கேள்விப்பட்டீர்களா, காமசூத்ரா ஒலிப்பேழை(audio book) வடிவமாக இப்போது விற்பனைக்கு வந்திருக்கிறது. தன்யா பிராங்க்ஸ் (tanya franks ) என்ற நடிகையின் குரலில் காமசூத்ரா உங்கள் காதுகளில் காதலை தூண்டப் போகிறது. முக்கியமாக இணையும் முறையான 64 முறைகளை கேட்கும் அனுபவம் புதுவிதமானதாகவே இருக்கும் என நினைக்கிறன். இந்த ஒலிப்பேழை(audio book) 8.99 டாலர் கொடுத்து பதிவிறக்கம்(download ) செய்து கொள்ளும் வசதியுடன் வெளிவந்து இருக்கிறது. காமசூத்ரா 1883 ஆம் ஆண்டு ரிச்சர்ட் பர்டன் (richard burton ) என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்ப்பு பெற்றது.

இந்த ஒலிப்பேழை சிலருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்பதில் வியப்பில்லை காரணம் இன்றளவும் காமசூத்ரா ஒரு ஆபாச புத்தகமாகவே சமூகத்தின் அங்கீகாரத்தை பெற்றிருப்பதால் வெளிப்படையாக இந்த புத்தகத்தை வைத்து படிப்பதை காட்டிலும் ஒலிப்பேழையை பதிவிறக்கம் செய்து ஐபாட் அல்லது அலைபேசி  வழியாக கேட்கலாம் இல்லையா…  இந்த ஒலிப்பேழை வடிவத்தை பியூட்டிபுல் புக்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதை ஒலி வடிவமாக படித்த தன்யா முதலில் பதட்டமாகவே ஆரம்பித்தேன் ஆனால் உண்மையில் இது ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்ததாகவும் கூறினார். வாத்சாயனர் எழுதிய காமசூத்ரா பெரும்பாலும் உரை நடையாகவும் சில பாடல்களுடன் 36 பாகங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. மொழிபெயர்க்கும் போது ஆங்கிலத்தில் 7 பாகங்களாக அது தொகுக்கப்பட்டது.

மேற்படி இந்த இடுகையை படித்து தாங்களும் பதிவிறக்கம் செய்யவேண்டும் என்ற அவா இருப்பின் http://www.beautiful-books.co.uk/ இந்த வலைதளத்திற்கு சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எவ்வளவு நாள் தான் அறத்துப் பாலையும், பொருட்ப் பாலையும் படித்துக் கொண்டிருப்பது, கொஞ்சம் காமத்துப் பாலையும் பருகலாமே….

பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  ஒலி வடிவம் மட்டும்தானா? ஒலி,ஒளி வடிவம் இருக்கா நண்பரே..பியூட்டிபுல் புக்ஸ் அதற்கும் கருணை காட்டினால் நன்றாக இருக்கும்.

 2. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  எல்லாம் பைபில் இருக்கா,,…

  ஏசு மட்டும் தான் நல்லவருன்னு நினைச்சேன்.

 3. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  காமத்தை கொண்டாடியவர்கள் தமிழர்கள். காமத்துப்பாலை மறப்பார்களா,…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s