1993லேயே தாக்குதலுக்குள்ளான உலக வர்த்தக மையம்.

Posted: செப்ரெம்பர் 11, 2010 in தகவல்கள்
குறிச்சொற்கள்:, , , , , , , , , , ,
இன்றைய நாள் யாராலும் மறக்கமுடியாத ஒரு நாள், தீவிரவாதத்தால் விளைந்த மிகப் பெரிய அழிவை கண்ட நாள் 9 / 11

உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு, வீழ்த்தப்பட்ட நாள். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது எனக்கு மனமுடிந்து 5  நாட்கள் கழிந்த நிலையில் அன்று இரவு நானும் என் மனைவியும் திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும் போது, வீதி எங்கும்  இந்த நிகழ்வைப் பற்றிய பேச்சே ஓடிக் கொண்டிருந்தது. வீட்டுக்கு  சென்று அவசர அவசரமாக தொலைக்காட்சி பெட்டியின் முன் உட்கார்ந்த எனக்கு அந்தக் காட்சிகளை பார்க்கும் போது ஒரே திகிலாய் போனது. ஒரு வல்லரசு நாட்டிலேயே இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்த முடியுமானால் நம் நாடு எம்மாத்திரம், நம் உயிர்களுக்கெல்லாம் எந்த உத்திரவாதமும் இல்லை என்றே தோன்றியது, அது போலவே சில ஆண்டுகள் கழித்து நடந்த மும்பை தாக்குதல் அமைந்தது. எல்லா இயக்கங்களுக்கும் ஒரு கொள்கை இருக்கத்தான் செய்கிறது, அவர்கள் பார்வையில் அவர்களின் செயல் புரட்சிகரமானதாக தென்பட்டாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை யாராலும் சகித்துக் கொள்ளமுடியாது. 
 
ஆனால் இது முதல் முறை நிகழ்த்தப்பட்ட தாக்குதல்  அல்ல, 1993லேயே ஒரு முறை ராம்சி யூசுப் என்பவரால் ஒரு தாக்குதல் தொடுக்கப்பட்டது. 680 கிலோ வெடிமருந்து கொண்டு வடக்கு டவரின் அடித்தளத்தில் இந்த தாக்குதல் நிகழ்த்தப் பட்டது. லெவல் B1 , B2 இல் பெருத்த சேதம் விளைந்தது. இதன் விளைவாக 6 பேர் உயிர் இழக்க நேரிட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 2 மணி நேரம் ஆனது. 50000 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தாக்குதலை நிகழ்த்திய ராம்சி யூசுப்   பிப்ரவரி 1995 இல்  பாகிஸ்தானில் கைது  செய்யப்பட்டார்.
 
உலக வர்த்தக மையம் நியூயார்க் நகரில் முன்னாள் அமைந்த பிரம்மாண்டமான  இரட்டை கட்டிடம். 1972இல் திறந்த இக்கட்டிடம் 1972 முதல் 1973 வரை உலகில் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. கட்டிடக்கலைஞர் மினோரு யமசாக்கியின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
பின்னூட்டங்கள்
  1. nalavirumbi சொல்கிறார்:

    நன்றி நண்பரே! நல்ல தகவல்

  2. படைப்பாளி சொல்கிறார்:

    இன்றளவிலும் அந்த நிகழ்வு மனசை விட்டு அகலவே இல்லை நண்பரே..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s