இந்த  ஞாயிறு வந்தால் 371 வயது, யாருக்கு தெரியுமா? நம்ம சிங்கார சென்னைக்கு தான். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 மெட்ராஸ் டே என சமீப காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் இந்த கொண்டாட்டம் எங்கிருந்து பிறந்தது என அறிந்து கொள்வோம் சசி நாயர், வின்சென்ட் டிசோசா என்ற இரு பத்திரிகையாளர்கள் முத்தையா என்ற வரலாற்று அறிஞரை சந்திக்க சென்றபோது அவர்கள் வாயிலாக  உதயமானதே  இந்த மெட்ராஸ் டே கொண்டாட்டம்(1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் இந்த ஆகஸ்ட் 22 இல் தான் சென்னையை  நிர்மாணிக்க வந்தார்கள்) இதற்கு முன்  டிசோசா மயிலாப்பூர் பெஸ்டிவல் என்ற நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நடத்தி கொண்டு  வந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம் பழைய சென்னையையும் அதன் பாரம்பரியத்தையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்து கூறுவதும் இன்றைய நிலையில் சென்னையின் சிறப்பை உலகத்திற்கு பறை சாற்றுவதுமாகும். 2004ல்  கொண்டாட்டங்கள் தொடங்கிய ஆண்டு வெறும் 5 நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்த இந்த நிகழ்வு 60 க்கும் மேற்ப்பட்ட நிகழ்ச்சிகளின் கலவையாக தற்போது ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. மேலும் ஒரு நாள் கொண்டாட்டம் இப்போது ஒரு வார கொண்டாட்டமாக வளர்ந்திருக்கிறது.

 

இந்த வருடம், இந்த கொண்டாட்டங்களில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம், சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மீயுசியம் உள்ளிட்ட பல  நிறுவனங்கள்  நிகழ்சிகளை நடத்துகின்றன, சென்னையில் பாடல் பெற்ற திருத்தலங்கள் என்ற தலைப்பின் கிழ் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு புகைப்பட கண்காட்சியும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது.  கி.பி. 1 நூற்றாண்டு  முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது. சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ்  இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்சுகீசியர் 1522 ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவியதாகவும்  பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது என்பதும் வரலாறு. 1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ஆம்  வருடம் மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996 ஆம்  வருடம் தமிழக அரசாங்கம் மதறாஸ் என்ற பெயர் போர்சுகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது. வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தை ஆங்கிலேயர் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுவதாக தகவல்

பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  ஆஹா..சென்னையை பற்றிய அருமையான செய்தியும்..மதராசின் அழகியப் புகைப்படங்களும்..அழகிய அக்காலத்திற்கு அழைத்து செல்கின்றன எம்மை..நன்றி

 2. premcs23 சொல்கிறார்:

  அறிய படங்களுடன் நல்ல தகவல்..

 3. nalavirumbi சொல்கிறார்:

  சென்னை பெயர் காரணம்… தகவல் சொன்னமைக்கு நன்றி..

 4. […] இருந்து எடுக்கப்பட்டது, ஏற்கனவே வரும் ஞாயிறு வந்தால் சென்னைக்கு வயது… என்ற இடுகையில் சென்னையின் பழைய […]

 5. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  சென்னை என்று பெயர் வர சென்னிக்கேஸ்வரன் என்ற பெயரில் இருந்த கோவில்தான் காரணம் என்றே கேள்வியுற்றிருக்கிறேன். சென்னப்ப நாயக்கர் செய்தி புதிதாக இருக்கிறது.

 6. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  மைலாப்பூரையும், மவுண்ட் ரோடையும் பார்க்கையில் ஏக்கமாக இருக்கிறது. இத்தனை அழகோடு இருந்த நகரை இப்படி செய்துவிட்டோமே!.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s