ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வசிக்கும் பிச்சைகாரன்

Posted: செப்ரெம்பர் 17, 2010 in தகவல்கள்
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , ,
 
நீங்கள் நகைச்சுவை பிரியராக இருந்தால் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் விவேக்கின் ஒரு பிச்சைக்கார நகைச்சுவை துணுக்கு, அதில் ஒரு பிச்சைகாரர் ஒருவரை பார்த்து ஏன் நீ பிச்சை எடுக்குறே? உன் கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு வேலை செஞ்சு பிழை என்று கருத்து சொல்ல அவனோ உன்கிட்ட யாரு பிச்சை கேட்டா! கொஞ்சம் நகந்துக்கோ என் கார எடுக்கனும்னு சொல்வான். இதை பாத்து விவேக் அதிர்ந்து போய், இவன் வசதியா பார்த்தா TAX கட்டுவான் போல இருக்கேனு ஒரு வசனம் சொல்வார். நகைச்சுவையாக சொல்லப்பட்ட அந்த விஷயம் இப்போது உண்மையாகி இருக்கிறது. துபாயில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வசிக்கும் பிச்சைக்காரனை கைது செய்திருப்பதாக கேள்வியுற்று ஆச்சர்யமாகிப்போனது எனக்கு.
 
ரமலான் மாதத்தை முன்னிட்டு நிறைய பிச்சைக்காரர்கள் குவிந்துவிட்டனறாம் துபாயில், இவர்கள் எல்லோரும் ஆசியாவை சார்ந்தவர்கள். சுற்றுலாப்  பயணிகள் போல வந்திருக்கும் இவர்கள் துபாய் நகரெங்கும் தங்கள் கை வரிசையை காட்டி இருக்கிறார்கள், ஏறக்குறைய 360  பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அனைவரும்  ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிடிபடவில்லை என்ற போதிலும், தொழில் முறையாக சுற்றுலா பயணி போல் வந்து பிச்சை எடுப்பவர்கள் என் தெரிந்து துபாய் அரசு துரித நடவடிக்கை எடுத்து இவர்களை பிடித்து இருக்கிறார்கள். மேலும் இதுபோல வேறு யாராவது நகரத்தில் தென்பட்டால் அவர்களை பிடிக்க பொதுமக்களுக்கு ஒரு விசேஷ தொலைபேசி என் (8004438) மூலம் தொடர்பு  கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படிருக்கிறது.
 
 2006 ம் வருடம் 1,232 பேரும்,2007 ல் 987.  2008, 2009 இல் முறையே 578, 618ஆக இருந்த பிச்சைக்காரர்களின் கைது எண்ணிக்கை இந்த வருடம் 360ஐ தொட்டிருக்கிறது. எண்ணிகையை பார்த்தாலே தெரியும்  எவ்வளவு கடுமையாக நடந்துகொண்டிருக்கிறது  துபாய் அரசு என்று, வருடத்திற்கு  வருடம்  படிப்படியாக குறைத்திருக்கிறது.  சுற்றுலா பாதுகாப்பு துறையை சேர்ந்த காவல் துறை இயக்குனர் அல் முகாரி இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார். மேலும் இது சட்டத்திற்கு  புறம்பாக பணம் சம்பாதிப்பது, இது தொடர்பான குற்றங்கள் அதிகரித்து இருப்பதால் பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  அடடே உலகளாவிய பிசினஸ் பண்றாங்களா..பிச்சைக்காரர்கள்..ஆச்சர்யமான செய்தி.

 2. vel சொல்கிறார்:

  Vunga kitta innum eathir parkirean…..

 3. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  நாமக்கலில் ஒரு பழைய தியேட்டர் வாசலில் ஒரு பிச்சைக்காரர் இருந்தார். அவருடைய மகன் அமெரிக்காவில் மருத்துவராக இருப்பதாக சொன்னார்கள். இதெல்லாம் சகஜம் போல!

 4. maideen சொல்கிறார்:

  panam patuthum paadu…panam pannum paadu…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s