சென்ற வாரம் எனக்கு உடலில் அங்கங்கே சிறு சிறு புடைப்புகள் தோன்றியது கூடவே கொஞ்சம் நமைச்சல், நானும் அது சாதாரண கொசுக்கடி என்றே இருந்துவிட்டேன், ஏனெனில் பகல் பொழுதில் என்னால் புடைப்புகளையோ நமைச்சலையோ உணரமுடிய வில்லை, மாலை வீடு சென்ற பிறகே இப்படி ஆகிக்கொண்டிருந்தது. ஆனால் என் வீட்டிலோ அந்த அளவிற்கு கொசுத்தொல்லையும்  இல்லை. 2 நாட்கள் கழித்த பின் தான் உணர்ந்தேன் இது ஏதோ அலர்ஜி போல இருக்குமோ என்று. நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்கும் போது அவர் அவருடைய குழந்தைக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருந்ததாகவும், இது ஒரு வகை  அலர்ஜி தான் எனவும் அலர்ஜி மாத்திரை ஒன்றை வாங்கி போடுங்கள் சரியாகிவிடும் என்றார்.

அவர் சொன்னது போல ஒரு மாத்திரையை விழுங்கிய பின் ஒரே நாளில் சரியானது. அந்த சமயத்தில் நான் அலர்ஜி பற்றி வலை தளங்கள் மூலமாகவும் ஒரு புத்தகத்தின் மூலம் படித்த விசயத்தை உங்களோடு இன்று பகிர்ந்து கொள்கிறேன்.
 
நாம் உண்ணும் உணவால் சில சமயம்  உடலுக்கு சில உபத்திரவங்கள் உண்டாகும் ஆனால் அவை எதனால் ஏற்படுகின்றது என்ற விவரம் புரியாது. இத்தகைய ஒரு நிலைக்கு பெயரே அலர்ஜி. உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருள் உடலுக்குள் நுழையும் போது எதிர்ப்பு கிளம்புகிறது, அங்கு ஒரு ஒத்துழையாமை இயக்கம் நடைபெறுகிறது. மருத்துவ மொழியில் சொல்ல வேண்டுமானால் ஆண்டிஜென்னுக்கும், ஆண்டிபாடிக்கும் நடக்கும் சண்டை. இந்த விஷப்பொருளை( உடலுக்கு தேவை இல்லாத எல்லாப் பொருள்களும் விசப்பொருட்கள் தான்)  ஹிஸ்டாமின் சீரோடோனின் என்று மருத்துவத்துறையில் சொல்வர். உடலில் எந்தப் பகுதியில் இந்த விஷப் பொருள் தாக்குகிறதோ அந்தப் பகுதியில் அலர்ஜி ஏற்படுகிறது. இந்த விஷப்பொருள் ரத்தத்துடன் உடல் முழுவதற்கும் செல்கிறது. இதனால் ரத்த நாளங்கள் விரிவடையும். ரத்தம் அதிகமாகி அந்த இடம் சிவந்து விடுகிறது. உடலில் தடிப்பாக அங்கங்கு துருத்தும். சில உணர்வு நரம்புகளை தூண்டி நமைச்சலை ஏற்படுத்துகிறது. சுவாசக் குழாய்களை தாக்க ஆஸ்துமாவையும் உண்டாக்கும் சிலவகை அலர்ஜிக்கள். 
 
பின்னூட்டங்கள்
  1. படைப்பாளி சொல்கிறார்:

    அதுங்க சண்டைல நம்மள காலி பண்ணிடுதுங்க…

    நல்ல மேட்டர்..அறியதந்தமைக்கு நன்றி..

  2. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    காய்ச்சலுக்கு சல்பரின் என்ற மருந்தினை சில மருத்துவர்கள் உபயோகின்றார்கள். அது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. என்னுடைய அப்பாவிற்கு அப்படி நிகழ்ந்தது. அதன் விளைவுகளை சரி செய்ய 5000 ரூபாய் செலவு ஆனாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s