தெரியுமா? ஓசோன் என்பது ஆக்சிஜனின் இன்னொரு வடிவம்!

Posted: ஒக்ரோபர் 12, 2010 in தெரியுமா ?
 
ஓசோன் படிவத்தைப் பற்றி நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம் சமீப ஆண்டுகளாக, சரி இந்த ஓசோன் என்பது என்ன தெரியுமா? 
 
உண்மையில் ஓசோன் என்பது ஆக்சிஜன் தான், அப்புறம் எதற்கு இதை ஓசோன் என்று கூறுகிறார்கள். ஏன் என்றால் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் போல் இது இல்லை, நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனுக்கு 2 மூலக்கூறுகள் கொண்ட இணைப்பு. அதாவது o2 , ஒசோனுக்கு 3 மூலக்கூறுகள் கொண்ட இணைப்பு  அதாவது o3 உண்மையில் இது நம் உடலுக்கு ஒரு மாசு, இது நமக்கும், விலங்குகளுக்கும் மூச்சுக் கோளாறை உண்டாக்க கூடியது.  இந்த வாயுவை முகர நேர்ந்தால் தலைவலியும், கண் எரிச்சலும், மூச்சுக்குழல் அரிப்புணர்வும் உண்டாகும். காற்றின் ஊடே மின்சாரம் பாயும்போது ஓசோன் உண்டாகும் என்று கூறுகின்றனர். மோட்டார் ஓடும்போது ஒரு வித துர்நாற்றம் உண்டாகுமே இது ஒசானால் உண்டாவதே.  இந்த ஓசோன் எனும் வார்த்தை கிரேக்க மொழியில் நாற்றம் என்னும் பொருள் படும். 
 
வெப்பநிலை -112 °செ இல் இது கரிய நீல நீர்மமாக மாறுகின்றது. இன்னும் கீழான வெப்பநிலையில் -193 °செ இல் கருமை மிக்க கத்தரிப்பூ நிறத்தில் திண்மமாக மாறுகின்றது. இப்படி தின்ம நிலையில் பஞ்சு போன்ற நிலையில் தான் வளிமண்டலத்தின் மேல் இது காணப்படுகிறது. இதன் சிறப்பம்சமே சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களை புவியின் வளிமண்டலத்திற்குள் வராமல் தடுப்பது அல்லது குறைப்பது. 
 
இந்தப் படலத்தில் ஓட்டை அதிகமாகிக் கொண்டே போவது தான் பெரிய பிரச்சனையாக   சொல்கிறார்கள். அது நமக்கு ஒவ்வாத புற ஊதாக்கதிர்களை நம் மீது திணித்து  புற்றுநோய் முதலான நோய்களை உண்டாக்கும். 
 
பின்னூட்டங்கள்
 1. Thozhilnutpam சொல்கிறார்:

  நல்ல தகவல்!

 2. படைப்பாளி சொல்கிறார்:

  அருமையானத் தகவலைத் தந்தீர்கள்..நன்றி

 3. MSK சொல்கிறார்:

  Now the hole is gonna be disappear soon at the end of 2053 or something.I read it from some science article….

 4. எஸ். கே சொல்கிறார்:

  அருமையான அறிவியல் பதிவு! ஓசோன்இல் ஓட்டை விழ ஃபிரிட்ஜ், ஏசி போன்றவறவை முக்கிய காரணமாம்!

 5. Thanigasalam சொல்கிறார்:

  மசிறப்பாக விளக்கியிருக்கின்றீர்கள். ஆனால அந்த o2, o3 மூலக்கூறுகள் எவை என்று கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

 6. nalavirumbi சொல்கிறார்:

  நல்ல தகவல். ஓசோன் , ஆக்சிசன் நல்ல விளக்கம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s