ஓகஸ்ட் 4, 2010 க்கான தொகுப்பு

இங்கிலாந்தை சேர்ந்த பால்ஸ்மித் (paul smith ), ஒரு சார்பிலா(freelance) எழுத்தாளர். 34 வயதான இவர் தேனிலவை நியூயார்க்கில் கழித்த பின் நல்லெண்ண அடிப்படையில் உலகை சுற்றிவர விரும்பும் தனது ஆசையை ட்விட்டரில் வெளியிட்டார் (தனது இடத்திலிருந்து உலகின் எதிர்திசையில் இருக்கும், நியூசிலாந்து- காம்ப்பெல் தீவிற்கு செல்ல). சிறிது காலத்திற்குள் அவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகமானது, அவருக்கு உதவுவதாக நிறைய மறுமொழிகளும் வந்தது. இந்த உலக சுற்றுபயணத்திற்கு அவருடைய மனைவி உறுதுணையாக இருந்ததால் பயணத்தை இனிதே முடித்தார் பால். 

நெதெர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா முதலான நாடுகளின் வழியாக இவர் பயணம் மேற்கொண்டார். பயணத்திற்கு தேவையான பயணசீட்டு, தங்கும் வசதிகளை ட்விட்டர்  நண்பர்கள் வாயிலாக பெற்றார். மேலும் 7000 டாலர்களை watar charity க்கு நன்கொடையாக  வசூலித்தும் கொடுத்திருக்கிறார்.

பயணத்தை முடித்த பால்ஸ்மித் 11,000 ௦௦௦பேரை பின்பற்றுபவர்களாக பெற்றார். இந்த பயணத்தின் போது 1300 பதிவுகளை தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். மேலும் நல்லெண்ணம் கொண்ட மக்கள் நிறைய பேர் இவ்வுலகில்  இருக்கிறார்கள் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

நல்ல விசயமாத்தான் இருக்கு, என்னம்மா  யோசிக்கிறாங்கபா…