வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும் சிரிச்சா என்ன செலவா ஆகும், இந்த  திரைப்பாடல் தான் என் ஞாபகத்திற்கு வருகிறது தினமும் காலையில் மெரீனாவில் உடற்பயற்சிக்காக நடக்கும் போது.  கல கலவென சிரிக்கும் ஒரு கூட்டம் சிரித்துகொண்டே சில இயக்கங்களை செய்யும், முதல்முதலில் பார்ப்பவர்களுக்கு வெகு விந்தையாக இருக்கும். திரைப்படங்களில் தான் இந்த சிரிக்கும் சங்கங்களை பார்த்திருப்பீர்கள். நேரில் பார்க்கும் போது விநோதமாக இருக்கும், சற்று நேரம் நின்று பார்க்காமல் போக மாட்டீர்கள். யோகாவும் மூச்சு பயிற்சியும் சேர்ந்ததே லாப் தெரபி (laugh theraphy) என்று கூறுகிறார்கள். உண்மையில் மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு அதிகமாகும் போது உடல் சுறுசுறுப்படையும் என்பதை எங்கோ படித்திருக்கிறேன் எப்படியெனில் மூளைக்கு அதிகம் பிராணவாயு சென்றால் அது ஊக்கப்படும் என்பது மருத்துவ உண்மை. சென்னையில் முதல் முதலாக 2001 ல் மெரீனாவில் வட இந்தியர் ஒருவரால் இந்த சிரிப்பு சங்கம் உருவானதாக அறியப்படுகிறது, பின்பு பெசென்ட் நகர் கடற்கரை, அண்ணா டவர் பூங்கா, ஹடோவ்ஸ்(hadows ) பூங்கா என தனது செல்வாக்கை விரிவாக்கிக் கொண்டே போனது இந்த சிரிப்பு சங்கம். வழக்கமாக சிரிப்பு சங்கம் என்றால் நகைச்சுவை துணுக்குகளை பரிமாறிக் கொள்வதும் ஜோக் அடிப்பதும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது முற்றிலும் உடற்பயிற்சி  சம்பந்தப்பட்ட தெரபி.

மனித மூளைக்கு உண்மையில் சிரிப்பதையும் பொய்யாக சிரிப்பதையும் பிரித்து பார்க்கத் தெரியாது. அதனால் பொய்யாக சிரித்தாலும் நன்றாக வாய் விட்டு சிரியுங்கள் உங்கள் உடம்புக்கு நல்லது என்கிறார்கள் சங்கத்தினர். இதில் நிறைய வகைபாடுகள் இருக்கிறது, வணக்கம் சொல்லும் முறையில் ஒரு சிரிப்பு, மில்க் ஷேக் சிரிப்பு, காற்றாடி சிரிப்பு, சிங்க சிரிப்பு, பெங்குயின் சிரிப்பு, விவாத சிரிப்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

சிரிப்பதால் என்ன பயன் என கேட்பவர்களுக்கு கீழே ஒரு பட்டியலே தரப்பட்டிருக்கிறது.

1  மன உளைச்சல் (stress) நீங்கும்

2  ரத்த ஓட்டத்தை சீராக்குவது (நடை பயிற்சி போல)

3  நோய் எதிர்ப்பு (immune) சக்தியை பெற

4  ரத்த கொதிப்பை சீராக்குதல் அல்லது மட்டுபடுத்தல்

5  மனப்பதட்டத்தை (depresion ) குறைக்கும்.

6  மூச்சு பயிற்சிக்கு ஈடான உடற்பயிற்சி ஆதலால் நுரையீரல் வலிமை பெரும்.

7  ஸ்டாமினா எனப்படும் உடல் திறன் அதிகரிக்கிறது 

8  வயிறு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து விடுதலை அடையாளம்.

ஆகையால் சிரியுங்கள்…சிரியுங்கள்…சிரித்துக்கொண்டே இருங்கள். முக்கியமாய் வாய் விட்டு சிரியுங்கள்

பின்னூட்டங்கள்
  1. படைப்பாளி சொல்கிறார்:

    ஹா..ஹா..ஹா..ஹீ..ஹீ..ஹீ..ஆரோக்கியமான கட்டுரை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s