காஞ்சிபுரம் பட்டுப்புடவைக்கு காப்புரிமை

Posted: செப்ரெம்பர் 14, 2010 in தகவல்கள்
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , ,
 
காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் உலக  குறியீட்டுச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பதிவு செய்யப்பட்டு, காப்புரிமை பாதுகாப்பு காஞ்சி பட்டுப்புடவைகளுக்கு கிடைக்க பெற்றுள்ளது.
 

இனி காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் பட்டுப்புடவைகள் மட்டுமே “காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள்” என்று அழைக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது. இதன் மூலம் தனித்தன்மையுடைய காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பும் அங்கீகாரமும் கிடைக்கும் எனவும், இது நெசவாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் அறியப்படுகிறது. எதிர்வரும் காலத்தில் காஞ்சிபுரம் பட்டுபுடவைகளுக்கு என தனி முத்திரை பதிக்கப்பட்டு அதற்கு கீழே RGI என குறிக்கப்பட்டிருக்கும் எனவும் கூறுகின்றனர். அதை வைத்துக் கொண்டு நுகர்வோர்கள் காஞ்சிப்பட்டின் நம்பகத்தன்மையை தெரிந்து கொள்ளலாம். இந்த முத்திரையை உபயோகப்படுத்த பதிவு செய்து கொள்ளாதவர்கள், இனி காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் என்கிற பெயரில் விற்பனை செய்தால் ஆறு மாதத்திலிருந்து மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதன்  மூலம் காஞ்சிப் பட்டுபுடவைகளை தயாரிக்கும் நெசவாளர்களுக்கும், அதை வாங்கும் நுகர்வோர்கள் ஆகிய இருதரப்பினருக்குமே இந்தக் காப்புரிமை மூலம் பயன் கிடைக்கும். போலிகளை இனங்காணவும், உண்மையான காஞ்சிப்பட்டை நுகர்வோர் வாங்கி பயனடையவும் இது ஏதுவாகிறது.

பின்னூட்டங்கள்
  1. premcs23 சொல்கிறார்:

    நல்ல தகவல்

  2. nalavirumbi சொல்கிறார்:

    நன்றி நண்பரே! நல்ல தகவல்

  3. கிரி சொல்கிறார்:

    தகவலுக்கு நன்றி .. சரியான முடிவை அரசு எடுத்துள்ளது.

  4. படைப்பாளி சொல்கிறார்:

    நெய்தவன் மனதில் மகிழ்ச்சி நெய்த செய்தி…அருமை..

  5. mathistha சொல்கிறார்:

    எனக்கு காஞ்சிவரம் படம் தான் நினைவுக்கு வருகிறது… வாழ்த்துக்கள்…

  6. Kirubanandam சொல்கிறார்:

    Really nice one . I’m also from covers family background very much usefull news .

mathistha -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி