குண்டு மனிதனால்(fat man) 74,000 பேர் இறந்த பரிதாபம்

Posted: ஓகஸ்ட் 9, 2010 in தகவல்கள்
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , ,
இன்றிலிருந்து 65 ஆண்டுகளுக்கு முன் 1945 இல்  இதே நாளில் நாகசாகியில் குண்டு மனிதனால் (fat man) பல்லாயிரக்கணக்கான மக்கள் துடி துடித்து இறந்த நாள்.  யார் இந்த குண்டு மனிதன்? இது அமெரிக்கா நாகசாகியின் மீது போட்ட அணு குண்டின் பெயர். ஜப்பான்  நாட்டிலுள்ள   ஹிரோஷிமா- நாகசாகி நகரங்கள் மீது  1945  ஆம் ஆண்டு அமெரிக்கா  அணுகுண்டுகளை விமானம் மூலம் போட்டது. ஹிரோஷிமா மீது 1945  ஆகஸ்ட் 6 ஆம் நாள் வீசிய அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் சின்னப்பையன் (LITTLE BOY) என்பதாகும். மூன்று நாட்கள் கழித்து அதாவது ஆகஸ்ட் 9  ஆகிய இந்நாளில்   நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு குண்டு மனிதன் (FAT MAN) என்று பெயர் சூட்டினர். இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். ‘இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’ என்று ஆய்வறிக்கை கூறியது.

அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப்போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதகப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.

அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச்செயலைச் செய்தது. அமெரிக்காவுக்கு அணுகுண்டைப் போட எந்தத் தேவையும் அப்போது இருக்கவில்லை” என்று ஜப்பான் தன் நிலையை முன்வத்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15  ஆம் தேதி ஜப்பான் சரணடைவதாக அறிவித்து  செப்டம்பர் 2  ஆம் தேதி சரணடைவுப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்தது.

உயிர்நீத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக இந்த இடுகையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

நன்றி: விக்கிபீடியா

பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  எனது ஆழ்ந்த இரங்கல்களும்….

 2. கீதப்ப்ரியன்|geethappriyan சொல்கிறார்:

  கத்திஎடுத்தவனுக்கு கத்தியால் தான் மரணம் என்னும் கூற்றை நினைவுகொள்ளுங்கள் நண்பரே,ஜப்பான் சீனா,டாய்வான்,கொரியா,பர்மா,பிலிப்பைன்ஸ்,சிங்கப்பூரில் விதைத்ததை ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் அறுத்தது என்றால் மிகையில்லை.

  ஜப்பானிய மன்னர் ஹிரோஹிட்டோ செய்த மாபாதகங்கள் கொஞ்சமா?நஞ்சமா?
  யூதர்கள் அனுபவித்த துயரம் அதிகமா?அல்லது மேலே சொன்ன நாடுகள் அனுபவித்த துயரம் அதிகமா என பட்டிமன்றமே வைக்கலாம்.

  பழிவாங்கிதல் என்னும் வெறி எல்லோருக்குமே உள்ளே கனன்று கொண்டு இருக்கும்.நான் அமெரிக்க அயோக்கியர்களுக்கும் இங்கே பரிந்தும் பேசவில்லை.

  Nanking பத்தி படித்துப்பாருங்கள்.

  Nanking பத்தி டாகுமெண்ட்ரி பாருங்கள்

  Rape of Nanking (2007)
  Nanking (2007)
  Men Behind Sun (1988)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s