சீனா நிறைய விடயங்களில் உலகின் உச்சத்தை தொட்டு இருக்கிறது, உதாரனத்திற்கு சீனப்பெருஞ்சுவர், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, தியனன்மென்  சதுக்கம்(Tiananmen Square), உலகின் மிகப்பெரிய அங்காடி(mall) South China Mall in Dongguan, இதன் வரிசையில் இந்த மிகப்பெரிய டிராபிக் ஜாமும் தற்போது இணைந்திருக்கிறது. சீனாவின் வடகிழக்கு பகுதியில் பெய்ஜிங் – ஜாங்ஜியாகௌ(Beijing-Zhangjiakou Highway) பெருவழியில்  இந்தப் போக்குவரத்து நெரிசல் இடம் பெற்றிருக்கிறது. ஆகஸ்ட் 13 ம் தேதி தொடங்கி இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, ஏறக்குறைய 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த நெரிசல், தினமும் 400 மீட்டர் மட்டுமே வாகனங்கள் முன்னேருகிறதாம். இது செப்டம்பர் மாத மத்தியில் தான் சரியாகும் என்று சீனப் போக்குவரத்து சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

சரி  இதுபோன்ற நெரிசல் இங்கு  உருவாகக் காரணம் தான் என்ன?

20 லட்சம் மக்கள் ஒவ்வொரு மதாமும் நகரத்தை நோக்கி  வந்து கொண்டு இருப்பது, கார் விற்பனை மாதத்திற்கு மாதம் 20 சதவிகிதம் கூடுவது, சீனா புதிய தேசிய நெடுஞ்சாலைகளையும், மராமத்து வேலைகளையும் செய்து கொண்டிருப்பது, அதனால் நெடுஞ்சாலைகள் தொழிலாளிகளாலும்,  வேலைகளுக்கான கனரக வாகனங்களாலும் ஆக்ரமிப்புக்கு உள்ளாகி இருப்பது. இப்படி பல காரணங்கள் சொல்கிறார்கள் 

இந்த நெரிசலுக்கு முக்கியக் காரணம் நிலக்கரி ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களே என்று ஒரு தரப்பு கூறுகிறது, சீனாவின் ஆற்றல் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் இந்த நிலக்கரி மூலமே பெறப்படுகிறது மேலும்  சீனாவில் சிறு மற்றும் குறு அளவில் நிறைய நிலக்கரி சுரங்கங்கள் இருப்பது எல்லோரும் அறிந்ததே, வருடத்திற்கு 2500 பேர் குறைந்த பட்சம் சுரங்கங்களில் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். இந்த சுரங்க முதலாளிகள் சட்டத்திற்கு   புறம்பாக நிலக்கரியை விரும்பிய இடங்களுக்கு கொண்டு செல்கிறார்கள், போதுமான அளவுக்கு  இவர்களை கண்காணிக்க கண்காணிப்பு இடங்கள் (checkpoints ) இல்லை. இந்த நெரிசலின் பல படங்களில் இந்த நிலக்கரி வண்டிகள் அதிகம் ஆக்கிரமிப்பு பெற்று இருப்பதை காணலாம் 
 

  

 சரோஜா படத்தில் ஒரு டிராபிக் ஜாம் ஆகும் அப்போது, நிறைய ரோட்டோர வியாபாரிகள் சடுதியில் தோன்றி வியாபாரம் செய்வது போல ஒரு காட்சி வரும், பிரியாணிக்கு ஒருத்தர் ஆர்டர் எடுப்பார் ஞாபகம் இருக்கா? அதே நிலை இந்த சீன டிராபிக் ஜாமிலும் உண்டாக்கியிருக்கிறது. உணவு, உடை, புத்தகங்கள் என விற்பனை படு ஜோராம்.
 
பின்னூட்டங்கள்
 1. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  அப்படியே அலுவலகத்தையும் அங்கேயே திறந்துவிட்டால் வேலையும் நடந்துவிடு்ம்.

  இப்போது மக்களின் சொகுசுவாழ்க்கை அவர்களுக்கே எமனாகப்போய் விடுகிறது. இந்த சாலையில் ஒரு நோயாளியோ, பிரசவம் பார்க்க ஒரு பெண்ணோ சென்றால் என்னவாகும். நிச்சயம் கொடுமை.

  சுமோ, இன்னோவா வாகணங்களில் பெரும்பாலும் ஒருவர் பயணிப்பதை காண்கிறேன். ஏழை நாடு என்று சொல்லிக்கொள்ளும் இங்கேயே இப்படி என்றால், மற்ற நாடுகளை எண்ணிப்பார்க்கவே இயலவில்லை.

 2. கிரி சொல்கிறார்:

  நானும் செய்தியில் பார்த்தேன்.. முழுதாக பார்க்கவில்லை. தகவலுக்கு நன்றி.

  இதனால் எத்தனை பெட்ரோல் செலவாகி இருக்கும் என்று நினைத்தாலே கண்ணை கட்டுகிறது.

 3. premcs23 சொல்கிறார்:

  ஆச்சர்யமாக இருக்கிறது.. நல்ல தகவல்

 4. படைப்பாளி சொல்கிறார்:

  அட அங்கயுமா?? நம்ம ஊருல உள்ளவங்க நிம்மதி பெருமூச்சு விடலாம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s