ஓகஸ்ட் 5, 2010 க்கான தொகுப்பு

 
 கடல் நீர் ஏன் நீல நிறமாய் இருக்கிறது… இந்த கேள்விக்கு கிடைத்தது தான் ஒரு நோபெல் பரிசு, கேள்வியை கேட்டது யார்? பதில் கிடைத்தது யாரிடத்தில்? யார் அந்த விஞ்ஞானி? நமது தமிழகத்திலே, திருச்சியிலே பிறந்து சென்னையில் படித்து உலகபுகழ் பெற்ற சர் CV ராமன் தான் அந்த விஞ்ஞானி.  உண்மையில்  கடல் நீர் வானத்தின் பிரதிபலிப்பு  என்பது பலருக்கு தெரியும். அதாவது ஒளிச்சிதறல். ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது;  சரி இது ஒரு சாதாரண நிகழ்வு தானே, இதனால் என்ன பயன்? இருக்கே… 
 • பெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணிக்க
 • போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே மருந்துகளை இனம் காண,
 • வண்ணப்பூச்சுகள் இருகும்போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதை அறிய,
 • அணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்தே ஆய்வு செய்ய…
 • இப்படி பல பயன்கள் இருக்கின்றன. 

  சந்திரசேகர வெங்கட ராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில்,தமிழ்நாட்டில், திருச்சியில் பிறந்தார். இராமன் அவர்கள் சென்னையில் உள்ள பிரெசிடென்சி கல்லூரியில் 1904ல்  இளங்கலை ( B A ) பட்டம் பெற்றார். பின்னர் 1907ல் இவர் முதுகலை பட்டமும் பெற்றார். முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

  சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில்  உள்ள அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில், ஒளிச்சிதறல் பற்றி செய்முறை ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தா பல்கலைகழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்து அங்கு 15 ஆண்டுகள் கழித்த பிறகு,பெங்களூரூவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின் அவர் நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றினார்.

 • இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
 • பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் “நைட் ஹீட்” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
 • 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது.
 • 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
 • இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான “மேட்யூச்சி” பதக்கம் வழங்கப்பட்டது.
 • மைசூர் அரசர் “ராஜ்சபாபூசன்” பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.
 • பிலிடெல்பியா நிறுவனத்தின் “பிராங்க்ளின்” பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
 • இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.
 • 1957 ஆம் ஆண்டில் அகில “உலக லெனின் பரிசு” அளிக்கப்பட்டது.
 • நன்றி: விக்கிபீடியா