ஆங்கிலத்தில் பாய்காட் என்று ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஒத்துழைக்காமல் தவிர்ப்பது, ஒன்றாய் இனைந்து புறக்கணிப்பது என்பது இதன் பொருள். இந்த சொல் எப்படி வந்தது ? தெரியுமா?

ஐயர்லாந்தில் காடுகளிலும், தோட்டங்களிலும் வேலை செய்ய காப்டன் சார்லஸ் பாய்காட் என்ற ஐரிஸ் கான்ட்ராக்டர்  கூலியாட்களை நியமித்து வேலை வாங்கி வந்தார். கூலியாட்களும் ஐரிஸ்காரர்கள். இவர்களிடம் மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் நடந்து கொண்டார் பாய்காட்.  பல நாட்கள் பொறுத்திருந்தும் விடிவு எதுவும் ஏற்படாததால் அந்த கூலியாட்கள் அனைவரும் ஒன்றாய் இனைந்து பாய்காட்டின் காண்ட்ராக்ட் வேலையை செய்ய மறுத்து அவரை புறக்கணித்தனர். அந்தப் பகுதியில் அவர் தனித்து விடப்பட்டார். அவரின் வேலையாட்கள் அவரின் நிலத்தில், வீட்டில் வேலை செய்ய மறுத்து விட்டனர், அவ்வூரில் உள்ள வியாபாரிகளும் இவருடன் வணிகம் செய்ய மறுத்துவிட்டனர். தபால் கொடுப்பவர் கூட தபாலை கொடுக்க மறுத்துவிட்டாராம். அந்த பகுதி மக்கள் யாருமே அவருக்கு ஒத்துழைக்கவில்லையாம்.

அவருடைய நிலத்தில் அறுவடைக்கு ஆள் கிடைக்காமல் வேறு இடங்களில் இருந்து சொற்ப ஆட்களை கொண்டு அறுவடை செய்தாராம், 50௦ தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஆயிரத்திற்கும் மேற்ப்பட காவலர்களை நியமிக்க வேண்டியதாகிவிட்டது . வேடிக்கையான விஷயம் என்னவென்றால்  அறுவடையால் கிடைத்த  லாபத்தை விட காவலர்களுக்கும் விவசாயக் கூலிகளுக்கும் கொடுத்த பணம் அதிகம் ஆகிவிட்டது.  

இந்த நிகழ்வுக்கு பின்னர்தான் இத்தகைய ஒத்துழையாமையை பாய்காட் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். முதன் முதலில் 1880 இல் பாய்காட் என்ற பதத்தை டைம்ஸ் பத்திரிகை ஒரு ஒத்துழையாமை போராட்டத்தை பற்றிய செய்தியில் உபயோகப்படுத்தியது.

பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  நல்ல தகவல்..அர்த்தம் உங்களாலே அறிந்தேன்..அறியாமல் இவ்வளவு நாள் பேசி இருக்கிறேன்..

 2. RAHIMGAZALI சொல்கிறார்:

  என் முந்தைய பின்னூட்டத்தின் GOD- என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா? என்ற எழுத்தின்மேல் சுட்டியை அழுத்துங்கள் விடை கிடைக்கும்

 3. butterfly Surya சொல்கிறார்:

  அருமை. புதிய தகவல். இதை முகநூலில் பதியலமா..? அனுமதி தேவை.

  நன்றி. வாழ்த்துகள்.

 4. k.muthu lakshmi சொல்கிறார்:

  Sir, Greetings!!!
  Wordpress.com is very useful website. More Informative. Pl.Mail me on new information relating with business.Thank you very much.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s