போதுமா இந்த ஊதிய உயர்வு?

Posted: ஓகஸ்ட் 23, 2010 in அங்கலாய்ப்பு
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , ,

 

ஏப்ரல் மாதம் வந்தாலே சம்பள உயர்வை பற்றி பேசாத ஊழியர்களே இருக்கமுடியாது… எனக்கு 30 சதவிகிதம் எனக்கு 20 என ஒவ்வொருத்தரும் மற்றவரின் வயிற்றெரிச்சலை கொட்டி கொள்வது இயல்பான விஷயம். ஆனால் இங்கே ஆகஸ்ட் மாதம் ஊதிய உயர்வு கொடுக்கிறார்கள். யாருக்கு? நமது மேன்மை தங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு. சென்ற வாரம் இந்த செய்தியை எல்லா இதழ்களும் வெளியிட்டிருக்கும் நீங்களும் படித்திருப்பீர்கள். 300 சதவிகித சம்பள உயர்வு, இப்போது ஏறக்குறைய 16,000 வாங்கி கொண்டிருந்த உருப்பினர்களுக்கு தற்போது 50,000 வழங்க தீர்மானித்து இருக்கிறார்கள், ஆனால் 80,000 வரை உயர்வை எதிர்பார்த்து இருந்தார்களாம். இது தவிர அலுவலக செலவுக்காக வழங்கப்பட்ட 20,000 , 40,000 மாக உயர்த்தப்பட்டது மேலும் வாகனங்கள் வாங்க வட்டி இல்லாத கடனாக ஒரு லட்சம் பெற இருந்தது 4 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பயணம் செய்யும் போது ஒரு கிலோமீட்டருக்கு 13 ரூபாயாக இருந்தது 16 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உறுப்பினரின் மனைவியோ அல்லது கணவரோ இலவசமாக முதல் வகுப்பில் எத்தனை தடவை வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம், முன்பு இந்த வசதி உறுப்பினருக்கு மட்டுமே இருந்தது. ஓய்வூதிய தொகை 8,000 ரூபாயாக இருந்தது 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஒரு சாதாரண மனிதரை கேட்டால் இத்தனை சலுகைகள் மிகவும் அதிகம் இவர்களுக்கு இதெல்லம் ரொம்ப ஓவர் என்றே சொல்வார்கள், உறுப்பினர்களுக்கும் இந்த சலுகைகள், ஊதிய உயர்வு ஏற்புடையதாக இல்லை. புலம்பலாகத்  தான் இருக்கிறது. அரசியல், ஊழல், லஞ்சம், அது இது என்று நிறைய விஷயங்கள் இருப்பினும் இன்றைய கால கட்டத்தில் சட்டம் இயற்றும் திறனுள்ள இந்த உறுப்பினர்களுக்கு இப்போது கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கும் ஊதியம் குறைவே, மற்ற நாடுகளின் நாடாளுமன்ற அல்லது அதற்கு சமமான பதவியில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியங்களை ஒப்பிட்டு பார்க்கையில்.

உதரனத்திற்க்கு அமெரிக்க செனட்டரின் ஊதியம் வருடத்திற்கு 1,74,000 அமெரிக்க டாலர் அதாவது மாதத்திற்கு 14,500 டாலர். இந்திய மதிப்பில் பார்க்கையில் ஏறத்தாழ  6,75,000 ருபாய்(13 மடங்கு அதிகம்) கனடாவின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 11 மடங்கு(12,611 USD) அதிகம் பெறுகிறார்கள். இங்கிலாந்து உறுப்பினர்கள் 8 மடங்கு அதிகம் அதாவது கிட்டத்தட்ட 4 லட்சம் பிரதி மாதம். ஆஸ்திரேலியாவில் 9,833 USD, ஜப்பானில் 15,200 USD, சிங்கப்பூரில் 4,71,364 ரூபாய், பிரான்சில் 7,002 யூரோ, இத்தாலியில் 5,487 யூரோ, ஜெர்மணியில் 7,688 யூரோ  ஸ்பெயினில் 3,126 யூரோ. மொத்தத்தில் எல்லா நாடுகளை விட நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெகு குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள்.

எது எப்படியோ, பொது மக்களை கருத்து கேட்கும் போது, இவங்களுக்கு எல்லாம் எதுக்கு சம்பளம், சம்பள உயர்வு. சம்பளத்தை நம்பி வாழற மனிதர்களா அவர்கள்  என்று சிரிக்கிறார்கள் அது என்னவோ உண்மை தானே…

இக்கட்டுரையை நக்கீரன் வலைதளத்தில் வெளியிட்டமைக்கு நன்றி

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=57

 
பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  நல்ல சம்பளம் கொடுக்கலாம்..இவர்கள் கொள்ளையடிக்காமல் இருந்தால்…
  ஆனால் என்ன செய்வது..சாதாரண பணியில் உள்ளவர்களே இன்று லட்சத்தில் சம்பாதிக்கிறார்கள்..நாடாளும் பதவி உள்ளோர்க்கு கொடுத்துதான் ஆகவேண்டும்..அதில் சில நல்லவர்களும் இருக்கலாம் அல்லவா…அவர்களுக்காவேனும்..

 2. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  எனக்கு ஒரு கைப்பேசிக் கவிதை வந்தது,.

  கருணாநிதி – குடும்பதலைவர்
  பதவி- முதல்வர்

  ஸ்டாலின் – மகன்
  பதவி – துணை முதல்வர்

  அழகிரி – மகன்
  பதவி – எம்.பி

  கணிமொழி – மகள்
  பதவி – எம்.பி

  தயாநிதி – பேரன்
  பதவி – எம்.பி

  ஏன் கருணாநிதி எம்.பிகளாக மாற்றினார். ஊருக்கு உழைக்கவா!

  இவர்களுக்கு ஊதியமே தவறு. அதில் உயர்வு வேறா!

  கொடுமை. கொடுமை

 3. ஆகாய மனிதன்... சொல்கிறார்:

  ஏற்கனவே மொத்த வரிப்பணத்தில் 70 % அரசாங்க ஊழியர்களுக்குத்தான் செலவு ஆகிக்கொண்டிருகின்றது.
  இதெல்லாம் நாம் கணக்கு போட்டு கேக்கரதுக்குலாற…அவங்க வாங்கி செலவு பண்ணிட்டு….மறுபடியும் உயர்வு கேட்பாங்க…விடுங்க லூஸ்ல…

 4. ஞாநி சொல்கிறார்:

  பிற நாட்டு மக்கள் பிரதிநிதிகளின் ஊதியங்களுடன் ஒப்பிடுவது தவறு. அதுவும் டால்ரை 47 ரூபாய் என்று கணக்கிட்டு மாற்றிப் பார்ப்பது தவறு. ஒரு காபி விலை இங்கே 10 ரூபாய் என்றால் அங்கே ஒரு டாலர். எனவே டால்ரின் அந்த ஊர் மதிப்பு 10 ரூபாய்தான். பிற நாடுகளில் தனியார் துறையின் கடை நிலை ஊழியரின் ஊதியத்தையும் நம் நாட்டு கடை நிலை ஊழியரின் ஊதியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காமல், எம்.பி,கள் ஊதியத்தை மட்டும் ஒப்பிடுவது முறையானது அல்ல. ஞாநி

 5. வேந்தன் சொல்கிறார்:

  மிக எளிய மற்றும் சாதரண மக்கள் யாவரும் புரிந்து வைத்திருப்பது… எம்.பி.என்றால் அவர் ஒரு ஊழல் மற்றும் தவறான் காரியங்களில் ஈடுபடுபம் தப்பான பேர்வழி என்பதுதான்..யாருக்கும் தெரியாது அவர்கள் பொதுமக்களுக்கு பாடுபடக்கூடிய நாம் நாட்டின் ஜனநாயகமான ஒர் அமைப்பின் உறுப்பினர் என்பது. அப்படியெனில் இவர்களது அயோக்கியத்தனம் எந்த அளவுக்கு வேர்விட்டிருக்கிறது என்று..புரிந்துக்கொள்ளுஙள்..(கம்யூனிஸ்ட்கள் சிலர் தவிர) மிக எளிமையான நேர்மையான பாராளுமன்ற உறுப்பினரை நீங்கள் தேடித்தான் சொல்லவேண்டியிருக்கும்.. அந்த அளவுக்கு சீர்கெட்டு போயிருக்கிறது இந்த நாட்டின் முக்கியமான அமைப்பு.இதுகளுக்கு சம்பள உயர்வு எனபது இன்னொரு கேடு என்று நாம் யோசிப்பதில் தவறில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s