சம்பந்தமான இலக்கியங்களுக்கென்று ஒரு வகை உண்டு அதை erotica என்பார்கள் அந்த வகையில் எடுக்கப்பட்ட  கலவி சம்பந்தமான மனநோய் பற்றிய கதை என்பதால்  ஆபாசக்காட்சிகள் தவிர்க்க முடியாதாகிறது, இருப்பினும் நிர்வாணம் தவிர்க்கப்பட்டிருகிறது. இது ஒரு மாறுபட்ட கதை என்பதில் ஐயமில்லை. 60 களில் வந்த உலக சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு படம் என்று பெல்லே டே ஜோர் அறியப்படுகிறது. 
பின்னூட்டங்கள்
  1. படைப்பாளி சொல்கிறார்:

    தெளிவான விமர்சனம்..பார்க்கத்தூண்டும் கதைக் களம்..அருமை

  2. adhithakarikalan சொல்கிறார்:

    நன்றி நண்பரே…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s