திருவையாறு P ராஜலக்ஷ்மி  , இவர் தான் தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இவர் தான் முதல் பெண் இயக்குனர் என்று கூறுகிறார்கள்.

ராஜலக்ஷ்மி 1911 இல் திருவையாறில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர், இவரது தந்தை ஒரு குருக்கள். இவருக்கு 11 வயது இருக்கும் போது திருமணம் ஆனது, துரதிர்ஷ்டவசமாக இவரது மன வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னமே முடிந்து விட்டது. வரதட்சனை கொடுக்க முடியாத காரணத்தினால் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்தார்.  இதனால் மனமுடைந்த இவரது தகப்பனார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு ராஜலக்ஷ்மி அவரது தாயாருடன் திருவையாறை விட்டு வெளியேறினார். நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்

படத்தில் TP ராஜலக்ஷ்மி அவர்களுடன் சிறுவயது TR மகாலிங்கம்

புகழ்பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் குழுவில் இனைந்து நாட்டியம், சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றார்.  1931 இல் காளிதாஸ் என்ற படத்தில் கதாநாயகியாய் நடித்த பிறகு இவர் புகழின் உச்சிக்கு சென்றார். இந்த திரைப்படம் தமிழின் முதல் பேசும் படம் என்று அறியப்படுகிறது. முன்னதாக இவர் 1929 லேயே திரையுலகில் காலெடுத்து வைத்தவர், கோவலன் என்ற பேசாத படத்தில் நடித்திருக்கிறார். காளிதாஸ் திரைப்படத்திற்கு பிறகு இவர் அந்நாளைய சூப்பர் ஸ்டார்களாகிய கிட்டப்பா, தியாகராஜ பாகவதர் போன்றவர்களுடன் இனைந்து நடிக்கும் அளவிற்கு பெரிய நடிகையானார். 

 
காந்தியவாதியான இவர் இந்தியத் தாய் என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்தார், அங்கிலேயர் ஆட்சியில்  தணிக்கையில் சிக்கிய இத்திரைப்படம்  வெளிவராமலே போனதாக தகவல். இருப்பினும் தன்னாலான அளவில் சுதந்திர போராட்டத்தில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். மிஸ். கமலா என்ற திரைப்படம் மூலம் இவர் 1936 இல் இயக்குனர் ஆனார். 1929 முதல் 1950 வரை இவர் 23 திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இவற்றில் மிஸ் கமலா, மதுரை வீரன் ஆகிய படங்களில் இவர் நடித்தும் இயக்கியும் இருக்கிறார்.
 
 
இவர் நடித்த திரைப்படங்கள்:
 
01 கோவலன் 1929
02 ராஜேஸ்வரி 1930
03 உஷா சுந்தரி 1930
04 காளிதாஸ் 1931
05 சாவித்திரி சத்யவான் 1933
06 பூர்ண சந்திரா 1935
07 லலிதாங்கி 1935
08 பக்த குசேலா 1935
09 குலே பகாவலி 1935
10 பாமா பரிணயம் 1936
11 சீமந்தினி 1936
12 மிஸ் கமலா 1936
13 கவுசல்யா  பரிணயம் 1937
14 அனாதை பெண் 1938
15 மதுரை வீரன் 1938
16 நந்தா குமார் 1938
17 தமிழ் தாய் 1939
18 சுகுணா சரஸா 1939
19 பக்த குமரன் 1939
20 உத்தமி 1943
21 பரஞ்சோதி 1945
22 ஜீவஜோதி 1947
23 இதய கீதம் 1950
 
பின்னூட்டங்கள்
 1. அன்பு சொல்கிறார்:

  அந்த காலத்திலேயே ஒரு பெண் இந்த அளவுக்கு ஜெயிக்க முடிஞ்சுருக்கா தமிழ் சினிமாவில.. பெரிய விஷயம்தான்..
  பகிர்வுக்கு நன்றி‌..

 2. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  பிரமணர்கள் பெண்களை மிகவும் அடக்கி வைத்திருந்ததாக சொல்லியே கேள்வியுற்றிருக்கிறேன். அவர்களின் கட்டுப்பாடுகளை உடைத்தெரிந்து விட்டு நாடகங்கள், படங்கள் என எல்லையற்று சாதனைகள் புரிந்தது வியப்புதான்.

  நன்றி நண்பா.

 3. படைப்பாளி சொல்கிறார்:

  நல்ல தகவல்..அருமை

 4. அதிகாலை நவின் சொல்கிறார்:

  வணக்கம்.
  அற்புதமான அரிய தகவல்களை அள்ளித் தந்திருக்கிறீர்… பாராட்டுக்கள். இதுபோன்ற தகவல்களை எமது அதிகாலை http://www.adhikaalai.com இணையத்தோடு பகிர்ந்து கொண்டால் உலகம் முழுவதிலுமுள்ள எமது வாசகர்கள் படித்துப் பயனடைவார்கள். தொடர்ந்து அதிகாலையிலும் தாங்கள் எழுதலாமே! விருப்பமிருப்பின் எழுதுங்கள் : editor@adhikaalai.com

  வாழ்த்துக்களுடன்
  அதிகாலை நவின், அமெரிக்கா

 5. Ananth Shandilya சொல்கிறார்:

  என் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, ராஜலக்ஷ்மி அவர்களின் வாழ்க்கை. தன்னம்பிக்கை, மன திடம், மன உறுதி,திடமான நோக்கம்,சாதனை வெறி,நினத்தை சாதிப்பது, கனவுகளை நனவாக்குவது ஆகிய உயர்ந்த பண்புகளை, அவர் வாழ்க்கை, பாடம் புகட்டுகிறது.

  மனித வளமேன்பாடு பயிற்சிக்கு ஒரு நல்ல உதாரணம்

 6. subha சொல்கிறார்:

  hello every one,

  Thanx for sharing such good info abt my grand mother and my grand father T.P. Rajagopaln was the music director for home production movies. I wanted to share that too with you all..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s