கடந்த சில நாட்களாகவே நாடெங்கிலும்  இதைப்பற்றியே பேச்சு, பாபர் மசூதி தீர்ப்பு, பாபருக்கு சாதகமாக இருக்குமா? ராமருக்கு சாதகமாக இருக்குமா? போகிற போக்கை பார்த்தால் கிரிக்கெட் சூதாட்டம் போல தீர்ப்பை முன்னிறுத்தி ஜெயிக்கப்போவது யாரு என்று சூதில் ஈடுபட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை, அவ்வளவு ஆர்வத்தில் இருக்கிறார்கள் மக்கள்.
 
உண்மையில் இது அவ்வளவு ஆர்வத்தை கவர்கிற விசயமா? சாதாரண நிலத்தகராறு ஒரு நாட்டின் அமைதி, இறையான்மையையே  கேள்விக்குறியாக்கும் விசயமாக மாறிப்போனதற்கு காரணம் என்ன? ரிஷிமூலம் நதிமூலம் எல்லாம் பார்த்தால் தலையே சுற்றுகிறது. இரண்டு தரப்பும் தனக்கென்று ஒரு ஞாயத்தை வைத்து போராடிக்கொண்டிருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும், ஆட்சியில் உள்ளவர்களே இந்த தீர்ப்பு அவசியாமா? இதை இப்படியே ஆறப் போடக்கூடாதா என்று என்னுமளவிற்கு நிலைமை மோசமாகித்தான் போய் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இன்றிலுருந்தே  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாகிவிட்டது. உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து சில மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக அனுப்பும் BULK SMS தடை செய்யப்பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் ஊடகங்களையும்  பொது மக்களையும், உங்கள் கருத்துகளை உங்களோடு வைத்துருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மத விசயங்களில் பெரிதும் ஆர்வம் காட்டுபவர்களும் பாபர் மசூதி பிரச்னையை கையில் எடுத்தவர்களுமான பா.ஜா.க. கூட இந்த விசயத்தில் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நரேந்திர மோடி, காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகின்ற இந்த சமயத்தில் மானத்தை வாங்கி விடாதீர்கள் என்ற  கதியில் அமைதி காக்கும்படி அறிவிப்பு விடுகிறார்.
 
இதெல்லாம் பார்க்கும் போது, கடவுளை மற மனிதனை நினை என்று கூறிய தீர்க்கதரிசியை  நினைக்காமல் இருக்க முடியவில்லை. அமைதிப்படை என்ற படத்தில் ஒரு வசனம் வரும் “டேய் மணியா கடவுள் இல்லைன்னு சொன்னவன் கூட கோயில இடிச்சதா சரித்திரம் இல்லை, கடவுள் இருக்குதுன்னு சொல்றவன் தான் அடிச்சுக்கிட்டு சாகிறான்”, சத்யராஜ் தனக்கே உரிய பாணியில பேசுவார். எவ்வளவு உண்மையான விஷயம்.
 
வெள்ளிகிழமை தீர்ப்பு, சனி ஞாயிறு விடுமுறை, திங்கட்கிழமை எப்படியும் மேல்முறையீட்டுக்கு  போய் நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கி விடுவார்கள்  தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே சனி ஞாயிறு அமைதியாகப் போனால் போதும், திங்கட்கிழமை நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் என்று சில சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
தீர்ப்பு எப்படி இருந்தாலும் நாம் அமைதி காப்போம், அறவழியில் நடப்போம். 
 
பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  “டேய் மணியா கடவுள் இல்லைன்னு சொன்னவன் கூட கோயில இடிச்சதா சரித்திரம் இல்லை, //////

  ஆழமான சிந்தனை..ஆக்கப்பூர்வமான கட்டுரை நண்பரே..அருமை…அருமை…அருமை…

 2. premcs23 சொல்கிறார்:

  நன்று அருமை…

 3. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  எஸ்.எம்.எஸை தடுத்துவிட்டார்கள், போக்குவரத்தும் நிறுத்துமாறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. லாரிகள் 3 மணியிலிருந்து ஓடாதவாறு பார்த்துக்கொள்ள சொல்லியிருக்கின்றார்கள். அதைவிட இந்து மதத்தில் இருக்கும் சிலரும், முகமதிய மதத்தில் இருக்கும் சிலரும் மாறி மாறி அமைதி காக்குமாறு சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

  இத்தனையும் செய்வதைப் பார்த்தால் தீர்ப்பின் விளைவுகளை எண்ணி எப்படி பயம் கொண்டிருக்கின்றாரகள் என தெரிகிறது. இரண்டு மதங்களிடையேயான பிரட்சனையாக உருவம் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஒரு தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், அதைக் கொண்டாடவோ, இல்லை வருத்தம் கொள்ளவோ கூடாதென யாரும் சொல்லவில்லை. உங்கள் கருத்தினை வெளியே சொல்லாதீர்கள் என்கின்றார்கள். தீர்ப்பு தரும் பாதிப்பினை விட இவர்களின் வேண்டுகோள்கள் எதிர்மறையாக செயல்படாமல் இருந்தால் சரி.

 4. anitha சொல்கிறார்:

  இந்த தீர்ப்பு இந்துக்களுக்கு எதிரான தீர்ப்பாகத்தான் இருக்கும் .மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது நடை பெற்ற மசூதி இடிப்பால் எதிரான முஸ்லீம் வோட்டூ வங்கியை சமாதான படுத்தும் திட்டம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s