காந்தி குரங்குகளுக்கு முதல் பரிசு

Posted: ஓகஸ்ட் 2, 2010 in தகவல்கள்
குறிச்சொற்கள்:, , , , , , , , ,

காந்தி குரங்குகள் பெர்லினில் நடைபெற்ற 8 வது சர்வதேச மணல் சிற்ப போட்டியில் ஒரிசாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக்கு முதல் பரிசை வாங்கி கொடுத்திருக்கிறது. இந்த போட்டிகளில் இவருக்கு கிடைத்த 5 வது பரிசாகும் இது, patric steptoe (uk ) maria eliot (denmark ) முறையே 2 வது 3 வது இடத்தை பிடித்தனர்.  உலகம் வெப்பமயமாதல்  பற்றிய இந்த சிற்பம்,  எதையும் பார்க்காதே, பேசாதே, கேட்காதே, செயல்படுங்கள் என்று காந்தியின் குரங்குகளை வைத்து  இந்த  மணல் சிற்பம் மூலம் எடுத்தியம்பி இருக்கிறார். இதில் அழுகின்ற ஒரு மரத்தின் அடிப்பாகம்(trunk) அதன் கிழ் காந்தி குரங்குகள்  இருப்பது போலவும் அதன் கீழ் ஒரு பிரமாண்டமான மனித தலை உருவம்  அமைக்கப்பட்டிருகிறது. இந்த போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மணல் சிற்ப கலைஞர்கள்  பங்கேற்றனர்.   

 ஜூன் மாதம் தொடங்கிய இந்த போட்டியில் வடிக்கப்பட்ட சிற்பங்கள் ஆகஸ்ட் மாத இறுதி வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் என போட்டி அமைப்பாளர்கள் கூறி இருக்கின்றனர்.

பின்னூட்டங்கள்
  1. படைப்பாளி சொல்கிறார்:

    அழகான சிற்பம்,அறிவுபூர்வமான சிந்தனை

பின்னூட்டமொன்றை இடுக