உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும், எதிர்க்கட்சிகள் சொல்லும் முதன்மையான  குற்றச்சாட்டு மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியை பற்றியதாக இருக்கும். இதில் கள்ளஒட்டு போடமுடியாது என்று இதை வடிவமைத்தவர்களும், ஆளும் கட்சியும், தேர்தல் கமிசனும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தே சொல்லிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இந்தக் கருவியில் கள்ள ஒட்டுப் பதிவு செய்ய முடியுமா? இந்த கேள்வி எல்லோர்க்கும் இருக்கும் ஒன்றே. இதை பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளார் ஹைதராபாத்தை சேர்ந்த  ஹரி பிரசாத் மற்றும் J. Alex Halderman, Rop Gonggrijp.  இக்குழு கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஆய்வு பற்றிய கட்டுரையை வெளியிட்டுள்ளது, மேலும் செய்முறை விளக்கமாக ஒரு காணொளியும்  வெளியிட்டது. இதில் மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியின் சிப்புகளை மாற்றியும், அலைபேசியின் உதவி கொண்டும்  எப்படி கள்ள ஒட்டு பதிவு செய்ய முடியும் என்பதை தெளிவாக விளக்கி  உள்ளனர். இந்த காணொளி பலர் பார்த்திருப்பீர்கள், மேலும் இது சம்பந்தப்பட்ட செய்தியைக் கேள்விபட்டும் இருப்பீர்கள், பார்க்காதவர்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த இடுகை. 
 
 
ஹரி பிரசாத் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பது கூடுதல் தகவல், இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியை அவர் திருடினார் என்பதே குற்றச்சாட்டு.
 
மேலும் விவரங்களுக்கு  http://indiaevm.org/ வலைத்தளத்தில் சென்று பாருங்கள்.
 
பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  ஒரு ஓட்டுக்கு எவ்ளோ பைசா…???

  • adhithakarikalan சொல்கிறார்:

   பைசாவா? எந்த யுகத்தில் இருக்குறீங்க நண்பரே… எல்லாம் சலவை நோட்டுகள்… சில இடங்களில் இப்போவெல்லாம் வோட்டு போடறவங்க தான் எவ்வளவுன்னு நிர்ணயம் பண்ற அளவுக்கு நம்ம ஜனநாயகம் வளந்திருக்குது.

 2. premcs23 சொல்கிறார்:

  வளர்ந்த நாடுகளில் பலவற்றில் இன்னும் ஓட்டு சீட்டு முறைதான் இருக்கிறது…

 3. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  எங்கள் ஊருக்கு சென்ற தேர்தலின் போது ஐந்து மூட்டையில் பணம் வந்ததாக சொன்னார்கள்.

 4. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  நண்பரே, கோவில் சுற்றுலாவிற்கு சென்று விட்டதனால், தொடர்பதிவினை உடனடியாக எழுதமுடியவில்லை. எனினும் விரைவில் எழுதிவிடுகிறேன். அன்புடன் அழைத்தமைக்கு நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s