டெல்லி முதல்வர் மீது நியூசிலாந்து தொலைக்காட்சியின் இனவெறி தாக்குதல்

Posted: ஒக்ரோபர் 8, 2010 in அங்கலாய்ப்பு
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , ,
இனவெறி என்பது எல்லா காலங்களிலும், எல்லா நாடுகளிலும் இருந்துகொண்டிருந்த, இருந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை. இனத்தை அடிப்படையாக வைத்து ஒரு நபரையோ அல்லது அந்த இனத்தையோ துவேஷிப்பது அருவருக்கத்தக்க ஒரு விஷயம். சட்டரீதியாக எல்லா நாடுகளிலும் இதற்கு தடையும், கடுமையான தண்டனைகளும் உள்ளன. ஆனால் இப்போது இனத்துவேஷத்தின் உடல்ரீதியான(physical) கொடுமைகள் குறைக்கப்பட்டுவிட்ட நிலையிலும் பேச்சாலும்(verbal) செயலாலும் இனத்துவேஷம் செய்வதை சில இனவெறியர்கள் இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு தற்போது இலக்காகி இருப்பவர் நமது டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்.
 
காமன்வெல்த் விளையாட்டுகளின் மூலம் சுரேஷ் கல்மாடியும், ஷீலா தீட்சித்தும்  களங்கப்பட்டது எல்லோருக்கும் தெரிந்ததே, இந்த விளையாட்டுப் போட்டியை பற்றிய ஒரு நிகழ்ச்சித்தொகுப்பின் ஒளிபரப்பின் போது நியூசிலாந்தில்  தொலைக்காட்சி தொகுப்பாளர் பால் ஹென்றி மூலம் ஷீலா தீட்சித் மேலும் களங்கப்பட்டிருக்கிறார். இம்முறைஅவருடைய பெயரின் உச்சரிப்பை வைத்து அவரை களங்கப்படுத்தி இருக்கிறார்கள்.
 
வழக்கமாகவே தொலைக்காட்சிகள் பெயரின் உச்சரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, அதற்கு நம் இந்திய தொலைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல, வட இந்திய தொலைக்காட்சிகள் தென்னிந்திய பெயர்களை கடித்து துப்புவதை பலமுறை பார்த்திருப்பீர்கள். தென்னிந்தியாவை பொறுத்தவரை  வட இந்திய பெயர்களின் உச்சரிப்பை அவ்வளவு கொலை செய்வதில்லை. அதற்கு முக்கிய காரணம் பிற மொழிகள் மேலோ, பிற இனத்தின் மேலோ பெரிய அளவில் காழ்ப்புணர்ச்சி என்பது நமக்கு கிடையாது, அதனால் மற்றவர் மனதை புண்படுத்தும்படி அல்லது விளங்காத வகையில் உச்சரிக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் உச்சரிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் என்றும் சொல்லலாம். 
 
இந்த பால் ஹென்றி விசயத்தில் உச்சரிப்பு தவறு என்பது மட்டுமல்ல, அவர் அதை வைத்து நிமிடக் கணக்கில் வேடிக்கை செய்தும் இருக்கிறார். ஆங்கிலத்தில் D**K, SHIT என்பது எந்த மாதிரியான வார்த்தைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கீழ்காணும் காணொளியை பார்த்தால் உங்களுக்கே புரியும் அந்த இரண்டு வார்த்தைகளை வைத்து தீட்சித் என்ற பெயரை எப்படி களங்கப்படுத்தி பேசி இருக்கிறார் என்று. இதனால் கடும்  கண்டனத்திற்கு ஆளான ஹென்றி தற்போது பணியிடைநீக்கம்  செய்யப்பட்டிருப்பதாக தகவல்.  இந்திய அரசின் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   
 
 
 

பின்னூட்டங்கள்
 1. thozhilnutpam சொல்கிறார்:

  காலம் மாறினாலும் இனவெறி மாறாது போலிருக்கே!

 2. adhithakarikalan சொல்கிறார்:

  மனித மனங்கள் மாறினால் தான், இதற்கெல்லாம் விடிவு காலம்…

 3. படைப்பாளி சொல்கிறார்:

  கேவலமான நிகழ்வு..கண்டிக்கத் தக்கதுதான்..

 4. Iqbal Selvan சொல்கிறார்:

  நல்ல தகவல்.. ஆனால் நாம் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும்… இந்த நிகழ்ச்சியோ அல்லது தொலைகாட்சி செய்தியில் இப்படி நையாண்டித் தனம் செய்வது நம் இந்தியர்களுக்கு பெரிய விசயமாகஇருக்கலாம் , உடனேயே இதை இன வெறி என்றும் துவேசம் என்று கூறுவது முறையாகாது. இது மேற்கு நாடுகளின் கிழக்கு நாடுகளின் கிளாஷ் என்று தான் சொல்ல வேண்டும். மேற்கு நாடுகளில் ஒருவர் எந்த பதவியில் இருந்தாலும் அவர்களை நையாண்டி செய்வது பேச்சு உரிமையாகின்றது. குறிப்பாக இங்கிலாந்து ராணியாரையும், அமெரிக்க அதிபரையும் நையாண்டித்தனம் பண்ணுவது சர்வ சாதாரணம். ஆனால் அதுவோ நம் நாட்டில் இல்லாத ஒரு வழக்கம். ஆகவே இதனை பார்த்தால் எனக்கு இன துவேசமாக தெரியவில்லை. எதற்கு எடுத்தாலும் மேற்கு நாடுகளை பின் தொடரும் நாம், நையாண்டித் தானத்தையும், பேச்சு உரிமையும் விளங்கி கொள்ள மறுக்கிறோம். நான் மேற்கு நாடுகளுக்கு வக்காலத்து வாங்கவில்லை. நம் இந்தியர்களின் மனப்பாங்கு இன்னும் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இருப்பது வருத்தம். அவர்கள் நம் நாட்டுக்கு வந்து இப்படி நேருக்கு நேர் கிண்டல் அடித்தால் அது ரேசிசம் ஆகும், அல்லது ஒரு இந்தியருக்கு நியுசீலாந்து நாட்டில் அவர் இந்தியர் என்ற ஒரே காரணத்துக்காக மறுக்கப்பட்டு இருந்தாலோ, அல்லது நியுசீலாந்து அதிபர் இப்படி பேசினாலோ அது கண்டிக்கத்தக்கது, அனால் மேற்கு நாடுகளில் பேச்சு உரிமை அதிகமாகும், குறிப்பாக ஸல் நபிகள் நாயகத்தை கூட கிண்டல் அடித்து சர்ச்சை ஆனது தெரிந்தது தானே. வலைப்பதிவில் எழுத வந்தாலே, இத்தகு அனைத்துலக வரன்முறைகளை அறிந்து வைப்பது நலம்.

  ஆனால் ஹென்றியின் இந்த மொக்கைத் தனமான காமெடிக்கு நியூசீலாந்து இனவெறி கொண்ட நாடு என்பது மடமைத் தனமாகும். ஹென்றி செயலுக்கு நேவ்சீலாந்து மனிப்பு கோரிவிட்டது. கல்மாடியா டையான வந்தார் அப்துல் கலாம் அசாத் என்று ஒரு உத்தியோகப்பூர்வ பேட்டியில் தவறிழைத்தது இனவெறி ஆகுமா.. சொல்லுங்கள்.

  • adhithakarikalan சொல்கிறார்:

   நீங்கள் இவ்வளவு பெருந்தன்மையான நபராக இருப்பதில் மகிழ்ச்சி, நையாண்டித் தனத்திற்கும் ஒரு வரைமுறை உண்டு. உங்களுக்கு டிக்,ஷிட் என்ற வார்த்தைகள் சாதரணமாக இருக்கலாம். மேற்கத்திய நாடுகளில் கூட F*** என்ற வார்த்தையை F word என்று தவறான வார்த்தை என்ற முறையில் அதை குழந்தைகளோ சமூகத்தில் பெரிய நிலையில் உள்ளவர்களோ பயன்படுத்தினால் கண்டனம் கூறுவர். வேடிக்கை செய்வது என்பது வேறு, ஒரு சமூகக் குறியீடு உள்ள பெயரை இப்படி நையாண்டி செய்வதை இனவெறி கொண்ட செயல் என்று தான் பார்ப்பவர்கள் கூறுவர், நீங்களே கூறுகிறீர்கள் நியூசிலாந்து அரசு மன்னிப்பு கேட்டது என்று; தவறு என்று தானே மன்னிப்பு கேட்டனர். அவர்கள் ஒப்புகொள்கின்றனர் அனால் நீங்கள் பெருந்தன்மையாக இருகின்றீர் நல்லது. மேலும் அப்துல் கலாம் ஆசாத் என்றது தவறுதான் ஆனால், அவர் ஒரு முறை சொன்னாரா? பல முறை சொன்னாரா? என்பது எனக்கு தெரியாது, கண்டிப்பாக பெயரை வைத்து கேலியோ, நையாண்டியோ செய்திருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். அப்படி இருந்தால் அதுவும் கண்டனத்திற்கு உரியதுதான். வார்த்தை உச்சரிப்பு எப்போதாவது தவறாவது இயற்கை அந்த உரையாடலின் போதே மன்னிப்பு கோரினால் யாரும் அந்த தவறை பெரிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். பால் ஹென்றியை வைத்து நான் நியூசிலாந்து மக்களை எடை போடவில்லை. இந்த காணொளியை கண்ட யூ டுயூப் வலைதளத்திலேயே அந்த நாட்டு பிரஜை ஒருவர் ஹென்றியை கண்டித்து யாரும் எங்கள் நாட்டு மக்களை தவறாக நினைக்கவேண்டாம் என்று தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

   தங்களின் வருகைக்கும், விரிவான மறுமொழிக்கு மிக்க நன்றி

   • இக்பால் செல்வன் சொல்கிறார்:

    தோழருக்கு வணக்கம், நம் இந்தியர்கள் பெருந்தன்மையானவர்கள் தான்…. எமது கருத்து மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை காட்டவே. நியுசீலாந்து நாடு மிகவும் கண்ணியமான ஒரு தேசம், ஆஸ்திரேலியா போன்ற இன துவேசம் இங்கு குறைவு, நியுசீலாந்துக்கு பல முறை சென்றுள்ளேன், நியுசீலாந்து அனைவரின் உரிமைகளையும் இந்தியரையும் மதிக்கும் நாடு.. அதனால் உடனேயே மன்னிப்பும் கோரியுள்ளது. ஆனால் நம் இந்தியாவில் சில மரியாதைக் கட்டுப்பாடுகளுக்கு அதிக இடம் கொடுக்கிறோம். உதா. கருணாநிதி, ஜெயலலிதா, ரஜினிகாந்த், என்று விளிக்கும் போது அய்யா, அம்மா, சார், என்று பத்திரிக்கைகள் எழுதுவது முறையல்ல…… இந்தியாவில் எதனையும் , யாரையும் விமர்சிக்க, நையாண்டி செய்யும், மனப்பாங்கு வரல் வேண்டும் அது தான் என் சித்தம்…

    இந்த ஹென்றியின் செயல் மொக்கைத்தனமான் நையாண்டி அவருக்கு ஆப்பாகிவிட்டது….

 5. செல்வராஜ் சொல்கிறார்:

  தான் ஒரு பொறுப்பற்ற பொறுக்கி என்பதை வெளிச்சமிட்டு காண்பித்துள்ளான்.

 6. துளசி கோபால் சொல்கிறார்:

  ப்ரேக் ஃபாஸ்ட் ஷோவில் வரும் இந்த பால்ஹென்றி என்ற மனிதருக்கு வாய்க்கொழுப்பு அதிகம். ஏற்கெனவே கடந்த சில வருடங்களில் இன்னும் பலரை இப்படியெல்லாம் கிண்டல் செஞ்சு வாரிக் கட்டிக்கிட்டும் இன்னும் புத்தி வரலை:(

  இப்ப அவரை வேலையைவிட்டுத் தூக்கியாச்சு.

  நடந்த சம்பவத்திற்கு நியூஸி குடிமகள் என்ற முறையில் என் வருத்தத்தைப் பதிவு செய்கிறேன்.

  வெள்ளைக்கார ஸர்நேம்களுக்கு நாமும் கிண்டல் எவ்வளவோ செய்யலாம். ஆனால் அது நமது நாகரீகமில்லை.

  • adhithakarikalan சொல்கிறார்:

   //வெள்ளைக்கார ஸர்நேம்களுக்கு நாமும் கிண்டல் எவ்வளவோ செய்யலாம். ஆனால் அது நமது நாகரீகமில்லை// உங்கள் கூற்று உண்மை தான். நன்றி உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு…

 7. மாசிலா சொல்கிறார்:

  வீடியோ மிக்க அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன இது? இவ்வளவு கேணைத்தனமாக உள்ளதே! இப்படி போன்ற முட்டாள்களும் அங்கு இருக்கிறார்களா? விக்கியில் நியூ ஜீலேண்ட் பக்கம் சென்று அவர்களது வரலாரை கொஞ்சம் பார்த்தேன். 1642 முதலே அங்கு போய் குடியிருக்கும் இது போன்ற வந்தேறி நாதாரிகளுக்கு எவ்வளவு திமிர் பாருங்கள்!

  அவன் எதை தொடர்பு வைத்து கிண்டலடிக்கிறானோ, அதிலிருந்தே அவன் எந்த மாதிரியன ரகம் என்று நம்மால் சரிவர யூகித்துக்கொள்ள முடிகிறது.

 8. M.S.Vasan சொல்கிறார்:

  Paul laughed, but the world laughed at him.
  He should know the proper pronouncing before sitting front of the camera.

 9. இக்பால் செல்வன் சொல்கிறார்:

  தங்களின் வலைத்தளம் தமிழி திரட்டியில் இணைக்கப்ப்ட்டுள்ளது. தொடந்து பல நல்ல எழுத்துக்கள் உங்களிடம் இருந்து வர விரும்பிகிறோம்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s