அலைபேசியில் SMS செய்தாலே கிடைக்கும் ரத்தம்…

Posted: ஓகஸ்ட் 14, 2010 in தகவல்கள்
குறிச்சொற்கள்:, , , , , , , , , ,

 

ரத்த தானத்தை பற்றியும்  ரத்த வங்கிகளை பற்றியும் நாம் ஒரளவுக்கு அறிவோம், அறுவை சிகிச்சைகளின் போது வெளியாகும் அதிகப்படியான ரத்த போக்கை கட்டுப்படுத்த தேவையான ரத்தம் தானமாக பெறப்பட்டு சிகிச்சை பெறுபவருக்கு அளிக்கப்பட்டு, உடல் நலம் பேனப்படுகிறது. 

ஒரு ஆரோக்கியமான மனிதனின்  உடலில் சுமார் 4 – 5 லிட்டர் ரத்தம் ஓடும். 72 கிலோ கிராம் எடை உள்ள ஒருவரின் உடலில் சுமார் 4.5 லிட்டரும், 36 கி.கிராம் எடை உள்ள ஒரு சிறுவனின் உடலில் சுமார் சரிபாதி அளவு ரத்தமும், 4 கி.கிராம் உடைய ஒரு குழந்தையின் உடலில் சுமார் 300 மில்லி லிட்டரும் (0.3 லிட்டர் மட்டுமே) ரத்தம் ஓடும். எனவே சிறு குழந்தைக்கு அடிபட்டால் ஏற்படும் ரத்தயிழப்பு பெரிதும் தீங்கிழைக்க வல்லது. காற்றழுத்தம் குறைவாக இருக்கும் உயரமான இடங்களில் வாழ்பவர்களின் உடலில் ரத்தத்தின் அளவு சுமார் 1.9 லிட்டர் அதிகமாக இருக்கும் என்பது கூடுதல் தகவல். 

மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் தேவையான சத்துப்பொருட்களையும், இன்றியமையாத ஆக்சிஜன், குளுகோஸ்  போன்ற பொருட்களையும் எடுத்துச் செல்வதும், கழிவுப்பொருட்களை (கார்பன் டை ஆக்சைடு, லாக்டிக் அமிலம் போன்றவற்றை) நீக்குதலும் முக்கியமான பணியாகும். ரத்த ஓட்டத்தின் துணை இல்லாமல் உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. ரத்த ஓட்டம் நின்றால் உடல் இயங்குவது அற்றுவிடும். 

மேற்கூறிய தகவல்கள் யாவும் ஒரு மனிதனுக்கு ரத்தம் எவ்வளவு இன்றியமையாத விஷயம் என்பதை நமக்கு உணர்த்தும். ஒரு விபத்தின் போதோ அல்லது ஒரு அறுவை சிகிச்சையின் போதோ ரத்தபோக்கு என்பது சகஜமான ஒன்று,  அந்த வேளையில் இழக்கப்பட்ட ரத்தத்தை ஈடு செய்யும் பொருட்டு மற்ற ஒரு மனிதரின் உடலில் இருந்து பெறப்பட்ட ரத்தம் தேவையான உடலுக்கு செலுத்தப்படுகிறது. ரத்தத்தை செயற்கை முறையில் தயாரிக்க முடியாது என்பதால் ரத்த தானம் மூலமே ரத்தத்தை பெற முடியும். 

இன்றைய நிலையில் ஏறத்தாழ முக்கியமான எல்லா மருத்துவ மனைகளிலும் ரத்தவங்கி இருக்கிறது. ஆனால் சிகிச்சை பெறுபவரின் ரத்தப்பிரிவு இருப்பில் இல்லாத நேரத்தில் ரத்தத்தை தானமாக பெறுவது சிகிச்சை பெறுபவருக்கு தேவையாகிறது. ரத்தம் வங்கியில் இருக்கும் பட்சத்திலும் கூட சிகிச்சை பெறுபவர் அவரின் மூலமாக இயன்ற அளவு  தனக்கு தேவையான ரத்தத்தை தானமாக வாங்கி கொடுக்கவேண்டும் என்பது கட்டாயம் ஏனெனில் நெருக்கடியான நேரத்தில் உபயோகப்படும் வகையில் தான் ரத்தவங்கியில் ரத்தம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

ரத்த வங்கியில் ரத்தம் இல்லை, உங்களாலும் ரத்த தானம் கொடுப்பவர்களை அறிய முடியவில்லை, அந்த நேரம் உங்களின் நெருங்கியவரின் சிகிச்சைக்கு உங்களால் உதவ முடியவிலையே என நீங்கள் வருந்தத் தேவை இல்லை. அதற்கென்று ஒரு வலைத்தளம் http://www.indianblooddonors.com/ உள்ளது. அங்கு சென்று அவர்கள் கூறி இருப்பது போல SMS தகவல் கொடுத்தால் போதும் உங்களுக்கு தேவையான ரத்தப்பிரிவில் உங்களுக்கு ரத்தம் கிடைக்கும். உதாரணமாக SMS DONOR<space>STD CODE<space>Blood Group to 09665500000 என்று அனுப்பினால் போதும். அதே போல நீங்கள் ரத்த தானம் கொடுக்க விரும்பினால் உங்களை இந்த தளத்தில் இணைத்து கொண்டால் மற்றவர்களுக்கு தேவையான சமயத்தில் உங்களை அணுகுவர் அதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது SMS BLOOD<space>STD Code<space>Blood Group to 09665500000 உதாரணமாக : Blood 022 B+ve

தானத்தில் சிறந்தது அது இதுவென்று என்னவெல்லாமோ சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறோம். என்னை பொறுத்தவரையில் உதவுவது என்பது எதுவாக இருந்தாலும் சிறந்ததே, ஆனால் ஒரு உயிரை காப்பாற்ற நம் ரத்தம் உதவும் என்று நினைக்கும் போதே நம் தானத்தின் சிறப்பை நாம் உணர முடியும்.

பின்னூட்டங்கள்
 1. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  அவசியம் ஒவ்வொரு வீட்டிலும் குறித்து வைக்க வேண்டிய தகவல் பகிர்வுக்கு நன்றி

 2. படைப்பாளி சொல்கிறார்:

  ஆரோக்கியமான..சமுதாயத்துக்கு தேவையான செய்தி நண்பரே..

 3. avighaya சொல்கிறார்:

  நிச்சயம் மிகவும் உபயோகமான தகவல்…

  வாழ்த்துக்கள், நான் என்னை பதிவு செய்து கொண்டேன், அப்ப நீங்க?

  http://avighaya.wordpress.com

  • adhithakarikalan சொல்கிறார்:

   நான் 3 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளேன்… முன்பு SMS வசதி கிடையாது. வலைதளத்திற்கு சென்று தானம் தருபவர்களின் பட்டியலை பார்த்தே நமது தேவையை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். இப்போது SMS செய்தாலே தானம் தருபவர்களின் அலைபேசி என்னை நமக்கு நம் அலைபேசியில் அனுப்பி வைக்கிறார்கள். முக்கியமாக நமக்கு அருகாமையில் உள்ள தானம் தருபவர்களை அணுக உதவியாக இருக்கும். இந்த வலைதளத்தின் மூலம் பல முறை என்னை ரத்த தானத்திற்கு அணுகி இருக்கிறார்கள். நான் குறைந்தது 6 மாதத்திற்கு ஒரு முறையாவது ரத்த தானம் செய்வது வழக்கம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s