ரஜினி, சிவாஜி படத்துல சொல்வாரே, பெயரைக் கேட்டாலே அதிருதுள்ளனு, அது போல சில்க் பெயரைக் கேட்டாலே இன்னும் சில பேருக்கு கிளுகிளுப்பா தான் இருக்கும். சரி அவர் காலமாகி 14 ஆண்டுகள் கழிந்து இப்போ என்ன அவரைப்பற்றி பேச்சு, காரணம் இருக்கே அவருடைய வாழ்கையை அடிப்படையாக வைத்து படம் தயாராகிக்கொண்டு இருக்கிறது தெரியுமா? முன்னாபாய்MBBS படத்துல நடிச்ச வித்யாபாலன் சில்க் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். 

வித்யாபாலன் இதுவரை நடித்த படங்களில் ஆபாசமாகவோ, கவர்ச்சிகரமாகவோ நடித்ததில்லை, இவரை எப்படி சில்க் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை, இதிலிருந்தே இந்தப் படம் சில்க்கின் கவர்சிகரமான பட வாழ்கையை தவிர்த்து அவரது வாழ்கையை மையப்படுத்தி இருக்கும் என்பது தெளிவாக புரிகிறது. இந்தப் படத்தை சின்னத்திரையில்  தொடர்களை தயாரித்து பெரும் புகழை அடைந்த பாலாஜி டெலிபிலிம்ஸின்   ஏக்தா கபூர் தயாரிக்கிறார்கள்.  இந்தியாவின் சின்னத்திரை வரலாற்றில் ஏக்தா கபூருக்கென்று ஒரு தனி இடம் உண்டு, ரசிகர்களை தொலைக்காட்சியின் முன் கட்டிப்போட்ட பல தொடர்களை இவர் தயாரித்து இருக்கின்றார்.

சரி இப்போ சில்க் பற்றி பார்ப்போம், சில்க் ஆந்த்ராவில் பிறந்தவர், இவருடைய இயற்பெயர் விஜயலக்ஷ்மி, நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். சினிமாவில் சேர வேண்டும் என்ற முனைப்பில் சென்னையை வந்து அடைந்தார். வண்டிசக்கரம்  என்ற படத்தில் முதன் முதலாக சில்க் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு  முன்பே அவருடைய பெயரை சுமிதா என்று மாற்றிக் கொண்டார். வண்டிசக்கரம் படத்திற்கு பின் சில்க்சுமிதா ஆனார். இந்தப் படத்திற்கு பின் அவருக்கு பல வாய்புகள் வந்து தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டி பறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்ற இவரது வாழ்கை ஹாலிவுட்டின்  மர்லின் மன்ரோவினை ஒத்து இருப்பதாக கூட சொல்வார்கள். இவர் நடித்த மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை, மூன்று முகம், கைதி, லயனம் போன்ற படங்கள் இன்றளவும் பேசப்படும் படங்கள்.

ஆண்களை மட்டுமில்லாமல் பெண்களையும் கவர்ந்தவர் சில்க், இன்று எல்லா நடிகைகளும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள், அன்றைய கால கட்டத்தில் உள்ள நடிகைகள் 5 லிருந்து 10 வருடங்களுக்குள் தனது அழகை இழந்து விடுவார்கள், உடல் எடைபற்றிய போதிய அறிவு, உணவு பழக்கவழக்கம் உடலை எப்படி பாதிக்கும், உடற் பயிற்சி மூலம் உடலை எப்படி பாதுகாப்பது இப்படி பல விசயங்களில் சில்க் தென்னிந்திய நடிகைகளுக்கு ஒரு முன்னோடி. 

1996 இல் சில்க் தனது இல்லத்தில் இறந்து கிடந்த செய்தி சினிமா வட்டாரத்திலே பல அதிர்வுகளை  ஏற்படுத்தியது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது எனது கணினி வரைகலை படிப்பிற்காக பிரசாத் ஸ்டுடியோவிற்குள் அப்போது இருந்த வெக்டார் இன்ஸ்டிடுயிடில்  பயின்று கொண்டிருந்தேன், அந்த சமயம் சில்க்கின் இறப்புசெய்தி  கோடம்பாக்கத்தில் இண்டு இடுக்கில் எல்லாம் பேசப்பட்டது, அவருக்காக  அனுதாபப்படாத  ஆட்களே இல்லை. சில்க் சுமிதா பொருளாதார நெருக்கடியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கேள்விப்பட்டு சினிமா ரசிகர்கள் எல்லோருமே தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டனர்.

இந்தப் படத்தில் ரசிகர்கள் விரும்புகிற கவர்ச்சியோடோ, ஆபாசமாகவோ  நடிக்கமாட்டேன்  என்று ஏற்கனவே வித்யா பாலன் அறிவித்திருக்கும் நிலையில் இந்த படம் இப்போதே பலரின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. உங்களைப் போல் நானும் இந்தப் படத்தின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

பின்னூட்டங்கள்
 1. எஸ். கே சொல்கிறார்:

  புதிய தகவல். அவர் மிக கவர்ச்சியாக நடித்தவர்தான். ஆனால் சில படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நன்றாக நடித்திருப்பார். அவரின் வாழ்க்கைக்கு பின் ஏதோ மர்மம் உள்ளது என பல செய்திகள் வந்துள்ளன. படம் வரட்டும். காத்திருப்போம்.

 2. படைப்பாளி சொல்கிறார்:

  ஆண்களை மட்டுமில்லாமல் பெண்களையும் கவர்ந்தவர் சில்க், /////

  சில்க் னா சும்மாவா??..சமீபத்தில் கூட ஓர் தோழியுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சியில் சில்க் பாடலைப் பார்த்த அவர் பெரும்மூச் செறிந்தார்..என்னே உடலமைப்பு..போதையேற்றும் பார்வைஎன!!சில்க் இடத்தை யாரும் பிடிக்க முடியாதுன்னு..ஆண்களை விட பெண்களுக்கு அவர் மீது கிக் அதிகம் என்பதை அப்போதான் அறிந்தேன்..
  ஹ்ம்ம்..படத்தை நானும் எதிர்ப் பார்த்துட்டு இருக்கேன்.

 3. Annu சொல்கிறார்:

  எனக்கென்னமோ அந்த கவர்ச்சியையும் தாண்டி ஒரு இன்னொஸன்ஸி தென்படும். அதற்காகவே அவரை மிக சுவாரசியமாக கவனிப்பேன். படம் வெளி வரும்போது அவரின் வாழ்க்கையின் உண்மைகளையும் காட்டுமா என்பதே எதிர்பார்ப்பு. மற்றபடி பார்த்தால் ‘பா’ படத்தில் வித்யாபாலன் சிறிது கவர்ச்சி காட்டியது போலத்தான் தெரிந்தது!!

  • adhithakarikalan சொல்கிறார்:

   அவரது இன்னொஸன்ஸிக்கு முக்கியக்காரணம் அவரது குரல்… ஹிந்தி நடிகைகள் பலரை ஒப்பிட்டுப் பார்க்கும் போது வித்யாபாலன் அவ்வளவு கவர்ச்சி காட்டுபவறல்ல… நீங்கள் சொல்வது போல “பா” படத்தில் சில காட்சிகள் இருப்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

 4. thozhilnutpam சொல்கிறார்:

  சில்க் ஸ்மிதா அனைவரையும் கவர்ந்த Evergreen Heroine! கண்டிப்பாக அவரின் வாழ்கை வரலாறை பற்றிய திரைப்படம் வெற்றியை பெரும் என நம்பலாம்!

 5. tkp.ghopal சொல்கிறார்:

  வணக்கம்
  சில்க்ஸ்மிதா பற்றிய படம் வருவதை அறிந்து மிக மகிழ்ச்சி.
  கீழே கொடுத்துள்ள படத்தை பற்றிய உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
  The Invention Of Lying

  நன்றி.

 6. கோவில்பட்டி ராஜ் சொல்கிறார்:

  ஒருமுறை சில்க்ஸ்மிதா அளித்த பேட்டியில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் ஒன்றில் நான் நடிக்க வரவில்லை என்றால் தீவிரவாதி ஆகி இருக்கும் வாய்ப்பு அதிகம் என்று பதில் அளித்து இருந்தார் .அவ்வளவு வறுமையால் பாதிக்க பட்டதாக கூறியிருந்தார்

 7. kanaga raju சொல்கிறார்:

  எல்லா நடிகைகளின் வாழ்வும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் போன்றே வருத்தங்களும், ஏமாற்றங்களும் நிறைந்தது. கவர்ச்சி நடிகைகளின் வாழ்க்கையில் கொஞ்சம் கூடுதல் வருத்தம் இருக்கிறது.
  இதனால்தான் மர்லின் மன்றோ முதல் சில்க் வரை பலரும் மரணத்தை ஆசையுடன் தழுவிக் கொள்கிறார்கள். porno-வில் நடிப்பது மிகவும் சிரமமானது. அதற்கு அடுத்து கவர்ச்சியாக நடிப்பது. ரசிகர்கள் நாயகனின் பராக்கிரமங்களை பார்த்து அதிசயித்து, சில்க போன்றவர்களை கண்டு காமுற்று திரும்புவான் அவ்வளவுதான். ரசிகன் முதல் சுற்றி இருக்கும் வேலைக்காரன் வரை அனைவரும் அவர்களை காமுற்றே பார்க்க தோன்றும். வெறும் சதைப்பிண்டமாக அனைவராலும் அனுகப்படுவதை விரும்பாது யார்மீதான காதலில் விழுவார்கள். அதுவும் ஏமாற்றமானால் அவர்களின் உடல் மீது வெறுப்பு வரும்.
  எல்லா மனிதர்களின் மனதின் திரைகளை விலக்கி பார்த்தால் உன்மையான நேசிப்பிற்காகத்தான் ஏங்குவான். அது இவர்களுக்கு கிடைப்பது அரிது. எனவே ஏமாற்றங்கள் அதிகரிக்க இறுதியில் தனக்கென ஒரு முடிவை தேடிக்கொள்வார்கள்.
  சில்க்கை சதைப்பிண்டமாக பார்த்து பழகிய நம்மவர்களுக்கு, அவர் மீதான பரிவை உண்டாக்கினால்அதுவே இந்தப்படத்தின் வெற்றியாக இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s