இயற்பியலில், மின் பொறியியல் இன்று தவிர்க்க முடியாத, அன்றாடம் உபயோகபடுகின்ற ஒரு துறையாகும், இன்று கணினி சம்பந்தப்பட்ட ஒரு தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட மவுஸ் (சுட்டி) எப்படி இருந்தது தெரியுமா? இதை கண்டறிந்தவர்  யார் தெரியுமா? 

மேற்கண்ட  படத்தில் இருப்பது தான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட மவுஸ் (சுட்டி), இதை கண்டறிந்தவர் டக்லஸ் எங்கல்பர்ட். 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அமெரிக்காவில் ஒரிகன் என்ற இடத்தில பிறந்தவர் எங்கல்பர்ட். கணினியில் உள்ளீட்டுச் சாதனமான மவுஸ் எனப்படும் சுட்டுபொறி, காட்சித் திரைகளுக்கான X Y  நிலைகாட்டி என்பது இதின் தொடக்க  காலப் பெயர். இது பாற்பதற்கு எலி போன்ற தோற்றம் கொண்டிருந்ததால்  மவுஸ் என அழைக்கப்பட்டது.

இணையத்தின் முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படும் எங்கல்பர்ட் இனைய தளங்களில் பயன்படுகின்ற ஹைபர் டெ க்ஸ்ட் தொழில் நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்தவர். இவர் மின் பொறியியல் பயின்றவர் அதே துறையில் ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்று துணை பேராசிரியாராக முதலில் பணியில் சேர்ந்தார், பின்னர் ஸ்டான்போர்ட் ஆய்வு மையத்திலும் அதன் பின்னர் தானே  சொந்தமாக ஒரு ஆய்வு மையத்தை தொடங்கி ஆய்வுகளை மேற்கொண்டார் 85 வயதை கடந்து இன்றும் கணினி சம்பதப்பட்ட ஆய்வுகளில் தன்னை  ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. படைப்பாளி சொல்கிறார்:

    அவர் பல்லாண்டு வாழ அவர் கண்டுபிடிப்புகள் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்..எலியைக் கண்டு பிடித்தவர் நிச்சயம் ஓர் புலியையும் கண்டுபிடிப்பார்..

  2. நா.சிவநேசன் சொல்கிறார்:

    உங்களின் வலைப்பூக்கள் பயனுள்ளதாக உள்ளது. எழுத்துப் பிழைகளை மட்டும் தவிர்க்கவும்.

    • adhithakarikalan சொல்கிறார்:

      பிழையை குறைக்க தான் ரொம்ப போராட்டமா இருக்கு, முடிந்த வரை முயல்கிறேன்… அதையும் மீறி சில சமயங்களில் பிழை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் மிகவும் கவனமாக இருக்கிறேன். நன்றி தங்கள் வருகைக்கு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s