புரட்சி – சிங்கத்தை விரட்டிய காட்டெருமைகள்

Posted: ஓகஸ்ட் 26, 2010 in பார்த்ததில் பிடித்தது
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , ,

சில வருடங்களுக்கு முன் நான் பார்த்த இந்தக் காட்சி கோப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது சபாரி(safari ) எனப்படும், காடுகளின் ஊடே செல்லும் ஒரு சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட படம். இதில் ஒரு சிங்கக் கூட்டத்தில் ஒரு காட்டெருமை மாட்டிக்கொள்கிறது, ஒரு முதலையும் இந்த வேட்டையில் அழையா விருந்தாளியாக வருகிறது. ஒரு கட்டத்தில் காட்டெருமை கூட்டம் திரளாக வந்து சிங்கக் கூட்டத்தை வீழ்த்தி காட்டெருமையை மீட்கிறது. 
 
இது ஒரு சின்ன ஓரங்க நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். இது 8  நிமிடம் 24  செகண்டுகள் ஓடக்கூடிய ஒரு காட்சி. இதை பார்த்து முடித்தபின், கண்டிப்பாக உங்களுக்கு இதை தொடர்புபடுத்தி நிறைய விடயங்கள் மனதில் ஓடும். உங்களுக்கு உண்டான உணர்வை தயவுசெய்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. படைப்பாளி சொல்கிறார்:

    மயிர்கூச்செறியும் காணொளி…எருமைக்குள்ளும் இனமானம் தெரிகிறது..ஒரு எருமை குட்டிக்காக அந்த இனமே ஒன்று கூடி போராடும் இன எழுச்சி…
    தன் இனம் அழிந்தபோதும் கவலைப்படாது,நமக்கென்ன என்றிருந்த தன்மானமில்லாத சில தமிழர்களுக்கு போட்டு காட்டவேண்டும்.

  2. premcs23 சொல்கிறார்:

    நல்ல முயற்சி ஆனால் தாமதமான செயல்.. கொஞ்சம் முன்னரே போரடி இருந்தால் அந்த கன்று குட்டியை காப்பாற்றி இருக்கலாம்

  3. nalavirumbi சொல்கிறார்:

    ஒற்றுமையை உணர்த்தும் காட்சி… நமக்குள்தான் ஒற்றுமை இல்லை.

  4. சி.கருணாகரசு சொல்கிறார்:

    இதை நான் ஏற்கனவே பார்த்து.. . படைப்பாளியின்… இந்த உணர்வுக்குதான் வந்தேன்…..// படைப்பாளி says:
    3:14 பிற்பகல் இல் ஆகஸ்ட் 26, 2010

    மயிர்கூச்செறியும் காணொளி…எருமைக்குள்ளும் இனமானம் தெரிகிறது..ஒரு எருமை குட்டிக்காக அந்த இனமே ஒன்று கூடி போராடும் இன எழுச்சி…
    தன் இனம் அழிந்தபோதும் கவலைப்படாது,நமக்கென்ன என்றிருந்த தன்மானமில்லாத சில தமிழர்களுக்கு போட்டு காட்டவேண்டும்.//

    பகிர்வுக்கு நன்றிங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s