அப்துல் கலாமை முன்மாதிரியாக கொண்டு வாழ்கையில் முன்னேறப் போராடும்  ஒரு ஏழை சிறுவனைப் பற்றிய 87 நிமிட திரைப்படம் ஐ ஆம் கலாம். இந்தப் படம் லண்டனில் நடைபெறவுள்ள உலகத் திரைப்பட விழாவில் பங்குபெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் மேலும் 8 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மே மாதம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்ட இந்த படம் வரும் டிசம்பரில் திரைக்கு வரவிருப்பதாக தகவல்.
 
படத்தின் களம் ராஜஸ்தான், அங்கு ஒரு தாபா(dhaba)வில் வேலை செய்யும் சிறுவன் சோட்டு, ஒரு நாள் தொலைக்காட்சியில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறைப்பற்றி அறிகிறான், எவ்வளவு இடற்பாடுகளுக்கு இடையில் அவர் படித்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்று அறியும் அவன், அவர் போலவே வாழ்வில் நல்ல நிலைக்கு வரவேண்டும், அதற்காக படிக்க வேண்டும் என்று ஆசைகொள்கிறான். அந்த கனவை நோக்கிய பயணமே இந்தப் படம். படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்க்கும் போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது இந்தப் படம். டெல்லியில் உள்ள ஒரு சேரியில் வசிக்கும் ஹர்ஷ் மயார் என்ற சிறுவன் சோட்டு என்ற கதாபாத்திரமாக நடித்திருக்கிறான். இந்தப் படம் குழந்தை தொழிலாளர்களின் அவலங்களை எடுத்து கூறுவதாக அமையும் என எதிர்பார்க்கிறேன். மேலும் இந்தப் படம் வளரும் நாடுகளில் உள்ள எல்லா மக்களுக்கும் பொருந்தும் விதமாக அமைந்திருப்பதாக படத்தின் இயக்குனர் தெரிவிக்கிறார்.
 
படத்தின் முன்னோட்டக்காட்சி உங்களின் பார்வைக்கு…
 
பின்னூட்டங்கள்
 1. […] ஐ ஆம் கலாம்   அப்துல் கலாமை முன்மாதிரியாக கொண்டு வாழ்கையில் முன்னேறப் போராடும்  ஒரு ஏழை சிறுவனைப் பற்றிய 87 நிமிட திரைப்படம் ஐ ஆம் கலாம். இந்தப் படம் லண்டனில் நடைபெறவுள்ள உலகத் திரைப்பட விழாவில் பங்குபெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் மேலும் 8 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மே மாதம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்ட இந்த படம் வரும் டிசம்பரில் திரைக்கு வரவிருப்பதாக தகவல்.   படத்தின் களம் ராஜஸ்தான், அங்கு ஒரு தாபா(dhaba)வில் வேலை செய்யும் சிறுவன் சோட்டு, ஒரு நாள் தொலைக்காட்சியில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறைப்பற்றி அறிகிறான், எவ்வளவு இடற்பாடுகளுக்கு இடையில் அவர் படித்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்று அறியும் அவன், அவர் போலவே வாழ்வில் நல்ல நிலைக்கு வரவேண்டும், அதற்காக படிக்க வேண்டும் என்று ஆசைகொள்கிறான். அந்த கனவை நோக்கிய பயணமே இந்தப் படம். படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்க்கும் போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது இந்தப் படம். டெல்லியில் உள்ள ஒரு சேரியில் வசிக்கும் ஹர்ஷ் மயார் என்ற சிறுவன் சோட்டு என்ற கதாபாத்திரமாக நடித்திருக்கிறான். இந்தப் படம் குழந்தை தொழிலாளர்களின் அவலங்களை எடுத்து கூறுவதாக அமையும் என எதிர்பார்க்கிறேன். மேலும் இந்தப் படம் வளரும் நாடுகளில் உள்ள எல்லா மக்களுக்கும் பொருந்தும் விதமாக அமைந்திருப்பதாக படத்தின் இயக்குனர் தெரிவிக்கிறார்.   படத்தின் முன்னோட்டக்காட்சி உங்களின் பார்வைக்கு…   […]

 2. படைப்பாளி சொல்கிறார்:

  படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்..தகவலுக்கு நன்றி நண்பரே..

 3. nalavirumbi சொல்கிறார்:

  ஐ அம் கலாம் , இன்னும் பல கலாம்களை உருவாக்க வாழ்த்துகள்

 4. Snabak Vinod A J சொல்கிறார்:

  Hi.. thanks for the info… I am so exited to see that movie…

 5. filmy porno சொல்கிறார்:

  Amazing, marvelous post! Regards for posting about it.

 6. Lefojjiz சொல்கிறார்:

  cactus wren bird,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s