ஓகஸ்ட் 3, 2010 க்கான தொகுப்பு

உங்கள் ப்ளாக் எவ்வளவு பிரபலம் அடைந்திருக்கிறது, எந்த நாட்டில் அதிகம் நமது இடுகைகளை பார்த்திருக்கிறார்கள் என்பதை அறிய  உண்மையில் எல்லோர்க்கும் ஆசை இருக்கும். இதனை அறிந்துகொள்ள http://www.clustrmaps.com/ உதவுகிறது. மேற்கூறிய இணைய தளத்திற்கு சென்று உங்களுடைய தளத்தின் முகவரியையும், உங்களின் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து மேக் மை மேப் பொத்தானை அழுத்தினால் உங்கள் மின்னஞ்சலுக்கு clustermap குழுவினர்  கடவுச்சொல் அனுப்பி வைப்பர். பின்னர் உங்களுக்கு  அனுப்பிய மின்னஞ்சலிலேயே மீண்டும் clustermap மேலாண்மை தளத்திற்கு செல்ல ஒரு லிங்க் இருக்கும் அதை கிளிக் செய்தால் http://clustrmaps.com/admin/action.php தளத்திற்கு செல்லும்.

அதில் உங்களது தளத்தை URL பெட்டியிலும், மின்னஞ்சலில் வந்த கடவுசொல்லை மற்ற்றொரு பெட்டியிலும் நிரப்பி enter பொத்தானை அழுத்தினால் உங்களுக்கு உங்களின் ப்ளாகில் clustermap உருவாக்க உதவும்  HTML வரும். இதனை எடுத்து உங்களது ப்ளாகில் உள்ள widgets(விரித்துப்பெற) இல் உள்ள text என்ற widget இல் பொருத்தினால் உங்களின் தளத்தில் clustermap உருவாகும்.

இது தினமும் உங்களது தளத்திற்கு வருபவர்களின் இடங்களை உலக வரைபடத்தில் காட்டும். உதாரணமாக ஆஸ்திரேலியாவில் ஒருவர் உங்கள் வலைதளத்தை பார்த்திருந்தால் ஒரு சிகப்பு புள்ளி உருவாகி இருக்கும். இந்த  சிகப்பு புள்ளிகள் எங்கெங்கெல்லாம் உள்ளதோ அங்கெங்கெல்லாம் உங்களின் ரசிகர்கள் உள்ளார்கள் என புரிந்து கொள்ளலாம்.

உங்கள் தளத்தில் உள்ள clustermap ஐ கிளிக் செய்தால் அது அவர்கள் தளத்திற்கு செல்லும். உங்களின் வரைபடம் பெரிய அளவில் தோன்றும், இன்னும் துல்லியமாக உங்களின் ரசிகர்கள் இருக்குமிடங்களை தெரிந்து கொள்ளலாம்.