அமீர் கானின் பீப்ளி லைவ் இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருகிறது.   இது அமீர்கானின் மூன்றாவது முயற்சி, ஏற்கனவே அவரின் லகான், தாரே ஜமீன் பர் என்ற இரண்டு படங்கள் இந்தியா சார்பில்  பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் அமீர்கானால் தயாரிக்கப்பட்டு UTV சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முறை 5 தமிழ்த் திரைப்படங்கள் போட்டியில் இருந்தன, அவை சிங்கம், மதராசப் பட்டினம், ராவணன், விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு. இதில் அங்காடித்தெரு பீப்ளி லைவ்க்கு கடுமையான போட்டியை கொடுத்திருக்கிறது என்பதில் பெருமிதம் தான்.  இந்திய விவசாயிகளின் ஏழ்மையையும், அதன் கொடூரத்தினால் ஏற்படும் இன்னல்களையும் விளக்குவதாகவும், இந்திய கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாகவும் உள்ளதால் அங்காடித்தெருவை தாண்டி ஒரு அடி முன்னெடுத்து வைத்து ஆஸ்காருக்கான இந்தியப்  பரிந்துரையில் இடம் பிடித்திருக்கிறது பீப்ளி லைவ். மேலும் பா, ராஜ்நீதி, மை நேம் இஸ் கான் முதலான 27 திரைப்படங்களை ஓரங்கட்டி  இருக்கிறது இந்தப் படம். 15 பேர் கொண்ட FILM FEDERATION OF INDIA  குழு இந்த பரிந்துரையை வெளியிட்டு இருக்கிறது.

அங்காடித்தெரு உண்மையில் நல்லதொரு திரைப்படம், பீப்ளி லைவ் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, அதனால் ஒப்பிட்டு கருத்து சொல்ல முடியவில்லை. இருப்பினும் பீப்ளி லைவ் படத்தின் காட்சிகளை தொலைகாட்சியின் வாயிலாகவும் சில வலைதளங்களிலும் பார்த்தேன்.  படம் நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன்,  நம் வசந்தபாலனுக்கு போட்டி கொடுத்த படம் என்ற வகையில் ஒப்பிட்டு பார்க்கவாயினும் படத்தை பார்க்க வேண்டும்.

சரி அதெல்லாம் போகட்டும், இந்த பரிந்துரையில் 27 படங்கள் போட்டியில் இருந்தன என்பதை ஏற்கனவே சொல்லி இருந்தேன். மதராசப்பட்டினத்தை விடுங்கள் அது ஓரளவிற்கு ஒரு திரைப்பட விழாவில் இடம் பெறத்தக்கவகையில் உள்ள படமே, சிங்கம், இராவணன், விண்ணைத் தாண்டி வருவாயா இதெல்லாம் எப்படி இந்த 27 க்குள் அடங்கியது என்பது தான் புரியாதபுதிர். சிறந்த அந்நிய மொழிப்படம், அதாவது ஆங்கிலமல்லாத சிறந்த திரைப்படம். ஆங்கிலம் பேசுபவர்களுக்கு உலக சினிமா என்ற வட்டத்திற்குள் வரும் படம். நாமும் நிறைய நியோரியலிசம் படங்களை இந்த வகையின் கீழ் பார்த்திருக்கிறோம், இந்தப் படங்களை அந்த வகையின் கீழ் கொண்டு வரமுடியுமா?

இந்தியாவைப் பொருத்தமட்டில் கடந்த வருடம் 24 மொழிகளில் 1288 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, அல்லது தணிக்கை செய்யப்பட்டு இருக்கின்றன. இதிலிருந்து 1 படம் மட்டும் எப்படி இந்தியா சார்பில் போகமுடியும். ஏன் மொழிகளின் அடிப்படையில் பரிந்துரைகள் இருக்கக் கூடாது ஏனெனில் இது சிறந்த அந்நிய மொழித்திரைப்படம் தானே தவிர, சிறந்த அந்நிய நாட்டு படம் என்ற வகை இல்லையே, இருந்திருந்தால் அங்காடித் தெருவையும் சேர்த்து 24 படங்களை அனுப்பி இருக்கலாமே. சரி அதுவும் வேண்டாம் அதிக அளவில் சிறந்த படங்களை எடுக்கும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ்,மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, போன்ற குறிப்பிட்ட மொழிகளில் இருந்தாவது தனித் தனியாக அனுப்பலாமே, இதில் என்ன நடைமுறை சிக்கல் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது.  எல்லா போட்டிகளுக்கும் ஒரு வரைமுறை இருக்கும், கண்டிப்பாக ஆஸ்காருக்கும் அதே வகையில் சில கட்டுபாடுகளும் விதிகளும் இருக்கலாம், ஆனால் சினிமா ஆர்வலர்கள் மொழிகளை அடிப்படையாக வைத்து இந்த பரிந்துரை அமைய ஏதேனும் ஒரு சிறிய அளவில் முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும் என்ற எனது அவாவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

 நன்றி: http://filmfed.org/IFF2009.html

பின்னூட்டங்கள்
 1. premcs23 சொல்கிறார்:

  உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்

 2. Elango சொல்கிறார்:

  நல்ல கருத்து.

 3. anand சொல்கிறார்:

  yeppadinga

  SINGAM, VINAITHANDI VARUVAYA ellam OSCAR kku poga pottiyitutha?

  anand

 4. படைப்பாளி சொல்கிறார்:

  நல்ல சிந்தனை…ஆஸ்கார் தன் விதிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்..
  (சிங்கம் போயிருந்தா நம்ம அனுஷ்கா,ஆஞ்சலினா ஜோலிய காலி பண்ணிருக்கும்…மிஸ் ஆயுடுச்சு நண்பரே…ஹ ஹா..)

 5. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  //அதிக அளவில் சிறந்த படங்களை எடுக்கும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ்,மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, போன்ற குறிப்பிட்ட மொழிகளில் இருந்தாவது தனித் தனியாக அனுப்பலாமே//

  இது மட்டும் சாத்தியமானால் நம் மக்களுக்கு சிறந்த அங்கிகாரம் கிடைக்கும். நல்ல சிந்தனை. பீப்ளி லைவ் படம் பார்க்க வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s