ஜூன் 15 2007 இல் ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 2 ம் நாளை  அனைத்துலக அஹிம்சை நாளாக ஏகமனதாகத் ஏற்றுக்கொண்டு தீர்மானமாக நிறைவேற்றியது. வன்முறையற்ற உலகு அமைய காந்தி அரும்பாடுபட்டதை உலகுக்கு உணர்த்தும் விதமாகவும், அவரை கௌரவப் படுத்தும் விதமாகவும் அக்டோபர் 2 ம் நாளான அவருடைய பிறந்த நாளை சர்வதேச அஹிம்சை நாளாக பிரகடனப்படுத்தியது. தன வாழ்நாள் முழுவதையும் வன்முறையற்ற வழியான அஹிம்சையை  கடைபிடித்து அதன் உன்னதத்தை உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தியின்  கொள்கைகளை  யாவரும் உணரும் விதமாகவும் அஹிம்சையின் மகத்துவத்தை ஒவ்வொருவரும் உணரவேண்டும்  என்ற நோக்கில் இந்த நாளை கொண்டாடவேண்டும் என்றும் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அஹிம்சை, பரந்த மனப்பான்மை, மனிதஉரிமை, சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது முக்கியம் எனவும் அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்றைய உலகில் அஹிம்சை என்பது எந்த அளவிற்கு எடுபடுமோ என்பது தெரியாது, ஆனால் மனிதாபிமானம், மனிதநேயம்  இதெல்லாம் குறைந்து வருகின்ற நிலையில் குறைந்தபட்சம் அஹிம்சை என்றால் என்ன என்றாவது அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லவேண்டியது நம் கடமை ஆகிறது.
 
இந்த பிரகடனத்தை முழுமையாக படிக்க விரும்புவோர் கீழ்கண்ட URL மூலம் அந்த வலை பக்கத்திற்கு சென்று படிக்கலாம்.
 
நன்றி: விக்கிபீடியா
 
பின்னூட்டங்கள்
 1. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  காந்தியின் நாடாகவே இன்றும் இந்தியா வெளிநாட்டினரால் பார்க்கப்படுகிறது. ஆனால் பிராமணனை ஆதரித்தார் என்று இங்கும் சில அமைப்புகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

  காந்தி சொல்லாத துறையில்லை என்று தமிழருவி மணியன் கூறியிருக்கிறார். எல்லோரும் நகரங்களை பற்றி கவலை கொண்ட போது, கிராமம் நாட்டின் முதுகெழும்பு, அதை கவணியுங்கள் என்றார்.

  காந்தியம் என்றால் என்னவென்று மாணவர்கள் அறிந்துகொண்டாலே அனைத்து பிரட்சனைக்கும் தீர்வு கிடைக்கும். அதுவும் அமைதியாக.

  வாழ்க காந்தியம்.

 2. யாழ் சொல்கிறார்:

  காந்தியம் பிறந்த மண்ணில் இன்று கொலை வெறியர் ஆட்சி. இந்தியனே மனதைத் தொட்டுச் சொல் உனக்கு அஹிம்சை தினம் கொண்டாட அருகதை உள்ளதா?

 3. virutcham சொல்கிறார்:

  நல்ல பகிர்வு

 4. king சொல்கிறார்:

  we need only the nation with love………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s